சிறகடிக்க ஆசை: க்ரிஷை தத்தெடுக்க ஓகே சொன்ன விஜயா.. ரோகிணி போட்ட பிளான்.. அம்மா கொடுத்த அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செப்டம்பர் 7ம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி தன்னுடைய மகனை புதிய ஸ்கூலில் சேர்ப்பதற்காக பிளான் போட்டிருக்கும் நிலையில் விஜயா ரோகிணிக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் விஜயா பேசிய வார்த்தையை கேட்டு முத்து அதிர்ந்து போய் இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்துவும் மீனாவும் வீட்டிற்கு வந்து சோகமாக இருப்பதை பார்த்து அண்ணாமலை போகும்போது சந்தோஷமா தானே போனீங்க? இப்போ ஏன் மூஞ்சி சோகமா இருக்கு என்று கேட்கிறார். அதோடு க்ரிஷ் எப்படி இருக்கிறான் என்று அண்ணாமலை நலம் விசாரிக்க, க்ரிஷ் நல்லாதாம்பா இருக்கான். ஆனா அவங்க பாட்டிக்கு தான் ரொம்ப உடம்பு சரியில்ல படுத்துட்டு இருக்காங்க ரொம்ப கஷ்டமா இருந்தது என்று முத்து சொல்கிறார்.

siragadikka aasai serial vijay tv

ஆனாலும் இந்த நிலைமையில் கூட அவங்க பொண்ணு வந்து பாக்காம இருந்தா எவ்வளவு பெரிய பிராடாக இருக்கும் என்று முத்து கோபப்படுகிறார். அந்த நேரத்தில் விஜயா வந்ததும் முத்து இந்த பேச்சை நிறுத்தி அமைதியாகி விட்டு பிறகு விஜயா சென்றதும் நாங்க க்ரிஷை தத்தெடுக்க போகிறோம். அவங்க பாட்டியிடம் விஷயத்தை சொல்லிட்டோம். அவங்க யோசிச்சு சொல்லுறேன்னு சொல்லி இருக்காங்க.

அவங்க சம்மதிக்கலனா கூட நாங்க கம்பெல் பண்ணி கூட்டிட்டு தான் வரப் போறோம் என்று சொல்ல, இதையெல்லாம் கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். பிறகு விஜயாவிடம் சென்று ரோகிணி நடந்த விஷயத்தை சொல்ல விஜயா அதிர்ச்சி எதுவும் ஆகாமல் அந்தப் பையனை கூட்டிட்டு வரட்டும் அதையே சாக்கா வச்சு அவங்களை வெளியே அனுப்பிடுறேன் என்று திட்டம் போடுகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத ரோகிணி இவங்க தத்தெடுப்பதை தடுப்பாங்கன்னு பார்த்தா இவங்க இப்படி சொல்லிட்டாங்களே என்று குழப்பத்தில் இருக்கிறார்.

siragadikka aasai serial vijay tv

இனி இவங்க கிட்ட சொன்னா சரி வராது‌. இதற்கு நாமளே ஏதாவது முடிவு பண்ணனும் என்று நினைக்கிறார். பிறகு தன்னுடைய பிரண்டு வித்யாவோடு சென்று க்ரிஷுக்கு ஸ்கூல் சேர்க்க விசாரிக்கிறார். அதற்கு வித்யா சிட்டிக்கு வெளியே இவ்வளவு தூரத்தில் ஸ்கூல் பார்க்கணுமா? என்று கேட்க, அதற்கு ரோகிணி ஆமா அந்த முத்துவும் மீனாவும் சிட்டிக்குள்ள சுத்திக்கிட்டே இருப்பாங்க. அவங்க கண்ணுல க்ரிஷ் பட வேண்டாம்னா இந்த ஸ்கூல்ல தான் பெஸ்ட் என்று சொல்கிறார்.

அதற்கு வித்யா எனக்கு ஒரு ஐடியா தோணுது. நீயே பேசாம க்ரிஷை தத்து எடுத்துக்கோ என்று சொல்ல, அதற்கு ரோகிணி இதுதான் உன் ஐடியாவா? மனோஜ் இதுக்கு சம்மதிக்கவே மாட்டான். மனோஜ் சம்மதிச்சாலும் என் மாமியார் சலங்கை கட்டிட்டு ஆடுவாங்க என்று சொல்கிறார். பிறகு பிரின்ஸ்பலை சந்தித்து ஃபார்ம் வாங்கிக்கொண்டு மத்த டீடெயில்ஸ் எல்லாம் கேட்டுக்கொள்கிறார். இரண்டு நாட்களில் வந்து பீஸ் கட்டுறேன் என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறார்.

siragadikka aasai serial vijay tv

பிறகு ரோகிணி அம்மாவிற்கு ஃபோன் போட்டு புதுசா வீடு பார்த்துட்டு ஸ்கூல் அட்மிஷன் வாங்கிட்டு அடுத்த வாரம் உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வரேன் என்று சொல்ல, அதற்கு ரோகிணியின் அம்மா ரொம்ப சந்தோசம் இப்பவாவது இந்த முடிவு எடுத்தியே என்று சொல்கிறார். அடுத்த கட்டத்தில் பூ கட்டிக்கொண்டு இருந்த மீனாவிடம் விஜயா பார்வதி வீட்டுக்கு நான் போறேன் மதிய சாப்பாடு எடுத்துட்டு வந்துரு என்று அதிகாரமாக சொல்கிறார்.

siragadikka aasai serial vijay tv

அந்த நேரத்தில் வந்த முத்து அவ பூ கட்டிட்டு இருக்கிறா உங்களுக்காக அங்க வரணும்னா நீங்கதான் அவளுக்கு பணம் கொடுக்கணும்னு சொல்ல, அதற்கு விஜயா ஒரு மாமியாருக்காக மருமகள் இதை கூட செய்ய மாட்டாளா என்று கேட்க, இதை கேட்டு முத்து நெஞ்சு வலி வந்தது போல நடிக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+