இதை சொல்லியே ஆகணும்.. எல்லாரும் தப்பா நினைக்கிறாங்க! சிறகடிக்க ஆசை “ஸ்ருதி" கொடுத்த விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி கேரக்டரில் நடிகை பிரீத்தா நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய சொந்த ஊர் மற்றும் சீரியலில் தனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்ற பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் ஸ்ருதியாக நடிக்கும் ப்ரீத்தாவின் சொந்த ஊர் விழுப்புரம் என்று செய்திகளில் பரவி வருகிறதாம். ஆனால் ஸ்ருதி பிறந்து வளர்ந்தது விழுப்புரம் கிடையாதாம். சென்னையில் தான் ஸ்ருதி பிறந்து வளர்ந்தாராம். விழுப்புரம் ஸ்ருதியின் அப்பாவின் ஊராம். அதனால் தன்னுடைய சொந்த ஊர் விழுப்புரம் என்று சில இடத்தில் சொல்லுவேன் ஆனால் அதை எல்லாரும் நான் விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து அங்கிருந்து கஷ்டப்பட்டு சென்னைக்கு நடிக்க வந்ததாக சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படியெல்லாம் கிடையாது. சென்னையில் தான் பிறந்து வளர்ந்தேன். என்னுடைய வீட்டில் நடிப்பு பேக்ரவுண்டில் யாரும் கிடையாது. ஆனால் எனக்கு காலேஜ் படிக்கும் போதே நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அதனால் நானாக தான் ஒவ்வொரு இடத்திலும் முயற்சி செய்து நடிப்பதற்கு வாய்ப்பு தேடினேன். ஆரம்பத்தில் எனக்கு சின்ன சின்ன வாய்ப்பு கிடைத்தது. சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாக இப்போது பெரிய அளவில் பிரபலம் கிடைத்து இருக்கிறது.

ஆனாலும் என்னுடைய வீட்டில் பெற்றோர் சூட்டிங் வந்து விடுவது, கூட்டிட்டு போறது போன்ற சப்போர்ட் பண்ணவில்லை என்றாலும் நான் ஏதோ ஒரு வேலை பார்க்கிறேன் அவ்வளவுதான் என்று விட்டு விட்டார்கள் அவ்வளவுதான்.. மற்றபடி என்னுடைய குடும்பத்தினர் என் மீது அதிகமாக பாசமாக இருக்கிறார்கள். சீரியலில் நான் நடிக்கும் ஸ்ருதி கேரக்டர் லூசுத்தனமான கேரக்டராக இருக்கிறார். எப்போது எப்படி இருப்பார் என்று யாராலும் சொல்ல முடியாது.

அதுபோல அப்பா அம்மாவை எதிர்த்து பேசி திமிராக நடந்து கொள்கிறார். ஆனால் நான் அப்படியெல்லாம் கிடையாது. மற்றபடி ஸ்ருதி ஜாலியாக இருப்பது போன்றுதான் நானும் இருப்பேன். அவர் எதையும் முகத்துக்கு நேராக பேசி விடுவது போன்று நானும் பேசி விடுவேன் அவ்வளவுதான்... எனக்கும் ஸ்ருதிக்கும் ஒற்றுமை என்று பிரீத்தா பேசி இருக்கிறார். அதோடு சிறகடிக்க ஆசை சீரியலில் தான் நடித்த பிறகு வெளியே போகும்போதெல்லாம் என்னை எல்லோரும் "பல குரல்" என்று கூப்பிடுகிறார்கள்.

அது எனக்கு கிடைத்த அங்கீகாரமாக தெரிகிறது. இதற்கு முன்பு சில சீரியல்களில் நடித்திருக்கிறேன். ஆனால் பெரிய அளவில் நான் வெளியே பிரபலமாகவில்லை. சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாக பிரபலமாகி கொண்டிருக்கிறேன். அதுபோல சீரியலின் கதை படி இனி என்னுடைய கேரக்டர் எப்படி மாறப்போகிறது என்று எனக்கு எதுவும் தெரியாது.

ஆரம்பத்தில் என்னிடம் கதை சொல்லும் போது இந்த சீரியலில் கதாநாயகன் போலவே உங்களுடைய கேரக்டரும் இருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் உள்ளே வந்த பிறகுதான் என்னுடைய கேரக்டர் எனக்கே தெரிந்தது. ஆனாலும் இப்போதும் அந்த கேரக்டரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு நாள் ஒரு மாதிரி இருக்கிறார், மற்றொரு நாள் வேற மாதிரி இருக்கிறார். இன்னும் இயக்குனர் என்ன சொல்லப் போகிறாரோ? என்று தெரியவில்லை என அந்த பேட்டியில் கலகலப்பாக ப்ரீத்தா பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+