சிறகடிக்க ஆசை: திமிரால் சிக்கும் மனோஜ்.. நல்லது செய்த முத்துவுக்கு அவமானம்! அருணின் சூழ்ச்சி, விஜயாவுக்கு பிரச்சனை
சென்னை: (Siragadikka Aasai serial Today Episode ) விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் 2026 பிப்ரவரி 9ஆம் தேதிக்கான எபிசோடில், மனோஜ் - ரோகிணி விவாகரத்து வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளதால், அதற்காக வித்யா மற்றும் மலேசியா மாமாவை சாட்சியாக செட் பண்ணி இருக்கிறார் முத்து. இந்த விஷயம் மனோஜ் மூலம் ரோகிணிக்கு தெரிய வர, அவர் கடுப்பாகிறார்.
அதுபோல ஸ்ருதியின் ரெஸ்டாரண்டுக்கு போகும் ரவி, அவளிடம் மன்னிப்பு கேட்டு, அதே ரெஸ்டாரண்டிலேயே வேலை பார்க்க சம்மதிக்கிறார். ஆனால், ஸ்ருதி ஒரு கண்டிஷன் போடுகிறார். நீத்து என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை நான் வீட்டுக்கு வர மாட்டேன் என சொல்லிவிடுகிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இந்த நிலையில் இன்றைய எபிசோடின் (Siragadikka Aasai serial Feb 9, 2026 episode) ஆரம்பத்தில், ஸ்ருதி சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மீனா, அவரை தனியாக அழைத்து சென்று அட்வைஸ் பண்ணுகிறார். ரவி உங்களோடு வேலை பார்க்க சம்மதித்ததே பெரிய விஷயம். அதற்குள்ளேயே நீத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அடம்பிடித்தால் பிரச்சனை இன்னும் பெரிதாகும். அதற்கு கொஞ்சம் டைம் கொடுங்கள் என கேட்கிறார்.
மீனா கொடுத்த ஐடியா
மீனாவின் பேச்சை கேட்ட ஸ்ருதி, உடனடியாக ரவியை வேலைக்கு சேர சொல்லுகிறார். பின்னர் வீட்டுக்கு வந்து, ஸ்ருதியின் ரெஸ்டாரண்டிலேயே வேலைக்கு சேர்ந்த விஷயத்தை ரவி சொல்ல, அதை கேட்ட குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
மறுபக்கத்தில் ஷோரூமிற்கு மனோஜின் நண்பன் மொட்டை சந்தோஷ் லேட்டாக வருகிறார். ஏன் லேட்டு என்று மனோஜ் கேட்க, உங்க விஷயத்துக்காகத்தான் அலைஞ்சிட்டு வர்றேன் என்று சந்தோஷ் சொல்கிறார். என்னோட விஷயம் என்ன என்று மனோஜ் கேட்டதும், டைவர்ஸ் கேஸுக்கு சாட்சி சொல்ல மலேசியா மாமாவை பார்த்து பேசி வந்ததாக சந்தோஷ் சொல்கிறார்.

ரோகிணியின் அடுத்த நாடகம்
அந்த நேரம் பார்த்து ரோகிணி உள்ளே எண்ட்ரி கொடுக்கிறார். நாம பேசியது எல்லாம் ரோகிணிக்கு கேட்டிருக்குமோ என்று மனோஜ் பயப்படுகிறார். அதனால் ரோகிணியிடமே கேட்டுப் பார்க்கிறார். ஆனால் ரோகிணி தனக்கு எதுவும் தெரியாதது போல நடித்துக் கொள்கிறார்.
உண்மையில் மனோஜ் மற்றும் சந்தோஷ் பேசியது எல்லாமே ரோகிணி ஒட்டுக் கேட்டிருக்கிறார். எனக்கு எதிராக சாட்சி சொல்ல ஆள் செட் பண்ணுறீங்களா, நான் உனக்கு எப்படி செக் வைக்குறேன்னு பாரு என்று மனசுக்குள்ளேயே முடிவு செய்து கொள்கிறார்.
பிறகு தன்னுடைய நண்பர் என்று ஒரு டீலரை கூட்டிக்கொண்டு வந்தாரே அவருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று ரோகிணி சொல்ல, அதற்கு மனோஜ் உன்னுடைய அக்கவுண்டில் இருந்து அனுப்பு என்று சொல்கிறார். ஆனால் ஒரே அக்கவுண்டில் இருந்து அனுப்பினால் தான் சரியா இருக்கும் என்று ரோகிணி சொல்ல தன்னுடைய போனை மனோஜ் கொடுத்து விடுகிறார். அதை வைத்து தான் ரோகிணி ஏதோ சூழ்ச்சி செய்யப் போகிறார் என்று தெரிகிறது.

அருண் போட்ட சபதம்
மறுபுறம் செல்வத்தை முத்து ஜாமீனில் வெளியே கொண்டு வருகிறார். சிறையிலிருந்து வெளியே வந்ததும் செல்வம் முத்துவை பார்த்து கதறி அழுகிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் அருண், வெளிய வந்துட்டேன்னு சந்தோஷப்படாத. இனி ஜென்மத்துக்கு நீ கார் ஓட்ட முடியாது. உன்னோட லைசன்ஸை கேன்சல் பண்ணுவதற்கான வேலைகளை நான் செஞ்சிட்டு இருக்கேன் என்று சொல்கிறார். இதைக் கேட்டதும் செல்வம் மனமுடைந்து போய் கதறி அழுகிறார்.
கோர்ட்டில் ரோகிணி
மறுநாள் டைவர்ஸ் கேஸுக்காக அனைவரும் கோர்ட்டிற்கு செல்கிறார்கள். அங்கு வரும் ஸ்ருதியிடம் விஜயா, என்னம்மா இங்க வந்திருக்கே என்று கேட்கிறார். அதற்கு ஸ்ருதி, இந்த கோர்ட் சீனெல்லாம் சினிமால தான் பார்த்திருக்கேன். அதான் நேர்ல பார்க்கலாம்னு வந்தேன் என்று சொல்கிறார்.
அனைவரும் கோர்ட்டுக்குள் அமர்ந்திருக்க, ரோகிணி எண்ட்ரி கொடுக்கிறார். வந்ததும் விஜயாவைப் பார்த்து என்ன ஆண்டி மெலிஞ்சிட்டீங்களே என்று நக்கலாக பேசுகிறார். ரோகிணியின் பேச்சில் இருக்கும் திமிரைப் பார்த்து குடும்பத்தினர் அனைவரும் கடுப்பாகிறார்கள்.
இனி விசாரணை நேரத்தில் ரோகிணி என்னென்ன குண்டுகளை தூக்கிப் போடப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இன்றைய எபிசோடு முடிவடைந்துள்ளது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கதிரை காப்பாற்ற வந்த முத்துவேல்... ஆனால் அதற்குள் நடந்த கொடூரம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications