நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமா வட்டாரத்தில் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ள விவகாரம், சிவக்குமார் பேசிய ஒரு கருத்தை சுற்றியே உள்ளது. அந்த கருத்து, சமூக வலைதளங்களில் பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சிவக்குமார் பேசியதை வைத்து ப்ளூ சட்டை மாறனும் கலாய்த்து இருக்கிறார்.

Sivakumar Blue Sattai Maran Surya Jyothika Tamil Cinema

சூர்யா - ஜோதிகா வாழ்க்கை பின்னணி

சூர்யா மற்றும் ஜோதிகா காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடி. 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் தொடங்கிய இவர்களின் காதல், 'பேரழகன்' உள்ளிட்ட படங்களின் மூலம் வலுவடைந்தது. ஆரம்பத்தில் இந்த உறவுக்கு சிவக்குமார் சம்மதம் தரவில்லை என்றாலும், இருவரின் உறுதியான முடிவின் காரணமாக 2006ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு, சில காலம் சினிமாவில் இருந்து விலகிய ஜோதிகா, மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது ஹிந்தி திரையுலகிலும் கவனம் செலுத்தி, மும்பையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதற்கிடையில், "சிவக்குமாருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக தான் மும்பைக்கு சென்றார்" என்ற வதந்திகளும் பரவின. ஆனால் அதை சூர்யா - ஜோதிகா இருவரும் முற்றிலும் மறுத்துள்ளனர். மேலும், திருமணத்திற்குப் பிறகும் நடிக்க சிவக்குமார் தான் முழு ஆதரவு அளித்தார் என்றும் ஜோதிகா முன்பே தெரிவித்திருந்தார்.

சிவக்குமாரின் சர்ச்சை கருத்து

இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார் கூறிய கருத்து தான் இந்த விவாதத்துக்கு காரணம்:

"ஹோட்டல் சாப்பாடு நடிகை மாதிரி. வீட்டு சாப்பாடு மனைவி மாதிரி. வீட்டு சாப்பாடு தான் நிரந்தரம். ஒரு மாற்றத்துக்காக ஹோட்டலில் சாப்பிடலாம். ஆனால் தினமும் அப்படிச் சாப்பிட்டால் பைத்தியம் பிடித்துவிடும். எப்போதும் வீடு, மனைவி, குழந்தைதான் முக்கியம்" என்றார். இந்த உவமை, குறிப்பாக "நடிகை" குறித்து பயன்படுத்திய விதம் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

ப்ளூ சட்டை மாறன் கடும் விமர்சனம்

இந்த கருத்துக்கு எதிராக ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் (Twitter) பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் பதிவிட்டதாவது: "ஹோட்டல் சாப்பாடும் நடிகைகளும் ஒன்றா? அவர்களுக்கு குடும்பம் இல்லையா? பெண்கள் பற்றிய உங்களது பார்வை இவ்வளவு கீழ்த்தரமானதா? நடிகையை மணம் செய்த உங்கள் புதல்வர் இந்தக் கருத்தை ஏற்பாரா? ஏன் இப்படி அடிக்கடி உளறுகிறீர்கள்? திருந்தவே மாட்டீர்களா?" என்ற அவரது பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ட்ரெண்டாகி வருகிறது.

விஜய் - திரிஷா கோணத்தில் புதிய விவாதம்

இதே நேரத்தில், சில நெட்டிசன்கள் இந்த கருத்தை வேறு கோணத்திலும் எடுத்துள்ளனர். சமீபத்தில் விஜய் மற்றும் திரிஷா குறித்து பரவி வரும் வதந்திகளை இணைத்து, "அவர்களை குறிப்பிட்டு தான் சிவக்குமார் இப்படி பேசியிருக்கிறார்" என சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

"சங்கீதாவை விட்டுவிட்டு திரிஷாவை சுற்றுவது போல பேசுறாரா?" போன்ற கருத்துகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஆனால், இதற்கு எந்த உறுதியான ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிகா மும்பை விவகாரம் மீண்டும் பேசுபொருள்

ஏற்கனவே "சிவக்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான் ஜோதிகா மும்பையில் செட்டில் ஆனார்" என்ற வதந்தி இருந்த நிலையில், தற்போது இந்த கருத்து வெளியானதும் சிலர், "ஜோதிகா வீட்டை விட்டு வெளியே போனது தவறில்லை போல" என்ற கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில், மற்றொரு தரப்பு ரசிகர்கள், "சிவக்குமார் சொன்னது ஒரு சாதாரண உவமை தான். அதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" என்றும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் தற்போது சமூக வலைதளங்கள் இரண்டு தரப்பாக பிரிந்துள்ளன: ஒருபக்கம், பெண்களை இழிவாக ஒப்பிட்டதாக கண்டனம் தெரிவிப்பவர்கள் மறுபக்கம், அது ஒரு சாதாரண உவமை மட்டுமே என கூறி ஆதரிப்பவர்கள் உள்ளனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+