நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ரூ.310 கோடி தானம்.. 100 பவுன் தங்க பேனா தந்ததுமே. நகையை கழட்டிய கமலா
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை, எழுத்தாளர் முனைவர் கா.வெ.சே மருது மோகன், 'சிவாஜி கணேசன்' என்ற நூலை சில வருடங்களுக்கு முன்பு எழுதியிருந்தார். தற்போது பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மருதுமோகன், சிவாஜி கணேசன் செய்த தான தர்மங்கள், நிதி உதவுகள் குறித்து விரிவாக பேசியிருக்கிறார்.. இது நடிகர் திலகம் ரசிர்களை புல்லரிக்க வைத்து வருகிறது.
Wow Tamizhaa என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மருது மோகன், "12 வயதில் மனோகரா நாடகத்தில் சிவாஜி நடித்து கொண்டிருந்தார்..

வெள்ளித்தட்டு பரிசு
ஒருநாள் மனோகரா கேரக்டரில் நடித்து வந்தவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. அதுவரை மனோகரா அம்மாவாக பெண் கேரக்டரில் நடித்து கொண்டிருந்த சிவாஜி கணேசன், மனோகரா வேடத்தில் நடித்தார்..
அந்த நாடகத்தை பார்த்த கொல்லங்கோடு ராஜா, சிவாஜியின் நடிப்பை கண்டு அசந்து, திவானிடம் சொல்லி, ஒரு பெரிய வெள்ளித்தட்டை பரிசாக தந்தார்..
தன்னுடைய அம்மாவிடம் போகும்வரை, அந்த வெள்ளித்தட்டை தினமும் தலைமாட்டில் வைத்து கொண்டு படுத்துள்ளார் சிவாஜி...ஆனால், நாடகம் சரியாக போகவில்லை. நாடக கம்பெனியில் அனைவருமே பட்டினி.. ஊருக்கு வெளியே கிழங்கு தோண்டி சாப்பிட்டுள்ளனர்.. எனினும் தன்னை சுற்றி எல்லாருமே பட்டினியாக இருப்பதை கண்ட சிவாஜி, தன்னிடமுள்ள வெள்ளித்தட்டை, நாடக கம்பெனி ஓனரிடம் தந்து விற்க செய்தார் சிவாஜி.. 12 வயதில் சிவாஜி கணேசன் தந்த முதல் தானம் இதுதான்.
முதல் சம்பளம் தந்த நடிகர் திலகம்
எல்லா விஷயத்துக்கும் உதவி செய்திருக்கிறார் சிவாஜி கணேசன்.. முக்கியமாக தேசத்துக்காக நிறைய உதவிகளை செய்துள்ளார்.. 60களில் ஒருமுறை மகாராஷ்டிராவில் கொய்னா அணை இடிந்துவிட்டது..
அப்போது முதலமைச்சராக இருந்த ஒய்.பி.சவானுக்கு 11 லட்சம் ரூபாயை உடனே இங்கிருந்து அனுப்பிவைத்தார் சிவாஜி.
பராசக்தி பட ரிலீஸானபோது, ஒருநாள் பாரீஸ் கார்னரில் சகஸ்ரநாமம் டென்னிஸ் விளையாடி கொண்டிருந்ததால், அவரை பார்க்கசிவாஜி சென்றார்.. அப்போது டென்னிஸ் கிருஷ்ணன் என்ற பிரபலமானவரும் அங்கே இருந்தார்..
விம்பிள்டன் விளையாட்டுக்காக வெளிநாடு செல்ல வேண்டியிருந்ததால், தன்னுடைய முதல் படத்தின் 250 ரூபாய் சம்பளத்தை அப்படியே எடுத்து தந்துவிட்டார் சிவாஜி கணேசன்.. சிவாஜி தந்த அந்த பணம்தான் தன்னுடைய வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று டென்னிஸ் கிருஷ்ணன் பலமுறை சொல்லி கொண்டேயிருந்தார்..
எஸ்டி சுந்தரம் என்ற கவிஞர் இருந்தார்.. அவரது வீடு ஏலத்துக்கு வரப்போகிறது என்ற விஷயம் சிவாஜிக்கு தெரியவந்தது.. அந்த வீட்டை ரூ.3000 தந்து அவருக்கே மீட்டு தந்தார்
நகைகளை கழட்டி தந்த கமலா அம்மா
தானமும் தர்மமும் தனிப்பட்ட முறையில் இருக்க வேண்டுமே தவிர, விளம்பரப்படுத்துவதில் தனக்கு விருப்பமில்லை என்பார் சிவாஜி கணேசன்..
புயல் வந்தபோது, 1 லட்சம் உணவுப்பொட்டலங்களை காமராஜரிடம் தந்துள்ளார் சிவாஜி.. 800 மூட்டை அரிசி தந்துள்ளார்.. கிலோ கணக்கில் பால் பவுடர் வாங்கி தந்துள்ளார்..
நேருவிடம் ஏகப்பட்ட நிதிகளை தந்துள்ளார்.. சத்துணவு திட்டத்தில் 1 லட்சம் ரூபாய் தந்த முதல் நபர் சிவாஜிதான்.. இதன்காரணமாக சிவாஜி பிலிம்ஸ் இருக்கக்கூடிய தெருவுக்கு முந்தின தெருவுக்கு சிவாஜிகணேசன் பெயரை வைக்க மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதனை வேண்டாம் என்று நடிகர் திலகம் மறுத்துவிட்டார்..
லால் பகதூர் சாஸ்திரி பாகிஸ்தான் போர் சமயத்தில் நிதி திரட்டுவதற்காக ஒவ்வொரு மாநிலமாக வருகை தந்தார்.. அப்போது தமிழ்நாட்டுக்கும் வந்தார்..
100 சவரன் தங்க பேனா
அந்த நேரத்தில் பந்துலு டைரக்ஷனில் ஸ்கூல் மாஸ்டர் என்ற கன்னட படத்தில் நடித்திருந்தார் சிவாஜி கணேசன்.. இதற்காக 100 பவுன் உள்ள தங்க பேனாவை சம்பளமாக சிவாஜியிடம் தந்தார் பந்துலு.. அந்த தங்க பேனாவை லால் பகதூர் சாஸ்திரியிடம் தந்துவிட்டார் சிவாஜி.. அப்போது சிவாஜியுடன் வந்திருந்த கமலா அம்மாள், தன்னிடமிருந்த 450 சவரன் நகைகளையும் கழட்டி, லால் பகதுஹர் சாஸ்திரியிடம் தந்துவிட்டார்.
அந்தவகையில், 1953 முதல் 1993 வரை சிவாஜி கணேசன் செய்த தான தர்மங்கள், ரூ.310 கோடியாகும்.. 1993-லேயே ரூ.310 கோடிக்கு அவரது தானங்கள் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications