சிறகடிக்க ஆசை: க்ரிஷ் பற்றி நேரடியாக ரோகிணியிடம் விஜயா கேட்ட கேள்வி.. அதிர்ச்சி கொடுத்த முத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் பத்தாம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் க்ரிஷை தத்தெடுக்க போகும் விஷயத்தைப் பற்றி முத்து வீட்டில் சொல்ல, இதைக் கேட்டு கோபமான விஜயா ரோகிணியிடம் க்ரிஷ் பற்றி கேட்டு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதை பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் அடுத்த வாரத்தில் சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. காரணம் ரோகிணியின் மகன் க்ரிஷை தத்தெடுக்க வேண்டும் என்று மீனாவும் முத்துவும் முடிவெடுத்திருக்கின்றனர். ஆனால் கோவிலில் சீட்டு எழுதி போட்டு பார்த்ததில் வேண்டாம் என்று முடிவு வந்திருக்கிறது. ஆனாலும் அதை மீறி முத்து தான் க்ரிஷை தத்தெடுக்க வேண்டும் என்ற முடிவோடு வீட்டில் வந்து பேசுகிறார்.

இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஏற்கனவே கிரிஷ் அந்த பாட்டி அம்மாவின் மகனின் பையன் கிடையாது. அந்த பையன் அத்தை என்று சொல்லிக் கொண்டிருப்பது தான் அவனுடைய அம்மா. அவருக்கு சின்ன வயசிலேயே பிடிக்காத பணக்காரனோடு கல்யாணம் செய்து வைத்திருந்தனர். ஆனால் அந்த பணக்காரர் கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாளில் இறந்து போய்விட்டார்.
அதனால் அந்த பொண்ணு க்ரிஷை மகனாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று வீட்டில் சொல்ல, இதைக் கேட்ட மனோஜ் அந்த பொண்ணு க்ரிஷை மகனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அந்த பொண்ணு தனக்குன்னு ஒரு பையன் இருப்பதை யாரிடமும் சொல்லாமல் உலகத்தையே ஏமாற்றிக் கொண்டுதானே இருப்பா. ஒருவேளை அந்த பொண்ணு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்க கூட முயற்சி செய்வா.. அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க போற கேனை எங்க இருக்கானோ என்று பேசி இருக்கிறார்.
அதைத் தொடர்ந்து பேசிய முத்து நாங்க க்ரிஷை தத்தெடுக்க போகிறோம் என்று சொல்ல, அதைக் கேட்டு விஜயா கோபப்படுகிறார். இந்த வீட்டில் இருந்துகொண்டே அந்தப் பையனை தத்தெடுக்கக்கூடாது என்று விஜயா கோபப்படுகிறார். இதை எல்லாம் கேட்டுக்கொண்டு ரோகிணி அதிர்ச்சியாகி நினைக்கிறார். பிறகு வீட்டிற்கு ரோகிணி வந்ததும் விஜயா வாமா ரோணினி நம்ம வீட்டுக்கு கட்டு போட்டுட்டு ஒரு பையன் வந்தானே அந்தப் பையனை இவங்க தத்து எடுத்து வளர்க்க போறாங்களாம் என்று சொல்ல,
அதற்கு முத்து யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை நாங்க அந்த பையனோட பாட்டி சம்மதம்னு சொன்னா தத்தெடுத்து வளர்க்க போறோம் என்று சொல்ல ரோகிணி எதுவும் பேச முடியாமல் திணறிக் கொண்டு நிற்கிறார். இதற்கு ரோகிணி என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்கிறது, அதே நேரத்தில் வழக்கம் போல இந்த முறையும் ரோகிணி தப்பித்து விடுவாரா? அல்லது தன்னுடைய அம்மா மூலமாக க்ரிஷை தத்தெடுக்கும் முயற்சிக்கு தடை சொல்வாரா என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது.
ஏற்கனவே தன்னுடைய அம்மாவிடம் இனி முத்துவும் மீனாவும் இந்த வீட்டிற்கு வரக்கூடாது.. அப்படியே அவங்க வந்தா கூட நீ பேசக்கூடாது என்று மிரட்டி இருக்கிறார். அதனால் அடுத்த வாரத்தில் இந்த சீரியலில் பல திருப்பங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் சீரியல்.. அதுவும் இதுதான் காரணமா? பீல் பண்ணும் ரசிகர்கள் -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications