ரோகினிக்கு ஆப்பு வைத்து சவால் விட்ட விஜயா.. முத்து கேட்ட கேள்வி.. அம்பலமான உண்மை.. பரபரப்பின் உச்சம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் செப்டம்பர் 23 ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

இதில் ரோகினி பற்றி எந்த உண்மையையும் தெரியாமல் விஜயா ரோகிணி மீது நம்பிக்கை வைத்து பண விஷயத்தில் சவால் விடுகிறார்.

siragadikka aasai serial September 23th promo and Episode Highlights

இதனால் அண்ணாமலை கடும் கோபத்தில் இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்

அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் அண்ணாமலை, முத்து, மனோஜ், ரவி என நான்கு பேரும் பைனான்ஸ்காரரிடம் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு விஜயாவை வீட்டிற்கு கூட்டிட்டு வருகின்றனர். வீட்டிற்கு வந்ததும் விஜயா நைசாக நழுவி ரூமிற்கு போய்விடலாம் என்று முயற்சி செய்ய, அதற்கு எங்க போறீங்க தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை கொடுக்கணும் இங்கே நில்லுங்க என்று முத்து சொல்கிறார்.

siragadikka aasai serial September 23th promo and Episode Highlights

அதோடு அக்யூஸ்ட் கோர்ட்டுக்கு போகணும் என்று சொல்லி டைனிங் டேபிளை கொண்டு கூண்டு போல ரெடி செய்து அதற்குள் விஜயாவை நிற்க வைக்கிறார். அண்ணாமலையை நீதிபதியாக சேரில் உட்கார வைத்து 17 லட்சம் ரூபாய் எங்கே என கேட்க சொல்கிறார். அதைத்தொடர்ந்து அண்ணாமலையும் விஜயாவிடம் கேள்வி கேட்க, அதற்கு விஜயா முக்கியமான செலவு ஒன்று இருந்தது என்று சொல்லி சமாளிக்க முயற்சி செய்கிறார். அது என்ன செலவு என்று எல்லோரும் துருவித் துருவி கேள்வி கேட்கின்றனர்.

அப்போது விஜயா கல்யாண விஷயமா என்று சொல்ல, மீனா கோவில்ல தானே கல்யாணம் நடந்துச்சு? அதுக்கா 17 லட்சம் செலவாச்சு? என்று கேள்வி கேட்க, அதற்கு விஜயா முறைத்து பார்க்கிறார் அதை பார்த்த அண்ணாமலை மீனா கேட்கிறது சரிதானே? அதுக்கு அவ்வளவு செலவாகி இருக்காது என்று கூறுகிறார்.

siragadikka aasai serial September 23th promo and Episode Highlights

அதைத்தொடர்ந்து ரவி ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்க அப்பா கிட்ட பணம் கேட்கக்கூடாது என்று நான் லோனுக்கு ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன். நீங்க 17 லட்சம் ரூபாயை கல்யாணத்துக்கு வாங்கின மாதிரி தெரியல, வேற ஏதோ பெருசா செலவு பண்ணி இருக்கீங்க என்று கேள்வி கேட்க, பிறகு விஜயா வேறு வழி இல்லாமல் ரோகினிக்கு பியூட்டி பார்லர் ஆரம்பிப்பதற்காக 10 லட்சம் ரூபாய் பத்திரத்தை வைத்து பணம் வாங்கி கொடுத்ததாக உண்மையை போட்டு உடைக்கிறார்.

அதை கேட்டதும் கோபமான முத்து ஓ லிஸ்ட்ல இந்த பிராடும் இருக்கா? என்று ரோகினியை நக்கல் செய்து திட்டுகிறார். இதனால் ரோகிணி கோபப்பட, அதற்கு முத்து எங்க வீட்டு பணத்துல பியூட்டி பார்லர் ஆரம்பிச்சுட்டு சத்தம் போடுறா? என்று கேள்வி கேட்டு திட்டுகிறார். அதைத் தொடர்ந்து அண்ணாமலையும் நீ என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே என்று ரோகிணியை கேள்வி கேட்க ரோகினி பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்து நிற்கிறார்.

siragadikka aasai serial September 23th promo and Episode Highlights

அதைத்தொடர்ந்து மீனா ரோகினியை பார்த்து சத்யா மீது பழி போட்ட விஷயத்தை பற்றி மீண்டும் சொல்ல அதற்கு விஜயா கோபப்படுகிறார். அதற்கு முத்து அது என்ன அந்த பொண்ணுக்கு மட்டும் பணம் வாங்கி கொடுத்து இருக்கீங்க. மீனாக்கு கூட தான் கோயம்பேட்டில் பெரிதாக பூக்கடை வைக்கணும்னு ஆசை. அவளுக்கு ஒரு பத்து லட்சத்துல பூக்கடை வச்சு கொடுங்க, எனக்கு ஒரு பத்து லட்சம் குடுங்க ரவிக்கு ஒரு பத்து லட்சம் குடுங்க என்று கேள்வி கேட்கிறார்.

இதனால் முத்து கேட்ட கேள்விக்கு கோபப்படும் விஜயா உங்களுக்கு ரோகினி பத்தி தெரியல. அவளுக்கு இதெல்லாம் பிஸ்கட் சாப்பிடுற மாதிரி என்று சொல்ல, முத்து மீனாவிடம் பத்து லட்சத்துக்கு எல்லாம் பிஸ்கட் இருக்கா? என்று நக்கல் செய்கிறார். பிறகு இன்னும் ஒரு வாரத்தில் இந்த 17 லட்சம் ரூபாய் பணத்தை கொடுக்கிறேன். அதுவும் ரோகினி கொடுப்பா என்று விஜயா சவால் விட ரோகிணி அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+