சிறகடிக்க ஆசை: ஓவராக சவுண்டு விட்ட விஜயாவிற்கு அதிர்ச்சி கொடுத்த முத்து.. இது நல்லாவே இல்ல! அடுத்த சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜனவரி 19ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜ்க்கு ரோகிணி கொடுத்த பிரச்சனை போதாது என்று இப்போது புதிய பிரச்சனை வந்திருக்கிறது. அதே நேரத்தில் தன்னுடைய மகனுக்காக விஜயா புது பஞ்சாயத்தில் சிக்க போகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரோகிணி, ஸ்ருதியின் ரெஸ்டாரண்ட்க்கு போகிறார். அங்கு ஸ்ருதியும் மீனாவும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அவர்களிடம் உங்களிடம் நான் ஒரு உதவி கேட்டு வந்திருக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு மீனா உனக்கு ஏற்கனவே செஞ்ச உதவிக்கு தான் நான் இப்ப பிரச்சனையில் இருக்கிறேன் மீண்டும் உதவி கேட்டு வந்திருக்கியா என்று திட்டுகிறார்.

ஆனால் ரோகிணி நீங்க எல்லாரும் நிம்மதியா வாழ்ந்துட்டு இருக்கீங்க அதனால உங்களுக்கு என்னோட பிரச்சனை தெரியல. நீங்க ரெண்டு பேரும் தான் எனக்கு உதவ முடியும். நான் எப்படியாவது மனோஜ் கூட மீண்டும் வாழ வேண்டும். அதற்கு நீங்கள் எனக்கு ஹெல்ப் பண்ணனும் என்று சொல்ல, அதற்கு மீனா நீ பண்ணின வேலைக்கு உனக்கு உதவி பண்ணி மறுபடியும் எனக்கு கெட்ட பெயர் கிடைக்கனுமா என்று கேட்கிறார்.
அதற்கு ரோகிணி நீங்க எனக்கு உதவி பண்ணலன்னா நாளைக்கு உங்களுக்கு ஒரு பிரச்சனை வரும்போது என்னால உதவி செய்ய முடியாது என்று சொல்ல, என்ன மிரட்டுகிறியா? இதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம் தயவுசெய்து இங்கிருந்து கிளம்பு என்று திட்டி அனுப்புகிறார்.
மறுபக்கத்தில் அண்ணாமலை வீட்டிற்கு அவருடைய அம்மா வந்திருக்கிறார். அவர் திடீரென வந்ததை பார்த்து, எல்லோரும் அதிர்ச்சியில் இருக்க, அவர் மீனா திடீரென மயங்கி விழுந்த விஷயம் தெரிந்து வந்தேன் என்று சொல்ல நல்லவேளை ரோகிணி விஷயம் தெரியல என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கும் போது, எனக்கு எல்லா விஷயமும் தெரியும் என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
அப்போது எப்படி உங்களுக்கு தெரியும் என்று அண்ணாமலை கேட்க, அதற்கு விஜயா நான் தான் எல்லா விஷயத்தையும் சொல்லி உங்க அம்மாவை வர வைத்தேன் என்று சொல்கிறார். அப்போது இவ வர வைத்திருந்தா என்றால் உள்குத்து இல்லாமல் இருக்காதே என்று அண்ணாமலை நினைத்துக் கொண்டிருக்கும் போது, விஜயா மனோஜ்க்கு வேற கல்யாணம் பண்ணனும் அதற்காகத்தான் உங்க அம்மாவ வர வைத்தேன் என்று சொல்கிறார்.
அதற்கு அண்ணாமலை வழக்கம் போல விஜயாவை திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மனோஜ் வந்து பாட்டியை பார்த்ததும் பாட்டியை கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்கிறார். பாட்டி எல்லாம் நல்லதுக்கு என்று நினைத்துக்கொள் என்று ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்புகிறார். இதை அடுத்து மறுநாள் காலையில் மனோஜ் ரூமில் இருந்து வெளியே வரும்போது என்னோட சட்டையை எங்கே என்று கேட்ட படியே வருகிறார்.
