சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி விஜயாவிடம் மாட்டாத காரணமே இதுதானா? சம்பவம் பெருசா இருக்கே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஒவ்வொரு முறையும் ரோகிணி, விஜயா மற்றும் குடும்பத்தினரிடம் மாட்டாமல் தப்பித்து வருகிறார். ஆனால் இப்போது ரோகிணியை சுற்றி பிரச்சனைகள் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரோகிணி மாட்டுவாரா இல்லையா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
இந்த நிலையில் ரோகிணி அவருடைய முதல் திருமணம் மற்றும் அப்பா விஷயத்தில் இன்னும் மாட்டாமல் இருக்க காரணம் இதுதான் என்று ரசிகர்கள் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். அது குறித்து பார்க்கலாம்.

அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தனக்கு ஏற்கனவே ஒரு திருமணம் முடிந்து குழந்தை இருக்கிறது என்ற உண்மையையும் மறைத்து தன் அப்பா மலேசியாவில் பெரிய பிசினஸ் மேனாக இருக்கிறார். என்ற பொய்யையும் சொல்லிக் கொண்டு விஜயாவை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளில் ரோகிணி மட்டும் மாட்டாமல் தப்பித்து கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே ரோகிணியின் மாமாவாக நடிக்க வந்த கறிக்கடைக்காரர் முத்துவிடம் சிக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் கடைசியில் அது நடக்காமலே போய்விட்டது. இந்த நிலையில் ஸ்ருதி மற்றும் ரோகிணியின் தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷனுக்கும் ரோகிணியின் அப்பா வருகிறார் என்று சொல்லி விஜயா நம்பிக்கொண்டிருந்த நிலையில் அப்போதும் ரோகிணி மாட்டாமல் தப்பித்துவிட்டார்
இந்த நிலையில் சீரியல் ரசிகர்கள் இந்த சீரியலில் இயக்குனர் ரோகிணிக்கு மட்டும் ஏன் பாரபட்சம் காட்டுகிறார். சீரியலில் எல்லா திருப்பங்களும் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால் ரோகிணி மட்டும் ஒரு முறை கூட மாட்டவே இல்லை என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணமே ரோகிணி மாட்டினாலே இந்த சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என்பதுதான்.
காரணம் இந்த சீரியலில் மைய புள்ளியாக ரோகிணி ஏமாற்றிக் கொண்டிருக்கும் விஷயம் தான் இருக்கிறது. ஏற்கனவே ரோகிணியின் அப்பா வராததால் விஜயாவின் உண்மையான முகத்தை ரோகிணி பார்த்திருக்கிறார். அதே நேரத்தில் ரோகிணி ஏற்கனவே கல்யாணம் முடிந்து ஒரு குழந்தையோடு இருப்பவர், அவருக்கு அப்பாவும் இல்லை, அம்மாவும் கஷ்டப்படுகிறவர் என்று தெரிந்தால் விஜயா யோசிக்காமல் வீட்டை விட்டு துரத்தி விடுவார்.
ஆனால் விஜயாவை ஏமாற்றுவதற்காக ரோகிணி மேலும் மேலும் சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் அவருடைய பிஏ உண்மையை குடும்பத்தில் சொல்லி விடுவேன் என்று மிரட்டி பணம் வாங்கிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் ரோகிணி தன்னைப் பற்றிய உண்மை வந்து விடக்கூடாது என்பதற்காகவே கடன் வாங்கி வீட்டில் விஜயாவுக்கு கேட்கும்போது எல்லாம் பணம் கொடுத்து கொண்டு இருக்கிறார்.
இதனால் ரோகிணி விஷயம் வெளியே தெரியும் எபிசோடு பெரிய பரபரப்பை ஏற்படுத்தும். அதனால் அதை இப்போதே தெரியப்படுத்த வேண்டாம் என்று சீரியல் அணியினர் யோசித்து இருக்கிறார்கள். ஆனால் இன்றைய எபிசோட்டில் முத்துக்கு ரோகிணியின் அப்பா மற்றும் மாமா குறித்து சந்தேகம் வந்திருக்கிறது. இதை வைத்து சீக்கிரமாக முத்துவிற்கு தான் ரோகிணி பற்றிய உண்மை தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் வழக்கம் போல அண்ணாமலை இதில் குறுக்கிட்டு இப்போதைக்கு உண்மையை வீட்டில் சொல்ல வேண்டாம் என்று தடுத்து விடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரோகிணி சிட்டி இடம் அதிகமாக வட்டிக்கு பணம் வாங்கி இருக்கும் நிலையில் இப்போது கல்யாணத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டிருப்பதால் இனி என்ன செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications