சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு போனவன் தானே! முத்துவை சீண்டிய வாசுதேவன்.. விழுந்த அடி.. உண்மை உடைபடுமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி மற்றும் ரோகிணியின் தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷனில் முத்து பிரச்சனை செய்வாரா? இல்லையா? என்று எதிர்பார்ப்பில் மக்கள் இருக்கும் நிலையில் ஏற்கனவே ஒளிபரப்பான வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அது கடந்த ஜனவரி 27, 2023 அன்றைய எபிசோடின் வீடியோ. அதில் அண்ணாமலை ரயில்வேயில் இருந்து ரிட்டையர்டு ஆகும் போது அங்கு நடந்த ஒரு பங்க்ஷனில் முத்து மற்றும் ஸ்ருதி பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை பற்றிய வீடியோ தான்.

அந்த வீடியோவில் ஸ்ருதியின் அப்பா வாசுதேவனும் அம்மா சுதாவும் விஜயா மற்றும் அண்ணாமலையை அவமானப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். விஜயாவை பார்த்து நீங்க இத்தனை வருஷமா ஒரு இன்ஜின் டிரைவரோட எப்படித்தான் வாழ்க்கையை நடத்தி முடிச்சீங்கன்னு தெரியல? என்னால எல்லாம் இவ்வளவு கஷ்டத்துல வாழ்க்கையும் நடத்த முடியாது என்று சொல்ல, அதற்கு விஜயா அண்ணாமலையை பார்த்து முறைத்துக் கொண்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து வாசுதேவன் இனி தன் அண்ணாமலைக்கு கஷ்டம். அண்ணாமலை வேற ஏதாவது வேலை பார்த்து இருந்தா கூட அவருக்கு ஒரு ரிட்டயர்மென்ட் வந்து இருக்கும். இல்ல ஒரு பஸ் டிரைவராக இருந்திருந்தா கூட இந்த வேலையில் இருந்து ரிட்டயர்டு ஆனதும் வேற ஏதாவது வண்டி ஓட்ட போயிடலாம். ஆனா இவருக்கு ட்ரெயின் ஓட்டுவதை தவிர வேறு எந்த வேலையும் தெரியாதே என்று அவமானப்படுத்திகொண்டே இருக்க,
இதை கேட்டு கோபமான முத்து என்ன நீங்க வந்த நேரத்தில் இருந்து பாத்துட்டு இருக்கேன். நீங்க எங்க அம்மா அப்பாவை கேவலப்படுத்திட்டு இருக்கீங்க என்று திட்ட, அதற்கு வாசுதேவன் இது உன் மகன் முத்து தானே? என்று அண்ணாமலையிடம் கேட்க அதற்கு அண்ணாமலை ஆமாம் என்று சொல்ல இவன் சின்ன வயசுலயே சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து வந்தவன் தானே இன்னும் மாறலையே என்று சொல்ல, ஒரு கட்டத்தில் கோபமான முத்து வாசுதேவனை அடிக்க சட்டையை பிடித்து தள்ளுகிறார்.
அதனால் சுதா நான் போலீசுக்கு போன் பண்ணுகிறேன் என்று சொல்ல அப்போது அண்ணாமலை அவன் சின்ன வயசிலேயே அதிகமாக கஷ்டப்பட்டுட்டான் மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டு அவர் காலில் விழப்போக முத்து அவரை தடுத்து, அங்கிருந்து வாசுதேவன் மற்றும் சுதாவிடம் சண்டை போட்டு கூட்டிட்டு வந்து இருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதாவது இப்போது ஸ்ருதியின் பெற்றோர் ஒரு பக்கம் முத்துவை கோபப்பட வைத்து இந்த பங்ஷனில் பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதுபோல ரோகினியும் முத்துவை கோபப்பட வைத்து பிரச்சனை வந்தால் நாம தப்பிரலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் மீண்டும் ஸ்ருதி அப்பா வாசுதேவன், முத்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்தது குறித்து பேசுவாரா? அதனால் மீனா கோபப்பட்டு முத்துவுக்காக சண்டை போடுவாரா என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதுவரைக்கும் முத்து மண்டபத்திற்குள் அமைதியாக வாயில் கையை வைத்தபடி இருக்கிறார். அதுபோல தற்போது வெளியான வீடியோக்களில் கூட ஸ்ருதி மற்றும் ரோகிணி இருவருடைய கழுத்திலும் மஞ்சள் தாலி மாற்றப்பட்டு இருக்கிறது. அப்பாடி பார்க்கையில் இந்த சீரியலில் தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் பிரச்சனை இல்லாமல் முடிந்துவிடும். ஆனால் அதற்குப் பிறகுதான் ஸ்ருதி அப்பா முத்துவை ஏதோ பேச அதனால் பிரச்சனை வர இருக்கிறது.
ஆனால் இந்த முறை முத்து பிரச்சனை செய்வதற்கு வாய்ப்புகள் குறைவாகத்தான் இருக்கிறது. மீனா பிரச்சனை செய்தாலும் பங்க்ஷனில் குழப்பம் ஏற்படும். இதை சொல்லி ரோகிணி தன்னுடைய தந்தை விஷயத்தில் தப்பித்து விடலாம் காரணம் ரோகினி இப்போது குடும்பத்திடம் மாட்டுவதற்கு வாய்ப்பு இல்லை. ரோகினி விஷயம் வெளியே தெரியவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீங்க? அதை கமெண்டில் சொல்லிட்டு போங்க
-
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications