சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு வந்த சோதனை! முதல் கணவர் குடும்பத்துடன் நேருக்கு நேர் மோதும் முத்து! மெகா ட்விஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் 'சிறகடிக்க ஆசை', ஒவ்வொரு வாரமும் எதிர்பாராத திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. தற்போது, குடும்பப் பெண்கள் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்ற நிலையில், நவம்பர் 7 மற்றும் 8ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம், ரோகிணியின் பெரிய ரகசியம் உடைபடுமா இல்லையா என்ற ஆவல் அதிகரித்துள்ளது.
மீண்டும் விஜயாவின் பாசவலை
ஆரம்பத்தில் ரோகிணியை 'பணக்கார மருமகள்', 'மலேசியா மருமகள்' என்றெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்த விஜயா, ரோகிணி பணக்கார பொண்ணு இல்லை என்ற உண்மை தெரிந்ததும், அவர் மீது கோபத்தை கொட்ட தொடங்கினார். அதுவரை பாசமாக நடந்து கொண்ட விஜயா, அதன் பிறகு திமிராகவும், கோபமாகவும் நடந்து கொண்டார்.
மீண்டும் பாசம்
ஆனால், கடந்த வாரத்தில் மீனா மூலமாக மனோஜுக்கு கிடைத்த பெரிய ஆர்டர், தன்னால் தான் கிடைத்தது என்று ரோகிணி போட்ட நாடகத்தை நம்பி, விஜயா மீண்டும் ரோகிணி மீது பாசம் காட்ட தொடங்கி இருக்கிறார். அதோடு மனோஜ் மற்றும் ரோகிணி இருவருக்கும் முதல் இரவுக்கான ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார்.
ரகசியம் உடைபட போகிறதா
இப்படியான நிலையில் தான், இப்போது ரோகிணிக்கு ஏற்கனவே கல்யாணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கு என்ற உண்மையும், முத்துவின் மூலமாக தெரியவர போகிறது என்பது போலக் கதை நகர்கிறது. ரோகிணியின் முதல் கணவரின் அண்ணன் குடும்பத்தினர், ரோகிணியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றுச் சென்னைக்கு வந்திருக்கின்றனர்.
முத்து தான் டிரைவர்
அப்போது முத்து தான் அவர்களுக்கு கார் ஓட்ட போகிறார் என்று முருகன் ஏற்பாடு செய்திருந்தார். இந்த உண்மைகள் வித்யா மூலமாக ரோகிணிக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் எப்படியாவது முத்து அவர்களை சந்திக்க விடாமல் செய்ய வேண்டும் என்றுப் பிளான் போட்டு ஊருக்கேக் கிளம்பி போயிருக்கிறார். அவர் நினைத்தது போலவே அண்ணாமலையை கவனித்துக் கொள்வதற்காக முத்துவும் வீட்டிலேயே தங்கியிருக்கிறார்.

வைரலாகும் ப்ரோமோ ட்விஸ்ட்
தற்போது வெளியான ப்ரோமோவில், முத்துவுக்கும் ரோகிணியின் முதல் கணவர் குடும்பத்திற்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் பெரிய ட்விஸ்டாக உள்ளது. முத்து தான் ரோகிணியின் முதல் கணவரின் அண்ணன் மற்றும் அவருடைய மனைவியை காரில் கூட்டிக்கொண்டு போகிறார். அப்போது, தாங்கள் தன்னுடைய தம்பி மனைவிக்கு செய்த துரோகத்தால் தான் தங்களுக்கு குழந்தை இல்லை என்று அவர்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

அதற்கு முத்து, "அப்போ நீங்க ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக் கலாமே?" என்று கேட்கிறார். அவர்கள், "என்னுடைய தம்பியின் மகன் இருக்கிறான்" என்று செல்போனில் இருக்கும் போட்டோவை காட்டுகிறார்கள். ஏற்கனவே, இது போலத்தான் ரோகிணியின் கல்யாண போட்டோவை வித்யாவிடம் காட்டியிருந்தனர். அதேபோல, இப்போது முத்துவிடம் அந்தக் குழந்தையின் போட்டோவை காட்டினால், உண்மைகள் உடைபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனால், அடுத்த வாரம் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் ஒரு பெரிய சம்பவம் காத்திருக்கிறது என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications