சிறகடிக்க ஆசை: நன்றி கெட்ட விஜயாவால் மீனாவுக்கு வந்த சிக்கல்? முத்து எடுக்கும் முடிவு! பரபரப்பான திருப்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளைய எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் விஜயாவால் மீனாவிற்கு பெரிய பிரச்சனை இருக்கிறது. மீனாவின் தன்மானத்தை காப்பாற்றுவதற்காக முத்து என்ன முடிவெடுக்க போகிறார் என்று பார்க்கலாம்.
ரோகிணி பற்றிய ஒரு உண்மை தெரிந்ததற்கே விஜயா வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருக்கிறார். ரோகினி பணக்கார வீட்டு பொண்ணு இல்லை என்று தெரிந்ததும் தன்னுடைய மகனை ரோகிணியிடம் இருந்து பிரித்து வைத்திருக்கிறார். மனோஜின் ஷோரூம் கூட போகக்கூடாது என்று கண்டிஷன் போட்டு இருக்கிறார்.

மிரட்டிய விஜயா
அதுபோல ரோகிணியின் சம்பாத்தியம் தனக்கு வேண்டும் என்று மிரட்டி வைத்திருக்கிறார். எப்படியாவது மீண்டும் நல்ல பேரை வாங்க வேண்டும் என்று ரோகிணியும் விஜயா சொல்வதற்கெல்லாம் சரி என்று தலையை ஆட்டி கொண்டு இருக்கிறார். நேற்று மனோஜ்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் அவரை ரோகிணி தான் கவனித்து கொண்டார்.
புது ஆர்டர்
அப்போது மனோஜ் ரோகிணியிடம் பேசியதை பார்த்து ரோகிணி கண் கலங்கி அழுதார். ஆனால் மனோஜும் ரோகிணியும் பேசி விட்டார்கள் என்பது தெரிந்ததும் விஜயா கோபத்தில் இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க விஜயாவுக்கு பிடிக்காத மருமகளான மீனாவின் வளர்ச்சியை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று விஜயா முயற்சி செய்து கொண்டே இருக்கிறார். ஏற்கனவே முதல் முறை பெரிய ஆர்டர் எடுக்கும் போது பல நாடகம் போட்டார் ஆனால் அதையும் மீறி மீனா ஜெயித்துவிட்டார்.
பண உதவி
இப்போது இரண்டாவது முறையாக புது ஆர்டர் எடுத்திருக்கிறார். அதற்காக இரண்டு லட்சம் ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதனால் மீனாவுக்கு இந்த ஆர்டர் கிடைக்காது என்ற தைரியத்தில் விஜயா இருக்கிறார். ஆனால் மீனாவுக்கு அவருடைய தங்கை சீதா பண உதவி செய்து இருக்கிறார். இதனால் அவர் எதிர்பார்த்த பணம் கிடைத்ததும் அதை மண்டபத்து மேனேஜரிடம் அட்வான்ஸ் கொடுப்பதற்காக கிளம்புகிறார்.
ரகசியத்தை உளறிய மீனா
இந்த நிலையில் நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் மீனா தான் அட்வான்ஸ் கொடுத்து விட்டு வரேன் என்று அண்ணாமலை இடம் சொல்கிறார். ஏற்கனவே மீனாவின் ஆர்டரை எப்படி தடுக்கலாம் என்று விஜயா பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார் என்பது மீனாவுக்கும் தெரியும். ஆனாலும் விஜயா முன்பு வைத்து அண்ணாமலையிடம் மீனா மண்டபத்துக்குப் போகும் விஷயத்தை சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

விஜயா செய்த சதி
உடனே விஜயா சிந்தாமணிக்கு போன் போட்டு மீனா பணம் கொண்டு வருவதையும் சொல்லிவிடுகிறார். அதனால் சிந்தாமணி தன்னுடைய அடியாள்களிடம் சொல்லி மீனா இந்த மண்டபத்துக்கு தான் பணத்தோட வருகிறா, அவளிடமிருந்து பணத்தை பிடுங்க வேண்டும் என்று பழைய படத்தைப் போல பிளான் போட்டு இருக்கிறார்கள். சிந்தாமணி சொல்லிக் கொடுத்தது போல அவருடைய ஆட்களும் மீனாவிடமிருந்து பணத்தை பிடுங்கிக் கொண்டு போகிறார்கள்.

கதறி அழும் மீனா
கடைசியில் அடியாள்கள் பணத்தைக் கொண்டு போய் விட மீனா அழுது கொண்டு இருக்கிறார். ஏற்கனவே முத்துவும் மீனாவும் சண்டையில் இருக்கிறார்கள் இந்த நிலையில் இப்போது மீனாவிற்காக முத்து உதவி செய்வாரா? இல்லையா? என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. மீனாவிற்கு பணம் திரும்ப கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா? அல்லது இந்த முறை மீனா தோற்றுப் போய் அவமானப்பட்டு நிற்கப் போகிறார் என்று நினைக்கிறீர்களா மக்களே?












Click it and Unblock the Notifications