சிறகடிக்க ஆசையில் நாளை.. விஜயா மனோஜை தாக்கிய "கர்மா” இது தேவைதான்! முத்து பிளான் சக்சஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜயா மற்றும் மனோஜ்க்கு சரியான தண்டனை கிடைக்கிறது‌. அதே நேரத்தில் முத்து போட்ட பிளானால் இப்போது குடும்பத்திற்கு நிம்மதியும் கிடைத்திருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று விரிவாக பார்க்கலாம்.

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் தன்னுடைய ஷோரூம் கடனுக்காக வீட்டு பத்திரத்தை குடும்பத்திற்கு தெரியாமல் பைனான்சியரிடம் அடகு வைத்திருந்தார். அப்போது அண்ணாமலையின் கையெழுத்தை கூட மனோஜ் போட்டு இருந்தார். இது ஏற்கனவே நடந்து முடிந்த விஷயம் தான். ஆனால் சிந்தாமணி மீனா தனக்கு கொடுத்த டார்ச்சரால் இப்போ இதை வைத்து தான் பிரச்சனை செய்திருக்கிறார்.

அதாவது பைனான்சியரை வைத்து அண்ணாமலையின் வீட்டை ஜப்தி செய்வதற்காக நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். எப்படியாவது இதை தடுத்துவிட வேண்டும் என்று முத்துவும் மீனாவும் முயற்சி செய்தனர். ஆனால் கடைசியில் முடியாமல் போய்விட்டது. இன்னும் பத்து நாட்களுக்கு கோர்ட்டு லீவு என்பதால் முத்துவும் மீனாவும் வீட்டை ஜப்தி செய்வதற்கு ஆட்கள் வருவதற்கு முன்பு நாமே வீட்டை விட்டு காலி பண்ணி போய் விடுவோம் பிறகு கோர்ட்டில் பார்த்துக் கொள்ளலாம் என்று ஐடியா கொடுத்திருந்தனர்.

முத்து கொடுத்த ஐடியா

அதன்படி மீனா வீட்டில் எல்லோரும் தங்கலாம் என்று பிளான் போட்டனர் ஆனால் விஜயா என்னால் அந்த வீட்டில் வந்து தங்கவே முடியாது என்று சீன் போட்டார். உடனே ஸ்ருதி எங்க வீட்டுக்கு வாங்க என்று கூட்டிக்கொண்டு போயிருக்கின்றனர். அண்ணாமலை நான் மீனா வீட்டுக்கு போறேன் என்று போயிருக்கிறார். மனோஜ்க்கு அவருடைய ஷோரூமில் தங்க சொல்லி அனுப்பிவிட்டனர்.

Siragadikka Aasai serial Vijay TV

அசிங்கப்பட்ட விஜயா

இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் வீட்டுக்கு போன விஜயாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைக்கிறது. இன்றைய எபிசோடிலேயே ஸ்ருதியின் அப்பா அண்ணாமலை ரொம்ப நேர்மையானவர். ஆனால் அவருக்கு இப்படி ஒரு மோசக்கார பையன் பிறந்திருக்கிறானே... பொய் கையெழுத்து போட்டு வீட்டு பத்திரத்தை வைத்து கடன் வாங்கி இருக்கிறான்.. என்றெல்லாம் பேச விஜயாவால் எந்த பதிலும் சொல்ல முடியாமல் விஜயா தலை குனிந்து உட்கார்ந்திருந்தார்.

விஜயாவுக்கு வந்த பிரச்சனை

பிறகு விஜயாவுக்கு பிளாக் டீ கொடுக்க அதை குடிக்க முடியாமல் இருந்தார். இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் ஸ்ருதி வீட்டு சாப்பாடை சாப்பிட முடியாமல் விஜயா தவித்துக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் மனோஜ் ஷோரூமில் எலி தொல்லையால் தவித்துக் கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் வீட்டில் சகல வசதியுடன் இருந்த இரண்டு பேருக்கும் இப்போ நல்லா தண்டனை கிடைத்திருக்கிறது.

Siragadikka Aasai serial Vijay TV

இனி நடக்கும் சம்பவம்

அதே நேரத்தில் அண்ணாமலை மீனா வீட்டில் எல்லோருடைய கவனிப்பாலும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார். இதற்கிடையில் சிந்தாமணி வீட்டை சீல் வைப்பதற்காக அதிகாரிகளை கூட்டுக் கொண்டு வந்திருந்தார் ஆனால் வீட்டில் யாரும் இல்லாததால் சிந்தாமணிக்கு ஏமாற்றமாக போய்விட்டது. இந்த குடும்பத்தில் எல்லோரும் இருந்து மீனாவும் முத்துவும் என் காலில் விழுந்து கெஞ்சுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இந்த முத்து எல்லாரையும் கூட்டிட்டு போய்ட்டானே என்று புலம்பிக்கொண்டு போயிருக்கிறார். இனி முத்து சொன்ன தேதியில் பணத்தை ரெடி செய்து கொடுத்து மீண்டும் எல்லோரையும் வீட்டுக்கு கூட்டிட்டு போவார் அப்புறம்தான் விஜயாவுக்கு மீனாவின் அருமை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+