சிறகடிக்க ஆசை: சிந்தாமணியால் வீட்டை விட்டு போகும் மீனா.. முத்து பிடித்த பாயிண்ட்! அண்ணாமலை கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial Today) சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று 2026 பிப்ரவரி 24ஆம் தேதிக்கான எபிசோடில், சிந்தாமணி போட்ட பிளான் படி பெண் சாமியார் வீட்டுக்கு வந்து மீனாவை குறிவைத்து பெரிய பிரச்சனையை உருவாக்குகிறார் ஆனால் மூட்டு வீணாகிருக்கு சப்போட்டாக அந்த பெண்ணை துறத்துகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இன்றைய எபிசோடு (Siragadikka Aasai serial Feb 24 Episode) ஆரம்பத்தில், வீட்டில் பூஜை நடத்த வேண்டும் என்று மீனாவும் விஜயாவும் சேர்ந்து ஏற்பாடு செய்ய, வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் என்ன விசயம் என்று கேட்கிறார்கள். அதற்கு விஜயா, நல்லபடியா பூஜை நடந்தால் வீட்டில் இருக்கும் கஷ்டங்களும் பிரச்சனைகளும் தீர்ந்து போய்விடும், வரப்போகிற அம்மா ரொம்ப சக்தி வாய்ந்தவர் என்று கூறுகிறார். ஏற்கனவே வீட்டில் அடுத்தடுத்து பிரச்சனை வந்துட்டு இருக்கு டைவர்ஸ் கிடைக்கணும் ஸ்ருதி மீண்டும் இந்த வீட்டுக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பூஜை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
பெண் சாமியார்
அந்த நேரத்தில் அந்தப் பெண் சாமியார் வீட்டிற்கு வர, விஜயா அவரை மரியாதையுடன் வரவேற்கிறார். இந்த பூஜை எல்லாம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு இருந்த அண்ணாமலை சாமியாரை பார்த்ததும் நான் வீட்டை விட்டு வெளியே போறேன் என்று சொல்ல அதற்கு சாமியார், வீட்டில் யாரும் வெளியே போகக்கூடாது என்று அவர் கட்டளையிடுகிறார்.
சிந்தாமணியின் நாடகம்
பூஜை இடத்தில் அமர்ந்தவுடன் சாமி வந்தது போல ஆட ஆரம்பிக்கிறார். இதைப் பார்த்து மொத்த குடும்பமும் பயந்து நிற்கிறது. அப்போது விஜயாவை முன்னே அழைத்து, இந்த வீட்டில் இருக்கும் இரண்டாவது மருமகள் தான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம், கடவுள் பல அறிகுறிகள் காட்டியும் நீங்கள் தான் அவளை வீட்டுக்குள் கொண்டு வந்தீர்கள் என்று மீனாவை குற்றம் சொல்கிறார்.
குடும்பத்திற்கு அதிர்ச்சி
உன் மூத்த பையனுக்கு பார்த்த பொண்ணை தான் நீ இந்த வீட்டுக்கு இரண்டாவது மருமகளா ஆக்குன. கடவுள் உனக்கு முதல் முறையே தடை ஏற்படுத்திய பிறகும் நீ கேட்காததால் தான் இன்னைக்கு இவ்வளவு பிரச்சனை என்று சொல்கிறார். இதைக் கேட்ட முத்து கோபத்தில் அவரை அடிக்க பாய்கிறார். ஆனால் அந்த சாமியார் மீண்டும் மீண்டும் மீனாவை குற்றம் சொல்கிறார். மீனா இந்த வீட்டில் இருந்தால் விஜயாவின் தாலிக்கு ஆபத்து என்று எச்சரிக்கிறார். இதனால் மீனா அதிர்ச்சியில் கதறி அழுகிறார். விஜயாவும் பயந்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் திகைக்கிறார்.

கோபத்தில் முத்து
அப்போது அண்ணாமலை, எனக்கும் மீனாவுக்கும் என்ன சம்பந்தம், அவளால் எனக்கு எப்படி பிரச்சனை வரும், நாம நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் என்று கூறி சாமியாரை திட்டுகிறார். உடனே முத்து குத்துவிளக்கை எடுத்து அவரை துரத்தி வெளியே அனுப்புகிறார்.
வெளியே ஓடி வரும் அந்த பெண் சாமியார் சிந்தாமணியை பார்க்கிறார். நான் சொன்னதை எல்லாம் சொல்லிட்டியா என்று சிந்தாமணி கேட்க, எல்லாம் சொல்லிட்டேன், யாரும் நம்பலை ஆனால் விஜயா மட்டும் நம்பிட்டாங்க என்று சொல்கிறார். அதற்கு விஜயா நம்பினால் போதும் என்று சொல்லி சிந்தாமணி பணத்தை கொடுக்கிறார்.
விஜயா எடுத்த முடிவு
இதற்கு பிறகு வீட்டில் விஜயா சோகமாக இருக்க, எல்லோரும் சென்று அந்த அம்மா சொன்னதால் எதுவும் ஆகாது என்று சமாதானம் சொல்கிறார்கள். ஆனால் விஜயா மீனாவை கடுமையாக திட்டி இனிமேல் அவள் இந்த வீட்டில் இருக்கக்கூடாது என்று உறுதியாக சொல்கிறார். ஆனாலும் விஜயாவுக்கு இது மீனாவை பிடிக்காததால் மீனாவை வீட்டை விட்டு போக சொல்வதற்காக விஜய்யா எப்படி பிளான் போடுகிறாரா? என்று முத்து ரவி எல்லோருக்கும் சந்தேகம் இருக்கிறது. விஜயாவிற்காக இனி தா வீட்டை விட்டு போகப் போகிறாரா இல்லையா என்பது நாளைக்கான எபிசோடில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications