சிறகடிக்க ஆசை: மீனாக்காக மனம் மாறிய சத்யா.. மாட்டிக்கொண்ட ரோகிணி.. அதிர்ச்சி கொடுத்த விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 19ஆம் தேதிக்கான எபிசோடில் மீனாவை சிட்டி அடித்துவிட்டார் என்பதை தெரிந்ததும் சத்யா சிட்டியிடம் சண்டை போட்டு மனம் மாறி இருக்கிறார். ஆனால் ரோகிணி சிட்டியிடம் வசமாக சிக்கி கொள்கிறார். அதுபோல விஜயாவின் மனமாற்றத்தை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி ஆகின்றனர்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனாவின் நிலைமையை நினைத்து அவருடைய அம்மா அழுது கொண்டிருக்கும் போது, அந்த நேரத்தில் வீட்டிற்கு சத்யா வருகிறார் சத்யாவிடம் உன்னால் தான்டா இவ்வளவு பிரச்சனை. ஏற்கனவே உங்க அப்பாவை கொன்னுட்ட, நாங்க உயிரோட இருக்கிறது உனக்கு பிடிக்கலையா? என்று அடித்து அழுது கொண்டிருக்க, அதற்கு சத்யா என்னாச்சும்மா என்ன பிரச்சனை கேட்க, நீ சிட்டி கூட சேர்வது தான் பிரச்சனை.

சிகரெட் குடிக்கிற பழக்கம் உனக்கு வந்ததுக்கு காரணம் அந்த சிட்டி தான்னு மீனா அவனை கேட்கப்போனா. அவன் மீனாவை தள்ளிவிட்டு இருக்கான். இப்போ அவளுக்கு அடிபட்டதற்கு ஹாஸ்பிடலில் இருக்கிறா என்று அழுது கொண்டு மீனாவின் அம்மா சீதாவிற்கு ஃபோன் போட்டு வீட்டிற்கு கூப்பிடுவதற்குள் சத்தியா வேகமாக சிட்டியை பார்க்கப் போகிறார்.
சிட்டியிடம் ஏன் இப்படி பண்ணின? எங்க அக்காவ எதுக்கு அடிச்ச? என்று கேட்க எல்லாருக்கும் முன்னாடியும் உங்க அக்கா என்னை மரியாதை இல்லாம பேசினா. அதனாலதான் அடிச்சேன் என்று சொல்ல ஆயிரம் இருந்தாலும் அவங்க என்னோட அக்கா அவங்கதான் என்னை வளர்த்தாங்க. அவங்ககிட்ட வந்து மன்னிப்பு கேளு என்று சொல்ல, நான் என்னுடைய மரியாதையை விட்டுக் கொடுத்துவிட்டு வர முடியாது என்று சிட்டி சொன்னதும் இதோட நம்மளுக்குள் இருந்த பிரண்ட்ஷிப் முடிந்துவிட்டது. இனி நீ என்னை தேடி வராத, நானும் உன்னை தேடி வர மாட்டேன் என்று சத்தியா கோபமாக கிளம்பி விடுகிறார்.

பிறகு மீனாவிற்கு ஸ்கேன் எடுத்து பார்த்துவிட்டு எந்த பிரச்சனையும் இல்லை என்று டாக்டர் சொல்கின்றனர். குடிக்க ஏதாவது கொடுங்க என்று சொன்னதும் முத்து ஜூஸ் வாங்க போகிறார். அந்த நேரத்தில் மீனாவின் குடும்பத்தினர் வருகின்றனர். மீனா தலையில் இருக்கும் கட்டை பார்த்து அவருடைய அம்மா சீதா என எல்லோரும் பதறுகின்றனர். அதற்கு மீனா ஒன்னும் இல்லமா என்று சமாதானம் செய்து கொண்டிருக்கிறார்.
அப்போது சீதாவும் மீனாவின் அம்மாவும் சத்யாவை அடித்து உன்னால் தான் இத்தனை பிரச்சனையும் என்று சொல்கின்றனர். அதற்கு சத்யா மீனாவிடம் என்னால தாங்க எல்லாருக்கும் பிரச்சனை. இனிமே நான் எந்த தப்பும் பண்ண மாட்டேன். நான் அவன் கூட இனி சேர மாட்டேன். இப்ப கூட நேரடியா போய் அவனை திட்டிட்டு தான் வந்து இருக்கேன். அவன் இப்படி பண்ணுவான் என்று நினைக்கல.

