சிறகடிக்க ஆசை: மீனா கர்ப்பமா? ஸ்ருதி சொன்ன வார்த்தை.. டான்ஸ் கிளாஸில் விஜயாவுக்கு வந்த பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 25ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் மீனா கொலு வைப்பதால் அவருக்கு ரோகிணியும் உதவிக்கு வருகிறார். ஆனால் விஜயா டான்ஸ் கிளாஸில் அங்கு இருக்கும் இரண்டு காதலர்கள் பற்றிய உண்மை மீனாவிற்கு தெரிய வந்திருக்கிறது.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் விஜயாவும் பார்வதியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா கொலு வைப்பது குறித்து விஜயா சொல்ல, கொலு வைப்பது நல்ல விஷயம் தான் அதையே வேண்டாம் என்று சொல்லுற என்று பார்வதி கேட்க, இதை ஸ்ருதியோ ரோகிணியோ சொல்லியிருந்தால் பரவால்ல. ஆனா இந்த மீனா சொல்லி நான் கேட்கணுமான்னு எனக்கு தோணுது என்று விஜயா சொல்ல அதற்கு பார்வதி யார் சொல்லி வச்சா என்ன அதுவிஜய் வீட்டு கொலுன்னு தானே எல்லாரும் சொல்லுவாங்க என்று சொல்ல விஜயா சரி என்று சொல்கிறார்.

அந்த நேரத்தில் மீனா விஜயாவுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு வர அங்கு இருக்கும் காதல் ஜோடிகள் ரூமில் தனியாக கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதை மீனா பார்த்து விடுகிறார். அவர்களை மீனா கண்டித்ததும் அவர்கள் நாங்கள் டான்ஸ் பிராக்டிஸ் தான் பண்ணிட்டு இருந்தோம். ஆனால் இவங்க தப்பா நினைச்சு எங்களை திட்டிட்டாங்க எங்க அம்மா கூட இப்படி திட்டுனது கிடையாது என்று நாடகம் போட அதை நம்பிய விஜயா மீனாவை திட்டி அனுப்புகிறார்.
ஆனால் பார்வதிக்கு மீனா சொல்ல வந்ததில் எதோ உண்மை இருக்குமோ என்று சந்தேகம் வருகிறது. பிறகு முத்து கொலு வைக்க பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து எல்லாத்தையும் பிரித்து வைக்கிறார். மீனா எல்லாம் வாங்கியாச்சா என்று கேட்டு இதையெல்லாம் கரெக்டா அடுக்கி வைக்கணும் இல்லன்னா தேவ குத்தம் ஆகிடும் என்று சொல்ல முத்து கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் வந்த மனோஜ் என்னடா இது என்று கேட்க, ஏற்கனவே பூ விற்றுட்டு இருக்கோம். இப்போ பொம்மை வைக்க போறோம் என்று முத்து சொன்னதும் மனோஜ் வீட்டுக்குள்ள பொம்மை வித்தா எப்படி தெரியும் என்று கேட்க, அதற்குத்தான் நீ வெளியே போர்டு பிடிச்சுட்டு நில்லு என்று கிண்டல் செய்ததும் மனோஜ்க்கு ரூமுக்கு கோவமாக போகிறார். அந்த நேரத்தில் ரோகிணி அவங்க அம்மாவிடம் போனில் பேசிக் கொண்டிருக்கிறார்.
மனோஜை பார்த்ததும் வித்யாவோட அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று சமாளித்து விடுகிறார். அப்போது இந்த முத்து என்ன நெனச்சிட்டு இருக்கான்னு தெரியல என்று மனோஜ் கோபப்பட அதற்கு ரோகிணி அவங்க கொலு வைக்கப் போறாங்களாம் என்று சொல்ல, நம்ம வீட்ல இந்த பழக்கமே கிடையாதே என்று மனோஜ் சொல்ல, அதற்கு ஆமா மீனா ஆசைப்படுறாங்க அதை அங்கிள் கிட்ட சொல்லி இருக்காங்க.
அவர் ஆண்டிகிட்ட பேச முதலில் ஆன்ட்டி ஒத்துக்க மாட்டேன் என்றாங்க பிறகு சரி சொல்லிட்டாங்க என்று சொன்னதும் எதுவும் பண்ணிட்டு போகட்டும் ஆனா விதவிதமா சுண்டல், கொழுக்கட்டை எல்லாம் பண்ணுவாங்கல்ல அதை நீ ஆபீஸ்ல மட்டும் கொண்டு வந்து கொடுத்துடு என்று மனோஜ் சொல்லி கொண்டு இருக்கிறார். அந்த நேரம் முத்து வந்து கதவை தட்ட எதுக்கு வந்து இருக்கேன்னு தெரியும் என்று மனோஜ் சொல்ல, சொல்லு பார்ப்போம் என்று முத்து சொல்லணும் கொலு வைக்க பெர்மிஷன் கேட்டதான வந்திருக்க என்று சொன்னதும் ஐயோ சார் ஒரு பத்திரம் ஒன்னும் வாங்கிட்டு வந்து கையெழுத்து போட்டு தருவீங்களா என்று கிண்டல் செய்கிறார்.
வீட்ல கொலு வைக்க போறோம் 5000 கொடு என்று சொல்ல, மனோஜ் அதெல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்ல அப்போ நீ ஃபங்ஷனில் எல்லாம் கலந்துக்க கூடாது என்று சொன்னதும் ரோகிணி நான் கொடுக்கிறேன் என்று சம்மதிக்கிறார். பிறகு ரவி இந்தி பாட்டு கேட்டுக் கொண்டிருக்க ஸ்ருதி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.

அப்போது முத்துவும் மீனாவும் வந்து கொலு வைக்க போறோம் 5000 பணம் கொடுங்க என்று சொல்ல அதற்கு ஸ்ருதி 2500 ரூபாய் கொடுத்துவிட்டு மீதம் 2500 ரூபாய் ரவியிடம் வாங்கிக்கோங்க என்று சொல்ல முத்து இவங்கதான் பெர்பெக்ட் ஜோடி என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது எதற்காக கொலு வைக்கிறீங்க என்று ஸ்ருதி கேட்க அதற்கு மீனா கல்யாணம் முடியாதவங்க கொலு வச்சா அவங்களுக்கு கல்யாணம் முடியுமாம்.
குழந்தை பிறக்காதவங்க கொலு வெச்சா அவங்க வீட்ல குழந்தை பிறக்கமாம் என்று சொல்ல, அப்போ நீங்க கர்ப்பமா இருக்கீங்களா? என்று ஸ்ருதி கேட்க மீனா வெட்கப்படுகிறார். அதைப் பார்த்து ஸ்ருதி வாழ்த்துக்கள் சொல்ல, இப்போதைக்கு எதுவும் இல்ல ஆனால் சீக்கிரமா நம்ம வீட்டில் குழந்தை பிறக்கும் என்று மீனா சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications