குலதெய்வ கோவிலில் குழந்தைகளுக்கு மொட்டை போட்ட கன்னிகா- சினேகன்.. திடீர்னு நடந்த அதிசயம்.. நெகிழ்ச்சி வீடியோ
சென்னை: கவிஞர் சினேகன்- நடிகை கன்னிகா தம்பதி தங்களுடைய "காதல், கவிதை" என்ற இரட்டை குழந்தைகளுக்கு தங்களுடைய சொந்த ஊரில் குலதெய்வ கோவிலில் முடி காணிக்கை செலுத்தி இருக்கிறார்கள். அப்போது எடுத்த வீடியோவை கன்னிகா தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்.
பாடல் ஆசிரியர் சினேகன் நடிகை கன்னிகா ரவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் பத்து வருடங்களாக காதலித்து வந்தாலும் தங்களுடைய காதலை ரகசியமாக வைத்திருந்தனர். அப்போது சினேகன் பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நேரத்தில் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் விரைவில் தங்களுக்கு திருமணம் நடக்க இருக்கிறது, அந்த திருமணத்திற்கு கமல்ஹாசன் தான் முன்னின்று நடத்த வேண்டும் என்றும் சினேகன் பேசி இருந்தார்.

காதல் திருமணம்
அப்போது அது நடிகை கன்னிகா ரவி என்பது பலருக்கும் தெரியவில்லை. ஆனால் அதற்கு பிறகு சில மாதங்கள் கழித்து தான் தான் காதலிப்பது கன்னிகாவை தான் என்பதை பற்றி சினேகன் அறிவித்திருந்தார். அதுபோல கன்னிகா ரவியும் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்திருந்த போது அவருக்கு சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
வாய்ப்பு கிடைக்கவில்லை
ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது தான் அவருக்கு சன் டிவியில் "கல்யாண பரிசு" சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியல்லை தொடர்ந்து சீரியலில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரிதாக சீரியலில் நடிக்கவில்லை. தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவே முயற்சி செய்து கொண்டிருந்தார். ஆனால் சரியான வாய்ப்பு கிடைக்காததால் சினேகனை திருமணம் செய்து கொண்டார்.
இரட்டை குழந்தைகள்
திருமணத்திற்கு பிறகு மூன்று வருடங்கள் கழித்து இந்த தம்பதிக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தது. தன்னுடைய குழந்தைகள் பிறந்ததை சினேகன் மிகவும் நெகிழ்ச்சியாக பகிர்ந்து இருந்தார். தன்னுடைய அம்மாவே தனக்கு குழந்தையாக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன் ஆனால் எனக்கு இரண்டு பெண் குழந்தைகளாக என்னுடைய அம்மா என்னிடம் திரும்ப வருவார் என்று நினைக்கவில்லை என்று சினேகன் கூறி இருந்தார்.
முடி காணிக்கை
சினேகன் உடைய அம்மா பல வருடங்களுக்கு முன்பே இறந்து போய்விட்டார். அவருடைய தந்தையையும் வயதான காலத்தில் தான் சொந்த ஊரில் வசித்து வருகிறார். இது பற்றி பல இடங்களில் சினேகன் பேசி இருக்கிறார். அதுபோல சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் தங்களுடைய கிராமத்திற்கு அடிக்கடி சென்று வீடியோக்கள் வெளியிட்டு வருவார்கள். இதன் நிலையில் சினேகன் மற்றும் கன்னிகா தன்னுடைய இரட்டை குழந்தைகளுக்கு தன் சொந்த ஊரில் இருக்கும் குலதெய்வ கோவிலில் முடி காணிக்கை செலுத்தி இருக்கிறார்கள்.

தந்தையின் பாசம்
அப்போது அங்கு கோவில் பூசாரி அருவாள் மீது ஏறி நின்று குறி சொல்லி இருக்கிறார். அந்த வீடியோக்களை கன்னிகா சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தைகளுக்கு மொட்டை போடும் போது சினேகனின் தந்தையும் மொட்டை போட்டு இருக்கிறார். அவர் வயதான காலத்தில் தன்னுடைய இரண்டு பேத்திகளையும் பார்த்ததும் சந்தோஷத்தில் சிரித்த வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பொதுவாக எல்லா பெற்றோர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளை விடவும் பேரப்பிள்ளைகள் மீது அளவு கடந்த பாசம் இருக்கும். அதுபோல இத்தனை வருடங்கள் கழித்து சினேகனின் குழந்தைகளை தூக்கிக் கொஞ்சியதும், அவருடைய தந்தையின் முகத்தில் அவ்வளவு சந்தோஷமும் பூரிப்பும் இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications