கில்லி படத்தில் திரிஷாக்கு அம்மா.. மகன் இறந்துட்டான்னு அழ சொன்னாங்க! தவிச்சேன்- சிறகடிக்க ஆசை சுஜாதா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி கேரக்டரில் நடிகை சுஜாதா நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது தான் நடித்த கில்லி திரைப்படம் அனுபவம் குறித்தும், தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்தும் பேசி இருக்கிறார்.
விஜய் டிவியில் டிஆர்பி-யில் முதலிடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் சில வாரங்களுக்கு முன்பு தான் சுஜாதா அறிமுகமானார். இவரை பார்க்கும் ரசிகர்கள் எல்லாம் இவரை திட்டி தீர்த்து வருகிறார்கள். மீனாவிற்கு எதிரியான இவரை பலரும் தங்களுக்கே எதிரி என்பது போல கமெண்ட்களில் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

சிறகடிக்க ஆசை சிந்தாமணி
சிறகடிக்க ஆசை சிந்தாமணியின் பெயர் சுஜாதா என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. அவருடைய பெயர் "ஈசன்" சுஜாதா என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர் ஆரம்பத்தில் நடன இயக்குனராக பல நடிகர்கள் நடிகைகளுடன் பணியாற்றி இருந்தாலும் ஒரு சில கேரக்டரில் சில திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும் ஜில்லா விட்டு ஜில்லா வந்து என்று ஈசன் திரைப்படத்தில் இடம் பிடித்த பாடலுக்கு இவர்தான் டான்ஸ் ஆடி இருந்தார்.
ஈசன் சுஜாதா
"ஜில்லா விட்டு ஜில்லா" பாடல் இவருக்கு பெரிய பிரபலத்தை கொடுத்தது. அதுபோல கில்லி திரைப்படத்தில் நடிகை திரிஷாவிற்கு அம்மாவாகவும் நடித்திருந்தார். அந்த காட்சிகளில் நடிக்கும்போது தனக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது என்று சுஜாதா கூறி இருக்கிறார். அதற்கு காரணம் நான் நடன இயக்குனராக இருக்கும்போது பல நடிகர்களை இப்படி ஆடுங்க, அப்படி ஆடுங்க என்று பேசி இருக்கிறேன். ஆனால் கில்லி திரைப்படத்தில் திரிஷாவுக்கு அம்மாவா நடிக்க வாய்ப்பு வந்தபோது நடித்து விடலாம் என்று நினைத்தேன்.

கில்லி திரிஷா அம்மா
ஆனால் முதல் காட்சிகளில் நான் ரொம்பவும் கஷ்டப்பட்டேன் அதிலும் என்னுடைய மகன் இறந்து விட்டான் என்ற காட்சியில் நடிக்கும் போது எனக்கு பயமாகவும் கூச்சமாகவும் இருந்தது. சுற்றி இத்தனை பேர் நிற்கிறார்களே இவர்கள் முன்பு நாமே எப்படி அழுவது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போது இயக்குனர் சுற்றி நிற்கிறவர்களை பற்றி நீங்க பார்க்காதீங்க இந்த இடத்தில் உங்களுடைய மகன் இறந்துவிட்டால் நீங்கள் என்ன மாதிரி மனநிலையில் இருப்பீர்களோ அதைத்தான் வெளிப்படுத்த வேண்டும் அப்போதுதான் நீங்கள் சிறந்த நடிகை என்றார்.
இயக்குனர் சொன்ன வார்த்தை
உங்களுடைய கேரக்டருக்கு தகுந்த மாதிரி நீங்கள் மாறிவிட வேண்டும் என்று சொன்னார். அதற்கு பிறகு நான் அந்த கேரக்டராகவே மாறிவிட்டேன். அதுபோல இப்போது சிறகடிக்க ஆசை சீரியலிலும் என்னுடைய நடிப்பு அப்படித்தான் இருக்கிறது. சீரியலில் எனக்கு வாய்ப்பு வந்தபோது இயக்குனர் என்னிடம் ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டார் நீங்க மற்ற வில்லி போல கிடையாது, மற்ற வில்லி போல கிராண்டா புடவை கட்டிக்கொண்டு கழுத்து நிறைய நகை போட்டுக்கொண்டு வில்லத்தனம் செய்யக்கூடாது.
நண்பர்களின் பாராட்டு
இந்த சீரியலில் முழுக்க நீங்கள் சிரித்தபடியே வில்லத்தனத்தை காட்டும் வில்லியாக இருக்க வேண்டும் என்று சொன்னார். அதனாலேயே அவர் சொன்னது போலத்தான் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த சீரியலில் நடிக்க தொடங்கிய பிறகு என்னுடைய பழைய நண்பர்கள் எனக்கு போன் பண்ணி சிறகடிக்க ஆசை சீரியல் என்னுடைய ஃபேவரைட் சீரியல் அதுல நீங்க இருக்கிறது சந்தோஷம் என்று சொல்றது மன நிறைவு கொடுக்கிறது.

கோபப்படும் ரசிகர்கள்
சமீபத்தில் கூட ஒரு ஒருத்தரோட மறைவுக்கு நேரில் போயிருந்தேன் அங்கு இறந்தவரோட மகன் என்னை பார்த்ததும் நீங்க சிந்தாமணி தானே? நீங்க ஏன் மீனாவுக்கு எதிரியா வர்றீங்கன்னு கேட்டார். எனக்கு கொஞ்ச நாளிலேயே இப்படி அறிமுகம் கிடைத்திருப்பது சந்தோஷம்தான். சிந்தாமணி கேரக்டர் இந்த கொஞ்ச நாளில் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு காரணம் இயக்குனர் குமரன் சார் தான்.

வில்லத்தனமும் பிடிச்சிருக்கு
எனக்கு வில்லியாக நடிப்பதில் எந்த கஷ்டமும் கிடையாது. என்னுடைய தோழிகள் கூட வில்லியா நடிக்காதீங்க அடிக்க வருவாங்க என்றெல்லாம் சொன்னாங்க. ஆனால் எனக்கு இதுவரைக்கும் அப்படி எல்லாம் நடக்கல. சிலர் திட்டி இருக்காங்க அவ்வளவுதான். பொதுவாக ஒரு சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி ஹீரோ ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு பிறகு மக்கள் கிட்ட அதிகம் போய் சேருது வில்லன்கள் தான். அதனால அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறது எனக்கு ஹேப்பி தான் என்று அந்த பேட்டியில் நடிகை சுஜாதா பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications