சிறகடிக்க ஆசை: நல்ல செய்தி சொன்ன மீனா.. சந்தோஷத்தில் விஜயா.. பல்டி அடித்த அண்ணாமலை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 24ஆம் தேதிக்கான எபிசோடில் மீனா வீட்டில் கொலு வைக்க வேண்டும் என்று ஆசைப்பட அதற்கு விஜயா முதலில் சம்மதிக்காத நிலையில் அண்ணாமலை விஜயாவை சம்மதிக்க வைத்திருக்கிறார். மறுபக்கத்தில் ஸ்ருதியின் அம்மா ஸ்ருதி மற்றும் ரவிக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்திக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் சீதா பூக்கடையில் பூ கட்டி கொண்டிருக்கிறார். அப்போது அவருடைய அம்மா நீ வேலைக்கு போ நான் பாத்துக்குறேன் என்று சொல்ல, நான் போய் கம்ப்யூட்டர் முன்னாடி தான் இருக்க போறேன் நீ தான் இன்னைக்கு முழுக்க நின்னுக்கிட்டே இருப்ப நான் கட்டி வச்சுட்டு போறேன் என்று பூ கட்டிக்கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் சத்யா வந்து காலேஜுக்கு போயிட்டு வரேன் என்று சொல்லி கால் வலி இப்போ எப்படி இருக்கிறது என்று கேட்கிறார்.

அதற்கு மீனாவின் அம்மா அதெல்லாம் எனக்கு நல்லா இருக்கு. நீ இதே மாதிரி இரு. எனக்கு இதுதான் சந்தோஷம் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா வருகிறார். மீனாவிடம் சத்யா காலேஜுக்கு போறேன் என்று சொல்லிவிட்டு கிளம்ப மீனா பணம் கொடுக்க, அதை சத்யா வாங்க மறுக்கிறார். பின்பு வலுக்கட்டாயமாக பையில் வைத்து விடுகிறார். அப்போது கோவிலில் ஒருவர் இந்த வருடம் என்னால் கொலு வைக்க முடியாது என்பதால் அதற்கான பிரசாதம் செய்ய ஆள் தேவைப்படுகிறது என்று பூசாரியிடம் சொல்ல அவர் மீனாவை கூப்பிட்டு சொல்கிறார்.
மீனாவின் அம்மா பிரசாதம் செய்ய சரி என்று அட்வான்ஸ் பணத்தை வாங்கி கொள்கிறார். அப்போது நீங்கள் கொலு வைக்கிறீர்களா என்று மீனாவிடம் கேட்க, அதற்கு அந்த பழக்கம் எங்கள் வீட்டில் இல்லைமா என்று மீனா சொன்னதும், கல்யாணம் ஆகாதவங்களுக்கு கல்யாணம் ஆகும் குழந்தை பிறக்காதவங்களுக்கு குழந்தை பிறக்கும். நீ குழந்தை பிறக்கும் என்று நினைத்து கொலு வை என்று அம்மா சொல்கிறார். அதற்கு மீனா நான் வீட்டில் கேட்டு சொல்றேன் என்று சொல்கிறார்.
மீனாவின் அம்மா அதுவும் நல்ல விஷயம்தான் என்று சொல்கிறார். அடுத்ததாக மீனா கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்கும் நேரம் முத்து வந்து மீனாவை கட்டி பிடிக்க வர மீனா கத்தியுடன் திரும்புகிறார். இதனால் ஷாக் ஆகி அந்த கத்தியை கீழே வாங்கி வைத்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது முத்துவிடம் கொலு வைக்கும் ஆசையை சொல்ல அதற்கு முத்துவும் சம்மதித்து விடுகிறார்.
பிறகு இதை அத்தை கிட்ட சொல்லிடுங்க என்று மீனா கேட்க, ஆமா நான் சொன்னா மட்டும் உடனே சம்மதித்துருவாங்க பாரு. நான் சொன்னதுனாலே அவங்க ஒத்துக்க மாட்டாங்க என்று முத்து சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு ஸ்ருதியை வைத்து சொல்லலாம் என்று சொல்ல ஸ்ருதி என்னால எப்படி பூஜை பண்ண முடியும் என்று யோசிக்கிறார். உடனே முத்து இந்த வீட்டின் தலைவர் கிட்டேயே கேட்கலாம். அப்பாவிடம் பேசலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அண்ணாமலை வீட்டிற்குள் வருகிறார்.
அவரிடம் கொலு வைக்கும் விஷயத்தைப் பற்றி சொல்ல, அதற்கு அவர் உனக்கு உங்க அம்மாவை பற்றி தெரியாதா? அவ என்னைக்கு என் பேச்சை கேப்பா...? சரி நான் போய் கேட்கிறேன் என்று எழுந்து வர விஜயா வெளியே வருகிறார். அந்த நேரத்தில் ரோகிணி வீட்டிற்குள் வருகிறார். விஜயாவிடம் கொலு வைப்பது பற்றி பேச, கொலு வச்சு அவங்க ரெண்டு பேரும் ஏறி உட்கார்ந்து இருப்பார்களா என்று விஜயா நக்கல் அடிக்க, அதற்கு முத்து ஆமா அப்பா சொன்னா நாங்க உட்கார்ந்து கொள்வோம் என்று பதில் கொடுக்கிறார்.
அப்போது ரோகினி நம்ம வீட்ல கொலு வைக்கிற பழக்கம் இருக்கா என்று கேட்க அதெல்லாம் இல்லைமா இவங்கதான் புதுசு புதுசா பழக்கம் சொல்றாங்க என்று சொல்கிறார். அதற்கு ரோகிணி விதவிதமா செஞ்சு சாப்பிடணும் என்று நினைக்கிறீங்களா மீனா என்று கேட்க, அதற்கு முத்து சுண்டல் வேணும்னா நாங்க பீச்சில போய் சாப்பிட்டு போவோம் என்று பதில் கொடுக்கிறார். பிறகு விஜயா கொலு வைக்க நிறைய செலவாகும் என்று சொல்ல அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம் என்று மீனா சொல்கிறார்.
அண்ணாமலை விஜயாவிடம் நம்ம வீட்டிலயும் நல்ல விசேஷம் நடக்கணும் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுறியே வச்சிடலாம் என்று சொல்ல விஜயா யோசிக்கிறார். பிறகு டெய்லியும் பூஜை பண்ணனும், பாட்டு எல்லாம் பாட்டு சொல்ல அண்ணாமலை நீ தான் சூப்பரா பாட்டு பாடுவியே என்று ஐஸ் வைக்கிறார். அதனால் விஜயா சரி என்று சொல்லி விடுகிறார். இதைக் கேட்டு மீனாவும் முத்துவும் சந்தோஷப்படுகின்றனர்.
மறுபக்கத்தில் ஸ்ருதி டப்பிங் செய்யும் இடத்திற்கு வந்த அவருடைய அம்மா ரவியை உன் கண்காணிப்பில் வச்சுக்கோ என்று பயமுறுத்துகிறார். ஆனால் ஸ்ருதி ரவி பற்றி எனக்கு தெரியும் நீ எதுவும் பேச வேண்டாம் போ என்று அங்கிருந்து விரட்டி விடுகிறார். அடுத்ததாக விஜயா பார்வதி வீட்டிற்கு வந்து கொலு பொம்மை வைக்கிற விஷயத்தை சொல்ல அதற்கு பார்வதி கொலு யாரு வச்சா என்ன அது விஜயா வீட்டில் வெச்சிருக்காங்க என்று தானே சொல்லுவாங்க. கொலு வைக்கிறதால உன் வீட்டில் நல்லது நடந்தா உனக்கு சந்தோஷம் தானே என்று சொல்ல விஜயாவும் சந்தோஷப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications