சிறகடிக்க ஆசை விஜயாவிற்கு இப்படி ஒரு திறமையா? கோவில் யானைக்காக செய்த செயல்.. குவியும் பாராட்டு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா கேரக்டரில் நடிகை அணிலா ஸ்ரீ நடித்து வருகிறார். இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் பலருடைய வாழ்த்துக்களை பெற்று வருகிறது. அதாவது சீரியலில் வில்லியாக நடித்துக் கொண்டிருந்தாலும் நிஜத்தில் இவர் செய்த செயல் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
அந்த வகையில் சினிமாவாக இருந்தாலும் சரி, சீரியலாக இருந்தாலும் சரி அதில் வில்லனாக நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் நிஜத்தில் அப்படி இருப்பது கிடையாது என்பதற்கு பலரை உதாரணமாக சொல்லலாம். அந்த வகையில் நடிகர் நம்பியார் பல திரைப்படத்தில் மிரட்டும் வில்லத்தனம் செய்தாலும் நிஜ வாழ்க்கையில் மிகவும் அமைதியான கேரக்டராக தான் இருந்திருக்கிறார்.

அந்த வரிசையில் பலரை சொல்லிக் கொண்டே போகலாம். அதில் சிறகடிக்க ஆசை சீரியலின் மூலமாக பலருடைய திட்டல்களை வாங்கிக் கொண்டிருக்கும் நடிகை அணிலாவும் ஒருவர். இவர் சீரியலில் வீட்டு வேலை எதுவும் செய்யாமல் எல்லா வேலையும் தன்னுடைய மருமகள் மீனாவை செய்ய வைத்து அதிகாரம் செய்து கொண்டிருக்கிறார்.
அதுபோல மீனா மற்றும் முத்துக்கு மட்டும் ஓரவஞ்சனையாக அவர்கள் மீது கோபத்தை எப்போதும் காட்டிக் கொண்டிருக்கும் விஜயா மனோஜ் மற்றும் ரவிக்கு தனி பாசம் காட்டுகிறார். இதனாலையே இவரை பலரும் திட்டிக் கொண்டிருக்கிறார். இன்றைய எபிசொட்டில் கூட மனோஜ் மீது முத்து தண்ணீரை ஊற்றி விட்டார் என்ற கோபத்தில் மீனாவிடம் காது கூசும் அளவிற்கு அசிங்கமாக விஜயா பேசி இருந்தார்.
அது அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சீரியலில் நடிப்பு வேறு நிஜம் வேறு என்பது அணிலா பல இடங்களில் கூறியிருக்கிறார். அதுபோல அணிலா மலையாள நடிகையாக இருந்தாலும் தமிழில் ஒரு சில சீரியல்களில் நடித்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்ன தம்பி, பாவம் கணேஷன் சீரியல் மூலமாக இவர் பெரிய அளவில் பிரபலமடைந்தார்.

அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் டான்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட அணிலா பலரையும் வியக்க வைத்திருந்தார். சீரியலில் மாமியாராக நடித்துக் கொண்டிருக்கும் அணிலா நிஜத்தில் விஜய் டிவியில் டான்ஸ் நிகழ்ச்சியில் கதாநாயகிகளோடு போட்டி போட்டு டான்ஸ் ஆடி பலரையும் வியக்க வைத்திருந்தார்.
தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு சீரியல்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அணிலா வீட்டில் ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் கோவில் யானைக்கு 3 அடி நெட்டி பட்டம் செய்து இருக்கிறார். அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அணிலா பகிர அதற்கு அதிகமானோர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications