சிறகடிக்க ஆசை: ஃபிளாஷ் பேக் கதையை பேசிய முத்து.. அண்ணாமலை சொன்ன வார்த்தை.. உடைந்தது ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 28ஆம் தேதிக்கான எபிசோடில் தனக்கு மிரட்டல் கடிதம் எழுதியது முத்து தான் என்று மனோஜ் குற்றம் சாட்ட முத்து தன்னுடைய ஃபிளாஷ்பேக் கதையை சொல்ல அண்ணாமலை ஃபீல் பண்ணுகிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் எனக்கு மொட்டை கடுதாசி எழுதி என்னை பயப்பட வைத்தது முத்து தான் நான் நல்லா இருக்கக் கூடாதுன்ன இப்படி பண்ணி இருக்கிறான். இந்த வீட்டிலேயே இருந்துகிட்டு என் நிம்மதியை கெடுத்துட்டீங்க என்று சத்தம் போட, விஜயா நீ உன் புருஷனை வர சொல்லி அவனை கூட்டிட்டு இந்த வீட்டை விட்டு போயிருங்க என்று மீனாவிடம் கத்திக் கொண்டிருக்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

பிறகு மனோஜிடம் அண்ணாமலை முத்துவை போன் பண்ணி வர சொல்லு என்று சொல்ல, மீனா இவரு கூப்பிட்டா அவர் ரொம்ப கோபப்படுவாரு. வந்ததும் போட்டு அடிப்பாரு அதனால நானே போய் கூப்பிட்டு வரேன் என்று முத்து வேலை பார்க்கும் இடத்திற்கே போகிறார். அங்கு மீனாவை பார்த்ததும் முத்து என்ன நீ என்னை தேடி இந்த நேரத்துக்கு வர மாட்டியே என்று கேட்க, வீட்டில் ஒரு பிரச்சனை.

நீங்கதான் உங்க அண்ணனுக்கு கடிதம் எழுதி அவரை மிரட்டுனீங்கன்னு அவரு சொல்லிக்கிட்டு பிரச்சனை பண்ணிட்டு இருக்காரு என்று சொன்னதும் முத்து கோபமாக வீட்டிற்குள் நுழைந்து மனோஜை அடிக்கப் போகிறார். மனோஜ் பீம்பாயிடம் நான் உனக்கு இவ்வளவுக்கு செலவழிக்கிறேன். நீ இவனை அடிக்காம பார்த்துட்டு இருக்குற என்று கேட்க, அதற்கு பீம் பாய் இது உங்க குடும்ப பிரச்சனை.

television siragadikka aasai serial vijay tv

நீங்க கூப்பிடாம நான் எப்படி வர முடியும் என்று சொல்ல, வாடா வந்து இவனை போட்டு அடிச்சு கைகாலை முறித்து விடு என்று சொல்ல மனோஜுக்கு இடையில் பீம் பாய் வந்து நின்று கொள்கிறார். அப்போது முத்து பீம் பாய்க்கு ஒரு அடி விட அவர் தொப்பென்று கீழே விழுந்து விடுகிறார். அதை பார்த்து மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி நிற்கும்போது பீம் பாய் எழுந்து குழந்தை போல அழுது கொண்டு இருக்கிறார்.

மனோஜ் உனக்கு போய் இவ்வளவு பணம் செலவழிச்சேனே போடா வீட்டைவிட்டு வெளியே போ என்று சொன்னதும் பீம் பாய் கிளம்பி போய்விடுகிறார்‌. பிறகு அண்ணாமலை முத்துவை நிறுத்துகிறார். அதற்கு முத்து நான் ஏம்ப்பா இவனுக்கு கடிதாசி போடணும். எனக்கு கோவம் வந்தா இவனை நேரில் போட்டு மிதிக்க போறேன். எதுவாக இருந்தாலும் மூஞ்சுக்கு நேரா பேசிட்டு போயிடுவேன் என்று சொல்ல அதையும் மீறி மனோஜ் நீதான் பண்ண என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

விஜயா நீ என் குடும்பமே கிடையாதுடா இருந்திருந்தா என்னை செத்துப் போவேன்னு எழுதி இருப்பியா? என்று கேட்க, முத்து கோபப்படுகிறார். அதோடு முத்து ரோகிணியிடம் என்ன நடந்தது என்று கேட்க, ரோகிணி கோவிலில் நடந்த விஷயங்களை சொல்ல, அதற்கு முத்து நீ அந்த நேரத்திலேயே எனக்கு போன் பண்ணி இருந்தா அவனை அங்க வச்சு அடிச்சு உண்மையை வாங்கி இருக்கலாம் என்று சொல்ல, அவர்தான் ரஜினி படம் பேர்ல இருக்கிற ஒருத்தர் என்று சொன்னாரு என்று சொல்கிறார்.

உடனே ரவி நல்ல வேலைப்பா உங்கள நினைக்கலையே அண்ணாமலைன்னு நினைச்சு பார்த்திருந்தால் உங்ககிட்ட வந்து கேட்டிருப்பான் என்று சொல்கிறார். மீனா எனக்கு ஒன்னு தோணுதுங்க இவருக்கு லெட்டர் கொடுத்தவர்தான் இவரை மிரட்டி இருப்பார் என்று கரெக்டா சொல்ல, ரோகிணி அதிர்ச்சியாகிறார். அதற்கு விஜயா எனக்கு என்னமோ இவன் தான் பண்ணி இருப்பான் என்று தோணுது என சொல்ல, அதான் அவரு பண்ணலன்னு சொல்றாரே ஏன் நம்பாமல் இப்படி சொல்லுறீங்க என்று கோபப்படுகிறார்.

அதற்கு முத்து விடு மீனா, இவங்க என் மேல குறை சொல்றதும் அவன் செஞ்ச தப்பை என் மேல சொல்றதும் எனக்கு என்ன புதுசா என்று பிளாஷ்பேக் கதையை சொல்ல வருகிறார். அப்போது அண்ணாமலை எதுவும் பேசாமல் தலை குனிந்து விடுகிறார். பிறகு சிறிது நேரம் கழித்து முத்து உன்னை பிளாக்மெயில் பண்ணி பணம் ஏதாவது கேட்க கூட இப்படி பண்ணி இருக்கலாம் என்று சொல்ல ஸ்ருதி நான் கூட புத்தகத்தில் படித்து இருக்கிறேன்.

ஒருத்தங்க தப்பு பண்ணுனா அவங்கள மிரட்டி பணம் கேட்பாங்க என்று சொல்ல, ரோகிணி இன்னும் அதிர்ச்சி அடைகிறார். நான் எந்த தப்பும் பண்ணல என்று மனோஜ் சொல்ல உடனே முத்து நீ பண்ணலனா உன் கூட இருக்கிறவங்க வேற யாராவது பண்ணி இருந்தா கூட உன்னை மிரட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று ரோகிணியை பார்க்கிறார். அதற்கு விஜயா நீ என்னடா ரோகிணியை பாக்குற என்று சொல்ல, பார்லர் அம்மா ஒன்னும் நல்லவங்க கிடையாது.

television siragadikka aasai serial vijay tv

அதுவும் ஒரு கேடி தானே என்று சொல்ல அண்ணாமலை எதுக்குடா தேவையில்லாத பேச்சு எல்லாம் பேசுற, உங்க பேசாம இதைப்பற்றி போலீசை கம்ப்ளைன்ட் கொடுத்துடலாம் என்று சொல்ல, முத்து நல்ல ஐடியா கொடுத்தப்பா வாடா நம்ம போய் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று மனோஜை கூப்பிட அதிர்ச்சியான, ரோகிணி போலீஸ் கம்பளைண்ட் எல்லாம் இப்ப வேண்டாம்.

போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்த போலீஸ் நம்ம கடைக்கு வந்து போகும்போது நமக்கு வியாபாரம் சரியா இல்லாமல் போய்விடும் என்று சொல்ல, விஜயாவும் அது சரிதான் என்று சொல்கிறார். பிறகு எல்லாரும் சரி என்று கிளம்பி போய்விட முத்து எனக்கு இந்த பார்லர் அம்மா மீது சந்தேகம் இருக்கு, என் பேரை மாட்டிவிட்டு அந்த மிரட்டறவன் யாருன்னு நானே கண்டுபிடிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்க, இதை ஒளிந்து நின்னு ரோகிணி கேட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+