நீ எங்களுக்காக பண்ணுனதை நான் மறக்கல என்று அழுது கொண்டு இருக்க குடும்பத்தினர் எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். இதை எல்லாம் முத்து ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார். பிறகு முத்து மீனாவை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வர அண்ணாமலை மீனா தலையில் கட்டு போட்டு இருப்பதை பார்த்து என்ன ஆச்சு என்று கேட்க, மீனா உண்மையை சொல்ல வந்ததும் அதை தடுத்து இல்லை கீழே விழுந்துட்டா என்று முத்து சமாளிக்கிறார்.
அந்த நேரத்தில் விஜயா வந்து என்ன ஆச்சு ஏன் தலையில் கட்டு போட்டு இருக்க என்று கேட்க வண்டியில் போகும்போது விழுந்துட்டா என்று முத்து சொன்னதும் எப்பவும் பணம் சம்பாதிக்கிறதுலையே இருந்தா இப்படி தான். வாய் மட்டும் பேசுற ஒழுங்கா வண்டி ஓட்ட முடியலையா? என்று கேட்டு இப்போ எப்படி இருக்கு என்று விஜயா அக்கறையா கேட்டதும் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அது மட்டும் இல்லாமல் நீ சமைக்க வேண்டாம் நானே சமைச்சுகிறேன் என்று விஜயா கிச்சனுக்கு போக அண்ணாமலை இவா எந்த நேரத்தில் எப்படி இருக்கான்னு தெரியலையே என்று சொல்கிறார். பிறகு முத்து மீனாவிற்கு கஞ்சி எடுத்துக்கொண்டு ஊட்டி விடுகிறார். அப்போது நீ எதுக்கு சிட்டியை பார்க்க போன என்று கேட்க, சத்யா கெட்ட பழக்கத்தை கத்துக்கும் போது என்னால பாத்துட்டு சும்மா இருக்க முடியல என்று சொல்ல அதற்கு முத்து நான் அப்போ சொல்லும்போதெல்லாம் உங்களுக்கு தெரியலையா என்று கேட்கிறார்.

பிறகு உன் தலையில் ரத்தத்தை பார்த்ததும் எனக்கு உசுரே போயிடுச்சு என்று முத்து கண்கலங்க மீனாவும் அழுகிறார். இனிமே இப்படி பண்ணாதே என்று முத்து அட்வைஸ் செய்கிறார். மறுபக்கத்தில் ரோகிணி சிட்டியை வந்து சந்தித்து அவருடைய பழைய பிஏ தினேஷ் மிரட்டுவதை பற்றி சொல்ல, அதற்கு நான் உங்களுக்கு ஒரு உதவி செய்கிறேன் என்றால் நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும். உங்க அத்தை நகைகளை திருடிட்டு போனது சத்யா தான். அந்த வீடியோ முத்து ஃபோனில் இருக்கிறது.
அதை நீங்கள் சோசியல் மீடியாவில் போடணும் என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சியாகி நிற்கிறார். ரோகினி இப்போது சிட்டி இடம் மாட்டி இருக்கிறார். ஏற்கனவே பிரச்சனை செய்து கொண்டிருந்த சதியாவும் விஜயாவும் இன்று மனம் மாறி இருக்கும் நிலையில் இந்த வீடியோ இனி வெளியாகும் போது விஜயா மீண்டும் பழையபடி மீனா குடும்பத்தை பற்றி திட்டுவார். முத்துக்குக்கும் அது பிரச்சினையாகும். இனி என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications