சிறகடிக்க ஆசையில் நாளை: ரோகிணி கிரிஷிடம் பேசிய வார்த்தை! முத்துவிடம் போட்டுக் கொடுக்கும் மீனா.. செம சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளைக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணி மற்றும் க்ரிஷ் இருவரும் பேசுவதை மீனா பார்த்து விடுகிறார். அப்போது எதிர்பார்க்காத சம்பவம் நடைபெறுகிறது. அதை பற்றி மீனா முத்துவிடம் போட்டுக் கொடுக்கிறார் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் யாரும் எதிர்பார்க்காத திருப்பங்கள் அடுத்தடுத்து வர இருக்கிறது. ஏற்கனவே இந்த சீரியலில் ரோகிணி பற்றிய ஒரு உண்மை குடும்பத்தினருக்கு தெரிய வந்திருக்கிறது. அதுவும் அவர் பணக்கார வீட்டு பொண்ணு இல்லை என்பதை தெரிந்ததும் விஜயா தன்னுடைய சுய ரூபத்தை காட்டிக் கொண்டிருக்கிறார். ரோகிணியை எப்படியாவது மனோஜ் உடைய வாழ்க்கையில் இருந்து கழட்டி விட்டு விட்டு ரவியின் ஓனர் நீத்துவை மனோஜ்க்கு கல்யாணம் பண்ண வைக்க வேண்டும் என்பதுதான் விஜயாவின் பிளானாக இருக்கிறது.

Siragadikka aasai serial vijay tv

இப்படியான நிலையில் இப்போது ரோகிணிக்கு அடுத்த பிரச்சனை வர இருக்கிறது. அதாவது ரோகிணியின் அம்மா ரோட்டில் போகும்போது ஒரு பைக்கு மோதியதால் அவருக்கு அடிபட்டு விடுகிறது. அதனால் ஹாஸ்பிடலில் இருக்கிறார். அப்போது கிரிஷை முத்து தன்னுடைய வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார். ஆனால் விஜயா வழக்கம் போல கிரிஷ் வீட்டில் இருக்கக் கூடாது என்று பிரச்சனை செய்தாலும் அவன் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று அதிகப்படியானோர் சொன்னதால் இப்போது வேறு வழியில்லாமல் கிரிஷ் தங்குவதற்கு அனுமதித்து இருக்கிறார்.

இந்த நிலையில் கிரிஷ் ரோகிணியின் அறைக்கு வந்து நான் உன்னோடு படுத்து தூங்குகிறேன் அம்மா என்று பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். நாளைக்கான ப்ரோமோவில் ரோகிணியிடம் நான் உன் கூடவே இருக்கிறேன் அம்மா என்று கிரிஷ் சொன்னதற்கு ரோகிணி இப்போதைக்கு என் கூட நீ இருக்க முடியாது நீ முத்து அங்கிள் கூட போய் தூங்கு ஆனால் அம்மாவை பற்றி எந்த உண்மைகளையும் சொல்லக்கூடாது என்று சொல்கிறார்.

ஆனால் கிரிஷ் உங்க கூட தான் இருப்பேன் என்று அடம் பிடித்துக் கொண்டு இருக்க ரோகிணி கிரிஷை ரூமை விட்டு வெளியே தள்ளுகிறார். ஆனால் கிரிஷ் போகாமல் அடம் பிடித்துக் கொண்டிருக்க அவரை அடித்து விடுகிறார். அந்த நேரத்தில் சத்தம் கேட்டு மீனா ஓடி வந்து பார்த்து ரோகிணியிடம் நீங்கள் எதுக்காக அந்த பையனை அடிச்சீங்க என்று வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். ஆனால் ரோகிணி நான் அடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அப்போது முத்து வந்து என்ன பிரச்சனை என்று கேட்க இவங்க கிரிஷை அடிச்சு இருக்காங்க என்று சொல்கிறார். உடனே முத்து எதுக்காக இந்த சின்ன பையனை அடிச்சீங்க என்று ரோகிணியிடம் வாக்குவாதம் செய்கிறார். அதற்கு ரோகிணி நான் அடிக்கவே இல்ல வேணும்னா கிரிஷை கேளுங்க என்று சொல்ல முத்து கிரிஷிடம் கேட்கும் போது அவர் என்ன சொல்லப் போகிறார் என்ற கேள்வியோடு ப்ரோமோ முடிவு அடைந்திருக்கிறது.

ரோகிணி பற்றி இப்போதைக்கு கிரிஷ் மாட்டி விட வாய்ப்பு இல்லை. ஆனால் ரோகிணி மற்றும் கிரிஷ் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்க்கும்போதுதான் அடுத்த பஞ்சாயத்து வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே விஜயா டான்ஸ் ஸ்கூலில் டான்ஸ் கற்றுக்கொள்ள வந்த பெண் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கேட்டு இப்போது விஜயாவுக்கு மயக்கமே வந்திருக்கிறது. அந்த பெண்ணின் அம்மாவும் அவருடைய குடும்பத்தினரும் விஜயா வீட்டிற்கு வந்து விஜயாவை அடிக்க வர அவரை மீனாதான் காப்பாற்றுகிறார். இதனால் மீனா மீது பாசம் வந்து விஜயா ரோகிணியை வீட்டை விட்டு துரத்த போகிறாரா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+