சிறகடிக்க ஆசை சீரியலுக்கு பிறகு மாறிய வாழ்க்கை.. தோனியோடு நடிக்கும் போது நடந்த சம்பவம்.. ரேவதி பாட்டி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் பாட்டி கேரக்டரில் நடித்துக் கொண்டிருப்பவர் ரேவதி. இவர் சிறுவயதில் இருந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு பிரேக் விட்டு இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பல வருடங்களுக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌனராகம் என்ற சீரியல் மூலமாக தமிழில் அறிமுகமாகி இருந்தார்.
அதைத் தொடர்ந்து தமிழும் சரஸ்வதியும், பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை என்ற பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டியில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ் சினிமா வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதோடு சமீபத்தில் இவர் கிரிக்கெட்டர் மகேந்திர சிங் தோனியோடு எடுத்த புகைப்படம் இணையத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தனக்கு எப்படி அந்த வாய்ப்பு கிடைத்தது என்பதை பற்றியும் பேசி இருக்கிறார். அந்த வகையில் அவர் பேசுகையில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் எனக்கு நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்துச்சு. ஆனா அதுக்கு சிறகடிக்க ஆசை சீரியலுக்குப் பிறகு பயங்கரமான ரீச் கிடைச்சிருக்கு. அந்த சீரியலில் நடித்த பிறகு என்னால் தெருவில் கூட நடந்து போக முடியவில்லை. அந்த அளவில் எனக்கு ரீச் கிடைச்சிருக்கு.
தமிழும் சரஸ்வதியும் சீரியல் பண்ணும் போது டைரக்டர் அடுத்த சீரியலில் ஒரு நல்ல கேரக்டர் இருக்குன்னு சொன்னாரு. நான் அப்ப கூட, எல்லா சீரியலிலும் நாம பாட்டி கேரக்டரில் தான் நடிக்க போறோம்னு நினைச்சிருந்தேன். பிறகு சிறகடிக்க ஆசை சீரியலின் முதல் நாள் சூட்டிங்கில் என்னுடைய பேரன் என்னை தூக்கி சுத்துற மாதிரி சீன் வச்சு எடுத்திருந்தாங்க. அப்போ அந்த பையன் வேகமா தூக்கி சுத்திட்டாரு. எனக்கு கண்ணு சொருகிடுச்சு.
அதற்கு பிறகு தான் சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த கேரக்டர் மற்ற கேரக்டர் மாதிரி இல்ல ரொம்ப சுறுசுறுப்பாக இருக்கிற மாதிரியான பாட்டி என்று எனக்கு புரிந்தது. அதற்கு பிறகு சக்திவேல், பாக்கியலட்சுமி என்று பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். எல்லாமே ஒரே மாதிரி இல்லாமல் வித்தியாசமா இருக்கிறது. அதுபோல நான் மகேந்திர சிங் டோனியோடு நடித்த விளம்பர படத்தை பற்றி வெளியே போகும் இடமெல்லாம் எல்லோரும் கேள்வி கேட்குறாங்க.
அந்த படத்தில் நான் நடிப்பது முதலில் உறுதியாகாமல் தான் இருந்தது. அதற்காக ஆட்டிஷன் முடியுற வரைக்கும் நான் செலக்ட் ஆவேன்னு எனக்கு நம்பிக்கையே இல்ல. ஏன்னா நான் நிறைய ஆடிசன் பண்ணி நல்ல நல்ல கம்பெனி எல்லாம் மிஸ் ஆயிருக்கு. ஆனாலும் யாராவது ஆடிசன் கூப்பிட்டாங்கன்னா அதை தவிர்க்காமல் நான் போய் பண்ணுவேன். அப்படித்தான் இந்த விளம்பரத்திற்கும் ஆடிசன் போனேன்.
நைட் 10 மணிக்கு போன் பண்ணி நீங்க செலக்ட் ஆகிட்டீங்கன்னு சொன்னாங்க. அதை வீட்டில் சொன்னதும் எல்லோருமே ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. அதற்கு பிறகு தான் இது எவ்வளவு பெரிய வாய்ப்பு என்று எனக்கே தெரிந்தது. வீட்டில் எனக்கு சொந்த மகனோ அல்லது மகளோ இல்லை. ஆனால் என்னுடைய அண்ணன் பசங்க எல்லாரும் என் கூட தான் இருக்காங்க. எங்க குடும்பம் பெரிய குடும்பம்.
எல்லாருமே நான்தான் உங்களுக்கு துணையாக வருவேன் என்று அந்த விளம்பரத்தில் நடிக்க போவதற்கு போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள். அது எனக்கு மறக்க முடியாத அனுபவம். அதுபோல தோனியோடு நடிக்கும் போது அவரிடம் பேசுவதற்கு எனக்கு சரியா வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரிடம் புகைப்படம் எடுத்ததும் அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரிய பரபரப்பு ஏற்படுத்தி விட்டது என்று ரேவதி பாட்டி கூறியிருக்கிறார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications