சிறகடிக்க ஆசை: அடுத்ததாக வளையல் விஷயத்தில் மாட்டும் விஜயா.. சத்யாவுக்கு தெரிய வந்த ரோகினி ரகசியம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 26 ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ரோகினி எங்க அப்பா எனக்கு 10 லட்சம் ரூபாய் செக் அனுப்பி இருக்கிறார் என்று சொல்ல விஜயா இன்னும் ஏழு லட்சம் வேண்டும் என்று கேட்கிறார்.

இதனால் விஜயா மற்றும் ரோகினி அடுத்தடுத்து மாட்டிக்கொள்கின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரோகினி பார்லரில் இருந்து வீட்டிற்கு வருகிறார். அப்போது விஜயா உங்க அப்பாகிட்ட ஏதாவது பேசினியாமா? பணம் கிடைச்சிடுச்சா என்று கேட்க, அதற்கு ரோகிணி உண்மையை சொல்லாமல் சமாளிக்க பார்க்கிறார். அப்போது நீ பேசலன்னா கூட பரவாயில்லை நான் பேசுறேன் என்று விஜயா சொல்ல, அதைக்கேட்டு ரோகிணி அதிர்ச்சி ஆகி இல்ல ஆன்ட்டி நான் பேசிட்டேன். 10 லட்சம் ரூபாய் அப்பா அனுப்பி இருக்காரு என்று செக்கை எடுத்துக் கொடுக்கிறார்.
அதற்கு விஜயா இன்னும் ஏழு லட்சம் ரூபாய் வேணுமே என்று சொல்ல, அதற்கு ரோகினி 10 லட்சம் தானே பார்லர் காக வாங்கி இருந்திங்க அதனால்தான் அதைக் கேட்டு வாங்கினேன் என்று சொல்ல, 7 லட்சம் ரூபாய் உங்க கல்யாணத்துக்காக தான் வாங்கி இருந்தேன். அதையும் கேட்டு வாங்கி கொடும்மா இல்லனா இந்த வீட்ல நமக்கு மரியாதை இருக்காது என்று விஜயா பேச, அதைக் கேட்டு அதிர்ச்சியாகி ரோகிணி திரும்பவும் அவர்கிட்ட கேட்க முடியாது. வேற யார்கிட்டயாவது கேட்டு அரேஞ்ச் பண்றேன் என்று சொல்ல, வழக்கம் போல விஜயா மீண்டும் நீ பேசலனா கூட பரவால்ல சொல்லு நான் பேசுறேன் என்று மீண்டும் சொல்கிறார்.

அதற்குப் பிறகு ரோகிணி கையில் இருக்கும் இரண்டு லட்சம் ரூபாயையும், அதோடு தான் வைத்திருந்த நகையை வைத்து மூன்று லட்சம் ரூபாயும் தயார் செய்து விட்டு இன்னும் இரண்டு லட்சம் ரூபாய் வேண்டுமே அதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார். அப்போது பார்லரில் வேலை செய்யும் பெண் ஒருவர் எனக்கு தெரிஞ்ச வட்டிக்காரர் ஒருவர் இருக்கிறார். அவர் இதுக்கு டாக்குமெண்ட் எதுவும் கேட்காமல் பணம் கொடுப்பார் என்று சொல்ல, அந்தப் பெண்ணோடு ரோகிணி அந்த நபரை சந்திக்கப் போகிறார்.
அப்போது மீனாவின் தம்பி சத்யாவும் அவருடைய நண்பர் சிட்டியும் உட்கார்ந்து வட்டி பிசினஸ் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் அங்கு ரோகிணி வருவதை பார்த்து மீனாவின் தம்பி நான் எங்கே இருந்தா மாட்டிக் கொள்வேன் என்று சொல்லி உள்ளே ஒளிந்து விடுகிறார். அப்போது அங்கு வரும் ரோகினி சிட்டுவிடம் எனக்கு ரெண்டு லட்சம் ரூபாய் பணம் வழங்க வேண்டும் என்று என்று வட்டிக்கு கடனாக வாங்கிக் கொள்கிறார்.
பிறகு நீங்க வீட்டுக்கு எல்லாம் வட்டி கேட்டு வந்துராதீங்க. நான் உங்களுக்கு சரியா வட்டி கட்டி விடுவேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். அடுத்ததாக வீட்டிற்கு வந்த ரோகினி எல்லாரையும் வச்சு 17 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுத்து இனி யாரும் ஒரு வார்த்தை பேச கூடாது என்று முத்துவை பார்த்து முறைத்தபடியே சொல்ல அதற்கு முத்து ஆமா இவங்க பெரிய எலிசபெத்து ராணி ராஜா இவங்கள பத்தி அவதூறு பரப்புறாங்க என்று வழக்கம்போல நக்கல் அடிக்கிறார்.

அதற்கு விஜயா நீங்க கேட்ட பணத்தை மூன்றே நாள்ல ரெடி பண்ணியாச்சு. ரோகினி ஒன்னும் சாதாரண குடும்பத்தை சேர்த்த பொண்ணு கிடையாது. அவ அப்பா பெரிய பணக்காரர் என்று சீன் போடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து வெளியான ப்ரோமோவில் இவர்கள் பணத்தை கொடுத்து பைனான்ஸ் காரரிடம் இருந்து பத்திரத்தை மீட்க அவர் இதையும் வாங்கிட்டு போயிருங்க என்று விஜயாவிடமிருந்து வாங்கிய வளையலை கொடுக்க இது எங்க அம்மாவுடைய வளையல் ஆச்சே என்று அண்ணாமலை அதிர்ச்சியோடு கேள்வி கேட்கிறார்.












Click it and Unblock the Notifications