க்ரிஞ்ச் ஆக மாறும் சிறகடிக்க ஆசை.. தொடரும் சத்தியம், சபதத்தால் ரசிகர்கள் வேதனை.. இப்படி பண்ணலாமா?
சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலில் அடிக்கடி சபதம் செய்து வருவதால் ரசிகர்கள் இது சிறகடிக்க ஆசை சீரியலா அல்லது சபதம் செய்ய ஆசை சீரியலா? என்று கிண்டல் செய்து வருகிறார்கள். அதோடு சில வாரங்களாகவே இந்த சீரியலில் ரசிகர்களை கோபப்படுத்தும் வகையில் கதை இருந்து வருகிறது. அது பற்றி பார்க்கலாம்.
விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் மற்ற சீரியல்களை காட்டிலும் இந்த சீரியலில் காமெடி, காதல், செண்டிமெண்ட், சண்டை சச்சரவு என எல்லா விஷயங்களும் கலந்து இருக்கிறது. அதோடு கதாநாயகனின் கேரக்டர் பல ஆண்களின் கேரக்டரை போலவே இருப்பதால் ரசிகர்கள் இந்த சீரியலை அதிகமாக ரசிக்கிறார்கள்.

சிறகடிக்க ஆசை முத்துவை போலவே என்னுடைய கணவரின் குணமும் இருக்கிறது, என்னுடைய அண்ணன் குணமும் இருக்கிறது என்று பலர் இந்த சீரியலின் ப்ரோமோவுக்கு கீழே கருத்து தெரிவிப்பதை பார்க்க முடிகிறது. ஆனாலும் இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்தே முத்து மற்றும் மீனாவிற்கு மட்டுமே பிரச்சனைகள் மேல் பிரச்சனை வந்து கொண்டே இருப்பது ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது.
அதிலும் மாமியார் விஜயா மீனாவை பூக்காரி என்று அதிகமாக திட்டுகிறார், மீனா அவருடைய கணவரோடு சேர்ந்து தூங்குவதற்கு கூட அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுகிறார். இதையெல்லாம் பார்க்கும் ரசிகர்கள் மீனாவுக்காக சப்போர்ட் செய்து விஜயாவை திட்டி வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த சீரியலில் வில்லியாக இருக்கும் ரோகினி ஒவ்வொரு பிரச்சனையிலும் மாட்டாமல் தப்பித்துக் கொண்டே இருக்கிறார்.
இந்த சீரியலில் ரோகினி தான் அதிகமாக பொய் சொல்லி வைத்திருக்கிறார். அவருடைய பொய்கள் வெளியே தெரியும் போது சீரியல் முடிவை நோக்கி வந்துவிடும் அதனால் ரோகிணி வீட்டில் மாட்ட வைக்காமல் கதை நகர்ந்து கொண்டு போகிறது அதனால் அது கூட பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனால் பிரச்சனைகள் எப்போதும் கதாநாயகன் கதாநாயகிக்கு மட்டுமே வரும் என்பது பார்க்கும் ரசிகர்களையும் கடுப்பாக்கி இருக்கிறது.

நிஜ வாழ்க்கையில் தான் நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றால் அந்த கஷ்டத்தை போக்குவதற்காக பார்க்கப்படும் சீரியலிலும் அதே கதையே போய்க் கொண்டிருப்பது கடுப்பாக இருக்கிறது என்பது பலருடைய கருத்து. ஏற்கனவே மனோஜ் 27 லட்சம் பணத்தை தூக்கிக்கொண்டு ஜீவாவிடம் கொடுத்து ஏமாந்து இருக்கிறார். அதற்குப் பிறகு ரோகிணி மூலமாக அந்த பணத்தை 30 லட்சம் ஆக வாங்கி வீட்டிற்கு தெரியாமல் தன்னுடைய அப்பா தந்தது என்று ரோகினி பொய் சொல்ல, அதையே மனோஜும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
சிறகடிக்க ஆசை: நகை பற்றிய உண்மையை தெரிந்த முத்து.. மனோஜ் செய்த செயல்.. பாட்டி சொன்ன வார்த்தை
இந்த நிலையில் இப்போது ரூ 4 லட்சம் பணம் ஏமாந்து போன மனோஜ் வீட்டிலிருந்த மீனாவின் நகைகளை விற்றுவிட்டு டூப்ளிகேட் நகைகளை வாங்கி வைத்திருக்கிறார். இந்த நகைகள் பற்றிய உண்மை இன்று முத்துவிற்கு தெரிய வந்திருக்கும் நிலையில் அதைப்பற்றி அண்ணாமலை இடம் சொல்லலாம் என்று போகும்போது மீனா தடுத்து நிறுத்தி இதை இப்போது வீட்டில் சொல்லக்கூடாது என்று தன் மீது சத்தியம் வாங்கிக் கொள்கிறார்.
ஏற்கனவே மனோஜ் வேலைக்கு போகாமல் பார்க்கில் தூங்கிக் கொண்டிருக்கும் விஷயத்தை வீட்டில் முத்து சொன்னதால்தான் பிரச்சனை இதை நீ என்னிடம் சொல்லி இருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது என்று அண்ணாமலை சொல்லி இருக்கிறார். அதற்கு முத்து இனி எந்த பிரச்சனை என்றாலும் உன்னிடம் தான் சொல்லுவேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் இன்று அண்ணாமலை இடம் முத்து உண்மையை சொல்ல போகும்போதும் மீனா தடுத்து நிறுத்துகிறார்.

அதுபோல வீட்டில் என்னுடைய கணவர் வாங்கி தரும் நகையை தான் நான் போடுவேன் என்று மீனா ஏற்கனவே ஒரு சபதம் போட்டிருக்கும் நிலையில், அதை தொடர்ந்து என்னுடைய கணவரின் சம்பாத்தியத்தில் மாடியில் இன்னொரு ரூம் வீடு கட்டுவோம் என்றும் சபதம் போட்டிருக்கிறார். இப்படி சத்தியமும் சபதமும் இந்த சீரியலில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பது ரசிகர்களை வெறுப்படைய செய்திருக்கிறது.
இதனால் சீரியலின் இயக்குனர் கதையை ரசிகர்கள் விரும்பும் வகையில் சுவாரஸ்யமாக மாற்றினால் நன்றாக இருக்கும் என்பது பலருடைய கருத்து என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். ரோகிணி ஒவ்வொரு முறையும் மாட்டாமல் தப்பித்துக் கொண்டிருப்பது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை கமெண்டில் தட்டி விடுங்க.
-
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்!












Click it and Unblock the Notifications