சிறகடிக்க ஆசை: முத்துவின் போனை எடுத்த ரோகிணி.. அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை.. உடைபட்ட ரகசியம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 23ஆம் தேதிக்கான எபிசோடில் முத்துவின் போனில் இருக்கும் சத்யாவின் வீடியோவை ரோகிணி பார்த்து விடுகிறார். ஆனால் அண்ணாமலை மனோஜ்க்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்து மீனாவின் மடியில் படுத்துக்கொண்டு இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அடுத்த நாள் காலையில் ரோகிணி சத்யா திருடிய விஷயத்தை முத்து மறைத்திருக்கிறானே? இந்த வீடியோ மட்டும் லீக் பண்ணிட்டா பிஏ விஷயத்தைச் சிட்டிப் பார்த்துப்பான். இவங்க கிரிஷை தத்தெடுக்க மாட்டாங்க என்று பிளான் போட்டு முத்து போனை எடுக்க முயற்சி செய்கிறார்.

மறுநாள் காலையில் தூங்கிக் கொண்டிருந்த முத்து எழுந்து செல்ல, அந்த நேரம் பார்த்து ரோகிணி போனை எடுக்க வர உடனே முத்து வந்து விடுகிறார். பிறகு சார்ஜ் போட்டு விட்டு குளிக்க போக ரூமுக்குள் போன ரோகிணி போனை எடுத்ததும், முத்து மீனா என்று கூப்பிட மீனா என்னவென்று உள்ளே வந்ததும் ரோகிணி கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்கிறார்.
பிறகு மீனா டவலை கொண்டு வந்து கொடுத்துவிட்டு போக விஜயா போன் பேசி அப்படியே ரூமிற்குள் வந்து விடுகிறார். பிறகு விஜயா வெளியே போகவும் முத்து குளித்துவிட்டு வந்துவிடுகிறார். மறுபடியும் முத்து மீனாவை கூப்பிட்டு தலை துவட்ட சொல்கிறார். அந்த நேரத்தில் கட்டிலுக்கு அடியில் இருந்த ரோகிணி வீடியோவை தேடுகிறார். அப்போது மனோஜ் ரோகிணியை வீடு முழுக்க தேதி அலைந்து கொண்டிருக்கிறார்.
பிறகு விஜயாவிடம் ஒரு 500 ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்க, விஜயா என்னிடம் பணமே கிடையாது அப்பாவிடம் கேளு என்று சொல்ல அண்ணாமலை வந்ததும் அவரிடம் முதலில் 500 ரூபாய் இருக்கா என்று கேட்டதும் அவர் 300 ரூபாய் தான் இருக்கு என்று சொல்ல சரி கொடுப்பா என்று சொல்கிறார். அதற்கு அண்ணாமலை சாயங்காலம் தரேன் என்று சொன்னதும், முத்து கேட்டா கொடுப்பீங்க நான் கேட்டால் தருவீங்களா என்று சென்டிமெண்டாக மனோஜ் பேச அதற்கு அண்ணாமலை அவன் என்னிடம் பணமே கேட்க மாட்டான் என்று சொல்லிவிடுகிறான்.

இதனால் கோபமாக மனோஜ் நீங்க யாரும் பணம் தர வேண்டாம் நான் ரோகிணியிடம் வாங்கிக் கொள்கிறேன் என்று தேடிக் கொண்டு முத்து ரூமிற்கு வர முத்து நான் இங்கே இருக்கும்போது பார்லர் அம்மா எப்படிடா இங்க வரும் என்று திட்டி அனுப்பி விடுகிறார். அந்த நேரத்தில் ரோகிணிக்கு சத்யாவின் வீடியோ கிடைத்து விடுகிறது. ஆனால் அதை அவருடைய போனுக்கு அனுப்புவதற்கு முன் போன் ஸ்விட்ச் ஆப் ஆகிறது.
இதனால் கடுப்பான ரோகிணி வெளியே வர முடியாமல் கட்டிலுக்கு அடியிலேயே ஒளிந்து இருக்கிறார். பிறகு முத்து மீனாவிடம் நீயே எனக்கு ஊட்டி விடு என்று சொல்லி இருவரும் ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். இதை பார்த்து ரோகிணி கடுப்பாகிறார். அந்த நேரத்தில் முத்து மீனாவிடம் போனை எடுத்துக் கொடு என்று சொல்ல, அங்க போனே இல்லையே என்று மீனா சொல்கிறார்.

நான் இங்கதான் சார்ஜ் போட்டேன் என்று முத்து சொல்ல, நான் போய் வெளியே பார்க்கிறேன் என்று கட்டிலில் செக் பண்ணி பார்க்கிறார் அங்கேயும் போன் இல்லாததால் முத்து வெளியே வந்து பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ரோகிணி கட்டிலில் இருந்து வெளியே வந்து போனை வைத்து விட்டு மாடிக்கு சென்று விடுகிறார். அப்போது அங்கு வந்த மனோஜ் ரோகிணி இவ்ளோ நேரம் எங்க போயிருந்தாய் என்று கேட்க மாடிக்கு போயிருந்தேன் தலை ஈரமா இருந்தது அதை காய வைக்க போயிருந்தேன் என்று சமாளிக்கிறார்.
பிறகு மீண்டும் ரூமுக்குள் சென்று தேடியே மீனா அங்கிருந்த போனை எடுத்துக் கொடுக்கிறார். உங்களுக்கு வயசாயிடுச்சு அதனால ஞாபகம் மறதி வந்துடுச்சு என்று கிண்டல் செய்கிறார். மறுபக்கத்தில் ரவி சூப்பர் மார்க்கெட்டில் இருக்க அங்கு அவருடைய பாஸ் மகள் நித்து வருகிறார். ஹோட்டலுக்காக சில பிளேட்ஸ் வாங்கணும் புது டிசைன்ஸ் அட்ராக்டிவா இருக்கணும் என்று சொல்லி இருவரும் பிளேட்ஸ் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த நேரம் அதை ஸ்ருதியின் அம்மா ரவியையும் அந்த பெண்ணையும் பார்த்து விடுகிறார். ஸ்ருதியின் அம்மாவை பார்த்ததும் ரவி பாஸ் மகளிடம் இதுதான் என்னுடைய மாமியார் என்று அறிமுகம் செய்கிறார். பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு ரவியும் பாஸ் மகளும் சென்று விட ஸ்ருதியின் அம்மா ஸ்ருதிக்கு போன் செய்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications