சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு வந்த மிரட்டல்.. பயமுறுத்தும் அண்ணாமலை.. புது பிரச்சனையில் மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 9-ம் தேதிக்கான எபிசோடில் மனோஜ்க்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்திருக்கிறது. அதே நேரத்தில் விஜயா பேச்சை மீறி மீனா புது பிரச்சனையில் சிக்குகிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் விஜயா நான் பார்வதி வீட்டுக்கு போறேன் எனக்கு மதிய சாப்பாடு எடுத்துட்டு வா என்று சொல்ல மீனா நான் பூ கட்ட வேண்டும் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் வரும் முத்து அவளுக்கு வேலை இருக்கு என்று சொல்ல, அதற்கு விஜயா ஒரு மாமியாருக்காக இது கூட செய்ய மாட்டாளா? என்று கேட்டதும் முத்து நெஞ்சுவலி வந்தது போல நடிக்கிறார்.

இன்னைக்கு தான் நீங்க அவளுக்கு மாமியார் என்று உங்களுக்கு நினைவு வந்ததா? உங்களுக்கு தேவைன்னா மட்டும் அவ மருமகளா மாறிடுகிறா... என்று கேள்வி கேட்க, விஜயா மற்றும் முத்துவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது வந்த அண்ணாமலை என்ன பிரச்சனை என்று கேட்க சாப்பாடு எடுத்துட்டு வந்து கொடு என்று சொன்னால் கொடுக்க முடியாதுன்னு சொல்லுறா என்று விஜயா சொன்னதும் சரி நான் சும்மாதானே இருக்கேன் எடுத்துட்டு வரேன் என்று அண்ணாமலை சொல்ல, அதற்கு விஜயா இப்ப உனக்கு சந்தோசமா? அவர் வேலை செய்யணுமா என்று மீனாவை திட்டுகிறார்.
அதற்கு மீனா வேண்டாம் மாமா நானே போறேன் என்று சொல்கிறார். பிறகு விஜயா கிளம்பி போய்விடுகிறார். மறுபக்கத்தில் மனோஜ் கடையை தேடி வந்த ஒரு நபர் மனோஜிடம் ஒரு லெட்டரை கொடுக்கிறார். அந்த லெட்டரில் அட்ரஸ் எதுவும் இல்லை என்பதால் மனோஜ் என்ன அட்ரஸ் எதுவும் இல்லையே என்று கேட்க, அதற்கு அந்த நபர் ப்ரம் நான் தான் டூ நீதான் என்று சொல்ல, மனோஜ் அந்த லெட்டரை பிரித்து படிக்கப் போகிறார்.
அப்போது கடையில் வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து நீங்க என்ன எங்க வேடிக்கை பாக்குறீங்க உங்க வேலைய பாருங்க என்று அவர்களை திட்டி விட்டு லெட்டரை படிக்க, அதில் முதலில் உங்க அம்மாவுக்கு மாரடைப்பு வரும்.. தம்பி கொலைகாரன் ஆவான், நீ தற்கொலை செய்து கொள்வாய்.. என்று எழுதி இருக்கிறது. இதை பார்த்து மனோஜ் அதிர்ச்சி அடைந்து அந்த ஆளைத் தேடி ஓடுகிறார்.

அவர் ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருப்பதை பார்த்தது லெட்டர் கொடுத்த விஷயத்தை பற்றி கேட்க, நீ முதல்ல டீக்கு காசு கொடு என்று அந்த நபர் சொல்ல மனோஜ் காசை கொடுத்துவிட்டு வருவதற்குள் அந்த நபர் மறுபடியும் காணாமல் போய்விடுகிறார். பிறகு டீக்கடையில் இருந்த சிலர் அவன் ஜெயிலுக்கு போயிட்டு இப்பதான் வந்திருக்கான். திருட்டு பையன், அவன்கிட்ட உஷாரா இரு, நீ ஷோரூம் வச்சிருக்க என்று பயம் காட்டுகின்றனர்.
மறுபக்கத்தில் மீனா அண்ணாமலைக்கும் ஸ்ருதிக்கும் சாப்பாடு போட்டுவிட்டு விஜயாவுக்கு சாப்பாடு எடுத்துக் வைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது மீனாவும் ஸ்ருதியும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்த அண்ணாமலை விஜயா வந்து சாப்பிடு என்று சொன்னதும் மீனாவும் ஸ்ருதியும் சண்டை போடுவது போன்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.அதை பார்த்து அண்ணாமலை சிரித்ததும் எங்களை பிராங்க் பண்ணுறீங்களா என்று கேட்கின்றனர்.

பிறகு மீனா சாப்பாடு எடுத்துக்கொண்டு கிளம்ப ஸ்ருதி அண்ணாமலையிடம் மீனா நம்மளை எவ்வளவு கேரிங்கா பார்த்துக்கிறாங்க. ஆனா ஆன்ட்டி ஏன் இவங்கள புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாங்க என்று சொல்ல, அதற்கு அண்ணாமலை அவளை என்னாலேயே இன்னும் புரிஞ்சிக்க முடியல என்று சொன்னதும் நான் உங்க இடத்தில் இருந்திருந்தா அவங்களை கடிச்சு வச்சிருவேன் என்று சொல்கிறார்.
பிறகு மீனா சாப்பாடு எடுத்துக்கொண்டு போகும்போது ரோட்டில் இரண்டு வயதானவர்கள் சாப்பாடு இல்லாமல் மயக்கத்தில் இருக்கிறார்கள். மீனா உடனே சாப்பாடை அவர்களுக்கு எடுத்து கொடுத்து சாப்பிட வைக்கிறார். அதற்கு அவர்கள் நன்றி தெரிவித்து நாளைக்கு வரைக்கும் நாங்க சாப்பிடாம இருந்தா இந்த பிளாட்பாரத்துல இறந்து கிடந்து இருப்போம் என்று சொல்கின்றனர்.
அதற்கு மீனா உங்களுக்கு டெய்லியும் நானே சாப்பாடு கொண்டு வரேன் என்று இரவு சாப்பாட்டுக்கு பணத்தையும் கொடுத்துவிட்டு கிளம்புகிறார். அந்த நேரத்தில் விஜயா போன் போட்டு சாப்பாடு எங்கடி என்று கேட்க, நான் வந்துட்டு இருக்கிறேன் அத்தை என்று சமாளிக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications