Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sivakumar: அன்னைக்கு ராதிகா மட்டும் இல்லன்னா எங்க நிலைமை? பழசை மறக்கலையே! கண்கலங்க பேசிய சிவகுமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் நாகரிகமான நடிப்பு, குடும்ப மரியாதை, ஒழுக்கமான வாழ்க்கை என்று பேசப்படும் போது முதலில் நினைவுக்கு வருபவர்களில் ஒருவர் நடிகர் சிவகுமார். 70களில் கதாநாயகனாக அறிமுகமாகி, 80-90களில் முன்னணி நடிகராக பல வெற்றிப் படங்களில் நடித்தவர். பின்னர் காலத்தின் மாற்றத்துக்கேற்ப ஹீரோக்களின் அப்பா, அண்ணன் போன்ற குணச்சித்திர வேடங்களிலும் தன்னுடைய தனி முத்திரையை பதித்தார். சினிமாவைத் தொடர்ந்து சின்னத்திரையிலும் நடித்த அவர், ஒரு கட்டத்திற்கு பிறகு அனைத்திலிருந்தும் விலகி அமைதியான வாழ்க்கையை தேர்வு செய்து கொண்டார்.

இவ்வளவு பெரிய பயணத்தை கொண்ட அவரே சமீபத்தில் உருக்கமாக பேசிய ஒரு விஷயம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. நடிகை ராதிகா சரத்குமார் அவர்களுக்காக ஒரு தனியார் YouTube சேனல் நடத்திய சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகுமார், "எத்தனையோ கதாநாயகிகளுடன் நடித்திருக்கிறேன்... ஆனால் ராதிகா எனக்கு எப்போதுமே ஸ்பெஷல்" என்று சொன்ன தருணமே அரங்கமே கைதட்டியது.

Sivakumar Radhika Sarathkumar Tamil Cinema

செல்லமா சண்டை

"நாங்க எப்போதுமே செல்லமா சண்டை போட்டுக்குவோம்... ஆனா பிரச்சனைன்னா முதல்ல ஓடிவருவது ராதிகாதான்" என்று அவர் சிரித்தபடியே கூறினார். அதற்கு பதிலாக ராதிகாவும், "என் வாழ்க்கையில் பர்சனலாக இருந்தாலும் சரி, சினிமாவில் ஏதாவது பிரச்சனையாக இருந்தாலும் சரி... எனக்கு துணையாக நின்றது சிவகுமார் அண்ணன் தான்" என்று உருக்கமாக பேசியிருந்தார்.

அப்போது யாருக்கும் தெரியாத ஒரு சம்பவத்தை சிவகுமார் பகிர்ந்துகொண்டார். அதாவது 1995ஆம் ஆண்டு, சீரியல் உலகில் நுழைந்த முதல் காலம். அண்ணாமலைக்கு முன்பாக அவர்கள் அனைவரும் சேர்ந்து நடித்த ஒரு சீரியலை மனோபாலா இயக்கியிருந்தார். அந்த சீரியலின் படப்பிடிப்பு இலங்கையில் நடந்தது. அப்போது அங்கிருந்த சூழ்நிலை சீராக இல்லை. போர் பதற்றம் நிலவிய காலம்.

சிவகுமார்

"அங்க போவது சரியா இருக்குமா?" என்று பலரும் தயங்கிய நேரத்தில், "நாம் போகலாம்... எல்லாம் பார்த்துக்கலாம்" என்று தைரியமாக எல்லோரையும் அழைத்து சென்றவர் ராதிகாதான் என்று சிவகுமார் நினைவுகூர்ந்தார். சௌகார் ஜானகி உட்பட 15 பேர் கொண்ட குழு இலங்கையில் படப்பிடிப்பில் இருந்தனர்.

Actor Sivakumar: விஜய் முதல்வர் ஆவாரா? மௌனம் கலைத்த நடிகர் சிவகுமார்.. ஒரே வரியில் அளித்த பதில்
பத்து நாட்கள் சுமூகமாக சென்றுகொண்டிருந்தபோது, ஒரு நாள் திடீரென ஒரு மருத்துவமனை முன்பு தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. அதன்பிறகு அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்தது. வெளிநாட்டவர்கள் எங்க சென்றாலும் பாஸ்போர்ட் கையில் இருக்க வேண்டும் என்ற நிலை, அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் எப்படி ஊருக்கு திரும்புவது என்று தெரியாமல் அனைவரும் பதற்றத்தில் இருந்தனர். கடைசி நேரத்தில் ஒரு விமானம் மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டு, அதிலும் இரண்டு பேருக்கு மட்டுமே இடம் என்ற நிலை ஏற்பட்டது.

"நாங்க 15 பேர் இருந்தோம்... ஆனா ராதிகா என்னையும் சௌகார் ஜானகி அம்மாவையும் முதல்ல அனுப்பிவைத்தாங்க... இதை யாரால் செய்ய முடியும்?" என்று சிவகுமார் கண்கலங்கிப் பேசினார். "அவங்க தைரியம் வேற லெவல்... ராதிகா எனக்கு நடிகை மட்டும் இல்ல... முதலாளியம்மா... தங்கச்சி... எல்லாமே" என்று அவர் சொன்ன போது, அந்த உறவு எவ்வளவு ஆழமானது என்பதை உணர முடிந்தது. அதிலேயே அவர் நின்றுவிடவில்லை.

புதிய கார்

"நான் ஆரம்ப காலத்தில் ஒரு பழைய கார்ல தான் சுற்றிக்கிட்டிருந்தேன்... எனக்கு புதிய கார் வாங்கணும்னு ஆசை இருந்தது... அது ராதிகாதான் பணம் கொடுத்து வாங்க வைத்தாங்க... அந்த உதவியை நான் வாழ்க்கையில் மறக்க முடியாது..." என்று அவர் கூறும் போதும் அவருடைய தொண்டையும் கரகரத்து போனது.

புகழும் வெற்றியும் நிறைந்த சினிமா உலகில் உண்மையான மனித உறவுகள் எவ்வளவு அரிது என்பதையும், அப்படி இருந்த ஒரு உறவை வாழ்நாள் முழுவதும் நன்றி உணர்வுடன் நினைத்து பேசும் சிவகுமாரின் எளிமையும், ராதிகாவின் மனதளவான மனிதத்துவமும் இந்த நிகழ்ச்சியில் வெளிப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+