அப்போது அதை பார்த்து விஜயா கோபப்பட்டு திட்டுகிறார். அதற்கு வீட்டில் இருக்கும் எல்லோரும் இந்த வீட்ல ரெண்டு வருஷமா வாழ்ந்து இருக்கா அந்த நினைவுகள் வீட்டில் இருக்கும் அதனால மனோஜ் இப்படி தெரியாம கூப்பிடுறது ஒன்னும் தப்பு இல்லை எனறு சொல்கின்றனர். அதற்கு விஜயா அந்த ஏமாற்றுக்காரியோட போட்டோ வீட்ல இருக்கதால தான் இவன் அவளை நினைச்சுட்டே இருக்கிறான் என்று ரோகிணியின் கல்யாண போட்டோவை தீ வைத்து கொழுத்த சொல்கிறார். மனோஜம் அப்படியே செய்து விடுகிறார்.
அடுத்ததாக முத்து மீனாவை மன்னித்து அவரிடம் நல்லபடியாக பேசுகிறார். அப்போது மீனாவிற்க்கு அல்வா கிண்டி கொடுக்கிறார். பிறகு எல்லோருக்கும் முத்து அல்வா கொடுக்க, எல்லோரும் சாப்பிட்டு விட்டு வாய் பேச முடியாமல் இருக்கின்றனர். அண்ணாமலை வந்து என்னாச்சு என்று கேட்க, ஒரு வழியாக வாயைத் திறந்த விஜயா இவன் அல்வா என்று கோந்து கிண்டி வைத்திருக்கிறான் என்று திட்டி விட்டு போகிறார்.
அதைத்தொடர்ந்து முத்துவும் மீனாவும் ரொமான்ஸாக பேசிக் கொண்டிருக்கின்றனர். மறுநாள் காலையில் மனோஜ்க்கு கடன் கொடுத்த பைனான்சியர் வீட்டிற்கு வந்து, ரோகிணி வீட்டை விட்டு போனது எனக்கு தெரிய வந்தது. நான் அந்த பொண்ணை நம்பி தான் கடன் கொடுத்தேன் உங்க பையனுக்கு சொந்த அறிவு கிடையாது, அவன் ஒரு இளிச்சவாயன் இவனால் கடனை திருப்பிக் கொடுக்க முடியாத என்ற நம்பிக்கை எல்லாம் எனக்கு இல்ல என்று அசிங்கப்படுத்தி பேசுகிறார்.
அதற்கு அண்ணாமலையும், முத்துவும் அன்னைக்கு வேற மாதிரி பேசிட்டு இன்னைக்கு இப்படி பேசுறீங்களே என்று கேட்க, எனக்கு என்னோட பணம் தான் முக்கியம் என்று பைனான்ஸியர் சொல்கிறார். இதனால் விஜயா பணத்துக்கு நான் கேரண்டி என்று அவர் கொடுத்த பத்திரத்தில் கையெழுத்து போடுகிறார். குடும்பத்தினர் எல்லோரும் சொல்லியும் கேட்காமல் விஜயா பத்திரத்தில் அவசரப்பட்டு கையெழுத்து போட்டு இருக்கிறார். இனி இதை வைத்து தான் அடுத்த பஞ்சாயத்து வரப்போகிறது என்று தெரிகிறது.
-
அந்த நடிகர் என் நகையை ஏமாற்றி விட்டார்... பிக் பாஸ் தாமரை செல்வி கண்ணீர் வீடியோ! சீரியல் பழக்கம் சீரியஸானது! -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்: ஒன்று சேர்ந்த மருமகள்கள்.. கோமதி குடும்பத்தில் பெரிய குழப்பம்! பாவம் பாண்டியன் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications