அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டு சிவகார்த்திகேயன் பகிர்ந்த மகிழ்ச்சி செய்தி.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய அம்மாவின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அம்மாவோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து நீண்ட பதிவு வெளியிட்டிருக்கிறார். அவருடைய பதிவுக்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அடி எடுத்து வைத்து இன்று மாஸ் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தன்னுடைய குடும்பத்தை ஒவ்வொரு இடத்திலும் தலைநிமிர வைத்துக் கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் எவ்வளவு கஷ்டங்கள் பட்டிருந்தாலும் இன்று புகழின் உச்சத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் தான் பட்ட அவமானங்களையும், கஷ்டங்களையும் ஒவ்வொரு மேடைகளிலும் பேசி இருக்கிறார்.

குடும்பத்தினர் சப்போர்ட்
தன்னுடைய அப்பாவின் இறப்பிற்கு பிறகு அம்மா தன்னை வளர்த்த விதம் குறித்து பல இடங்களில் கண்கலங்கி இருக்கிறார். தன்னுடைய அம்மா மற்றும் அக்கா தான் தன்னுடைய உலகம். அவர்கள் இருவரும் செய்த தியாகத்தால் தான் நான் இன்று பலருக்கு தெரிய தொடங்கினேன். என்னுடைய கனவுகளை அடைவதற்கு அவர்கள் எந்த இடத்திலும் எனக்கு முட்டுக்கட்டை போடவில்லை. என்னுடைய வாழ்க்கையில் அம்மா அக்காவிற்கு அடுத்ததாக என்னுடைய மனைவியும் என்னுடைய கனவுகளுக்கு துணை நின்றார்.
அம்மா பற்றிய பதிவு
என்னைப் பற்றி எவ்வளவோ வதந்திகளும், சர்ச்சைகளும் பரவி வந்தாலும் என் குடும்பத்தினர் அதை நம்ப மாட்டார்கள். எனக்காக முழு ஆதரவு கொடுக்கிறார்கள். அவர்களால் தான் என்னால் நிம்மதியாக வேலை பார்க்க முடிகிறது. அவர்கள் எனக்கு கிடைத்தது பெரிய வரம் என்று சிவகார்த்திகேயன் கூறி இருக்கிறார். இந்த நிலையில் இன்று சிவகார்த்திகேயனின் அம்மாவின் 70-வது பிறந்த நாளாம்.
சிவகார்த்திகேயன் அம்மா பிறந்தநாள்
தன்னுடைய அம்மாவோடு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில், "அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன் மகனாய் பிறக்கின்ற வரம் வேண்டுமே.. அதை நீயே தருவாயே.. அம்மா என்று அழைக்காத உயிரில்லையே! அம்மாவை வணங்காத உயர்வில்லையே! என்று அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவகார்த்திகேயன் கூறியிருக்கும் நிலையில் இந்த போஸ்ட் போட்டு சில மணி நேரத்தில் மில்லியன் கணக்கான லைக்குகள் குவிந்து இருக்கிறது.
சிவகார்த்திகேயன் குடும்ப புகைப்படங்கள்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமெண்ட்களும் வந்து கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் அறிமுகமானபோது இளைஞர்களின் பேவரைட் நடிகராக இடம் பிடித்தார். இப்போது குழந்தைகளும் கொண்டாடும் நடிகராக மாறி இருக்கிறார். சினிமாவில் தான் என்னதான் பிசியாக இருந்தாலும் தன்னுடைய குடும்பத்தோடு அதிகமான நேரத்தையும் செலவிட்டு கொண்டிருக்கிறார். அடிக்கடி குழந்தைகளோடு எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
போட்டோ சூட்
தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளோடு வீட்டில் நடக்கும் பங்க்ஷனில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ளும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதற்காக சிவகார்த்திகேயன் தன்னுடைய குடும்பத்தோட சென்றிருந்தார். அப்போது நடிகர் அஜித்குமாரின் குடும்பத்தினரையும் சந்தித்திருந்தார். இவர்கள் இருவருடைய குடும்பமும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டானது. அதுபோல சிவகார்த்திகேயன் தன் மனைவியோடு அடிக்கடி கோவில்களுக்கும் சென்று கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று தன்னுடைய அம்மாவின் பிறந்தநாளுக்காக சிவகார்த்திகேயன் போட்ட புகைப்படங்களை அவருடைய ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications