சிறகடிக்க ஆசை: மீனாவிடம் செருப்பு தைக்கும் தாத்தா சொன்ன அதிர்ச்சி தகவல்! சத்யாவால் முக்கிய திருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 21ம் தேதிக்கான எபிசோடில் முத்துவையும் மீனாவையும் கொலை செய்ய வேண்டும் என்று சிட்டி முயற்சி செய்து இருந்த நிலையில் நூலிழையில் தப்பி இருக்கின்றனர். ஆனால் சத்யா முழுவதுமாக மனமாறி இருக்கிறார். ரோகிணியால் புதிய பிரச்சனை வர இருக்கிறது.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனாவும் முத்துவும் ஸ்கூட்டியில் சென்று பூ விற்று முடிக்கின்றனர். அதனால் நீங்கள் வந்ததால சீக்கிரமா வேலை முடிஞ்சிடுச்சு என்று மீனா சொன்னதும் முத்து அதுக்குத்தானே நானே வந்தேன். என் பொண்டாட்டி கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியுமா? என்று இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

television siragadikka aasai serial vijay tv

பிறகு மீனா ஒரு ஹோட்டலுக்கு போங்க என்று சொல்ல, நான் ஹோட்டலுக்கு தான் போறேன் என்று முத்து சொல்கிறார். அதற்கு என்னங்க நான் மனசுல நினைக்கிறதை அப்படியே நீங்க செய்றீங்க என்று அதிர்ச்சியோடு மீனா கேட்க, அதுதான் பொண்டாட்டி மேல வச்சிருக்க பாசம்னு சொல்றது என்று முத்து சொல்கிறார். பிறகு செருப்பு தைக்கும் தாத்தா பாட்டி இருவருக்கும் சாப்பாடு வாங்கிக் கொண்டு போக அவர்கள் இருவரும் ஜோடியாக வருவதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.

அப்போது மீனா இவர் என்னுடைய புருஷன் தான் பாட்டி என்று சொல்ல, அந்த பாட்டி உனக்கு மட்டும் நல்ல மனசு இல்லம்மா உன் புருஷனுக்கும் நல்ல மனசு தான். ரெண்டு பேரும் நல்லா இருப்பீங்க என்று விபூதி எடுத்து வைத்து விடுகிறார். அப்போது தாத்தா நான் காலையிலேயே மீனாவை இன்னைக்கு பார்த்து விட மாட்டோமா என்று யோசித்துக் கொண்டே இருந்தேன் என்று சொன்னதும் என்ன ஆச்சு தாத்தா என்று மீனா கேட்க, அது ஒன்னும் இல்லம்மா நீ என் கனவுல வந்த என்று தாத்தா சொல்கிறார்.

அதற்கு முத்து நல்ல விஷயம் தானே என்று சொல்கிறார். அதற்கு தாத்தா நீ என் கனவுல வந்து அழுதுட்டே இருந்தம்மா. என்னன்னு கேட்டாலும் எதுவும் சொல்லாமல் அழுதுகிட்டே இருந்தே. அது மனசுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. அதனாலதான் காலையில் எழுந்து பிள்ளையார் கோவிலில் போய் உனக்காக வேண்டிக்கிட்டு விபூதி வாங்கிட்டு வந்தேன் என்று சொல்கிறார். இதனால் மீனா மீண்டும் குழப்பம் ஆகிறார்.

television siragadikka aasai serial vijay tv

ஏற்கனவே ரோகிணி கோயிலில் மீனாவிற்கும் முத்துவிற்கும் நல்ல நேரம் இல்ல அவங்களுக்கு பிரச்சனை வரப்போகுது என்று சொல்லி இருக்கும் நிலையில் அதையும் நினைத்து பார்க்கிறார். பிறகு சாப்பாட்டை கொடுத்துவிட்டு முத்துவும் மீனாவும் கிளம்புகின்றனர். அப்போது மீனா சோகமாக இருப்பதை பார்த்து முத்து என்னாச்சு என்று கேட்க, மீனா பயமா இருக்கு ஏதாவது ஆகிடுமோ என்று குழப்பமா இருக்கு என்று சொல்ல ஏன் என்னாச்சு? தாத்தா சொன்னதை போட்டு குழப்பிக்காத என்று முத்து கூறுகிறார்.

மறுபக்கத்தில் சத்யாவும் அவருடைய நண்பரும் ஒரு டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருக்கின்றனர். அந்தப் பக்கமாக வந்த சிட்டி அதை பார்த்து சிட்டி உடன் இருக்கும் நபரிடம் காசு கொடுத்து அனுப்புகிறார். சத்யா டீ குடித்ததற்கு அந்த நபர் காசு கொடுத்ததும் எதற்காக நீ கொடுக்கிற என்று சத்யா கேட்க, அண்ணன் கொடுத்தால் வாங்க மாட்டியா என்று அவர் கேட்க, எனக்கு உன்னை விட அவரை பத்தி நல்லாவே தெரியும்.

நான் டீ குடிக்க கூட காசு இல்லாமல் இருக்கிறேன் என்று சொல்லி காமிக்கறதுக்காக கொடுக்கிறார். நான் நல்லா படிச்சு வேலைக்கு போய் சம்பாதிக்கிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போய் விடுகிறார். உடனே சிட்டி ரோகிணிக்கு போன் போட்டு முத்து போனில் இருக்கும் வீடியோ என்ன ஆச்சு என்று கேட்க அதற்கு ரோகிணி அதை எடுக்குறதுக்கு தான் ட்ரை பண்ணிட்டு இருக்கிறேன் என்று சொல்கிறார்.

அதற்கு சிட்டி நீங்க இதை செஞ்சாதான் நான் உங்களை மிரட்டுறவனை தட்டி வைப்பேன் என்று சொல்கிறார். அடுத்த கட்டத்தில் முத்துவும் மீனாகவும் ஒரு டீக்கடையில் பூவை கொடுத்துவிட்டு அங்கு டீ குடித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது அவர்கள் இருவரும் சந்தோஷமாக பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து சிட்டி பொறாமைப்படுகிறார்.

television siragadikka aasai serial vijay tv

என்னை அவமானப்படுத்திட்டு இவங்க நிம்மதியா இருக்கக்கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது முத்துவும் மீனாவும் பைக்கில் கிளம்ப சிட்டி காரை எடுத்துக்கொண்டு இவர்கள் மீது மோதி விட்டு போகணும் என்று வேகமாக பின்னாடியே வருகிறார். அப்போது ஒரு இடத்தில் இதை கவனித்த முத்து ஒதுங்கி நிற்க பைக்கில் லேசாக இடித்து விட்டு சிட்டியின் கார் வேகமாக போய்விடுகிறது.

அதற்கு முத்து மீனாவை இறங்க சொல்லி நான் அந்த காரில் இருப்பது யாருன்னு பாத்துட்டு வரேன் என்று சொல்ல மீனா எவனாவது குடிச்சிட்டு போவானா இருக்கும் என்று சொல்ல முத்து குடிச்சிட்டு இப்படி வண்டி ஓட்டலாமா என்று திட்டிக் கொண்டிருக்கிறார். பிறகு இருவரும் வீட்டிற்கு வருகின்றனர் அப்போது தாங்கள் அன்று சம்பாதித்த பணத்தை சேர்த்து வைக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+