மாரியம்மன் கோவிலில், இரட்டைக் குழந்தையோடு நின்ற சினேகன்- கன்னிகா.. சுற்றி சுற்றி வந்த “உயிர்”.. நெகிழ்ச்சி காட்சி
சென்னை: கவிஞர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா தம்பதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. இந்த குழந்தைகளோடு மாங்காடு மாரியம்மன் கோவிலுக்கு தம்பதி சென்று இருக்கின்றனர். அப்போது அங்கு எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு சிலர் சினிமாவில் பலரும் வியக்கத்தக்க வைக்கும் வகையில் வேலை செய்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் பெரிய அளவில் வெளியே தெரிவதில்லை. அதுபோல ஒரு நபர் தான் கவிஞர் சினேகன். சினேகன் இதுவரைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு பாடல் வரிகள் எழுதி இருக்கிறார். ஆனால் அவர் யார் என்று ஆரம்பத்தில் மக்களுக்கு தெரியாது. அதற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க தொடங்கியிருந்தார்.

நழுவிய வெற்றி வாய்ப்பு
பலரும் முணுமுணுக்கும் ஹிட்டான பாடல்களுக்கு சொந்தக்காரர் சினேகன் என்பது அப்போது பலருக்கும் தெரியாமல் இருந்த நிலையில்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பலரையும் வியக்க வைத்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவரை கட்டிப்பிடி வைத்தியர் என்று சிலர் கிண்டல் செய்ததும் உண்டு. ஆனாலும் கடைசி வரைக்கும் இந்த நிகழ்ச்சியில் நிலைத்திருந்த சினேகனுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை.
காதல் திருமணம்
அதுபோல பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இருந்தார். பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டிருக்கும்போது சினேகன் ஒரு நடிகையை காதலிக்கிறார் என்ற தகவல்கள் கசித்தது. ஆனால் அந்த நடிகை யார் என்று தகவல்கள் மட்டும் யாருக்கும் தெரியாத ரகசியமாக இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த சில மாதங்களுக்கு பிறகு சினேகன் தன்னுடைய காதலியை அறிமுகப்படுத்தி இருந்தார்.
சீரியல் நடிகை
அந்த நேரத்தில் தான் நடிகை கன்னிகா ரவி சில திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். இதனால் ரசிகர்கள் இந்த தம்பதியை வாழ்த்தி வந்தனர். அதுபோல கன்னிகா ரவி சமூக வலைதளத்தில் செம ஆக்டிவாக இருந்து வருகிறார்.
கன்னிகாவின் திறமைகள்
கணவருக்கு கொஞ்சம் கூட சளைத்தவர் இல்லை என்பது போல புத்தகம் எழுதுவது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைவது, சிலம்பம் சுற்றுவது, சமையல் செய்வது, அழகு குறிப்பு என்று விதவிதமான வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதியிடம் உங்களுக்கு குழந்தை இல்லையா என்ற கேள்விகள் துரத்தி வருவதாக பல பேட்டிகளில் பேசி இருந்தார்கள்.

இரட்டை குழந்தைகள்
அதே நேரத்தில் சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. அந்த இரண்டு பெண் குழந்தைகளுக்கும் நடிகர் கமல்ஹாசன் தான் பெயர் சூட்டி இருந்தார். அதில் ஒரு குழந்தைக்கு காதல் என்றும் இன்னொரு குழந்தைக்கு கவிதை என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இதை பலர் பாராட்டி இருந்தாலும் பலர் வியந்து வந்தனர்.
குழந்தைகள் வளர்ப்பு
குழந்தை பிறந்த சில வாரங்களிலேயே கன்னிகா உடற்பயிற்சி தொடங்கிவிட்டார். பிறந்த குழந்தைகளில் ஒன்றை கவனிப்பதே பெரிய விஷயமாக இருக்கும் நிலையில் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு கன்னிகா ரவி படும் அவஸ்தைகளையும் அவ்வபோது வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.
கோவிலில் தரிசனம்
இந்த நிலையில் நேற்று கன்னிகா ரவி மற்றும் சினேகன் இருவரும் மாங்காடு மாரியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றிருக்கிறார்கள். அப்போது அங்கிருந்த அனைவரும் அவர்களிடம் புகைப்படங்கள் மற்றும் போட்டோ எடுத்து இருக்கிறார்கள்.
நெகிழ வைத்த பாசம்
பிறகு ஒரு இடத்தில் அவர்கள் அமர்ந்திருக்கும் போது அங்கு ஒரு பூனை குட்டி இவர்களை கண்டதும் மிகவும் பரிச்சயமானவர்கள் போல சுற்றி சுற்றி வந்தது. பிறகு குழந்தையின் முகத்தை அந்த பூனை வந்து உற்று உற்றுப் பார்த்துவிட்டு பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தது. இந்த க்யூட்டான வீடியோவை கன்னிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications