இது நடிப்பு மேடம் ‘லாரன்ஸ்’ ஞாபகம் இருக்கா? இவரின் ஒரிஜினல் பெயர் விருமாண்டியா? தற்போதைய நிலை?
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த லாரன்ஸின் தற்போதைய நிலை குறித்த வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் பலர் தங்களுடைய குடும்ப பிரச்சனையை பேசி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றனர்.
அந்த மாதிரி கோயம்பேட்டில் வேலை பார்த்த லாரன்ஸ் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தபோது "இது நடிப்பு மேடம்" என்று பேசிய வசனம் இப்போது மீம்ஸ்களாக ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் தான் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த நிகழ்ச்சியில் குடும்ப சண்டை, காதல் தோல்வி, விவாகரத்து, உறவினர்கள் சண்டை, அடிதடி போன்ற பல பிரச்சனைகளோடு வரும் நபர்களை பேசி உட்கார வைத்து அவர்களுக்கு தீர்வு காணும் வகையில் தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி நன்றாக போய்க் கொண்டிருக்கும் போது இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் இந்த நிகழ்ச்சி இப்போது நிறுத்தி விட்டார்கள். ஆனால இந்த நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலமாகி இருக்கின்றனர். அதில் ஒருவர் தான் லாரன்ஸ். இவர் இந்த நிகழ்ச்சியில் மேடம் இது ஆக்சன் மேடம்... இது நடிப்பு மேடம்... என்றெல்லாம் பேசிய வார்த்தைதான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
எந்த ஒரு வீடியோவில் யாரை கலைக்க கலாய்க்க வேண்டும் என்றாலும் இவருடைய புகைப்படம் தான் அங்கு இடம் பெற்று விடுகிறது. இதை பார்த்த பலரும் இப்போது லாரன்ஸ் என்ன செய்கிறார் எங்கு எப்படி இருக்கிறார் என்றெல்லாம் அவரை தேடிக் கொண்டிருந்த நிலையில் பிரபல youtuber ஒருவர் லாரன்ஸை தேடி அவர் வேலை செய்த இடத்திற்கு சென்று இருக்கிறார்.

லாரன்ஸ் கோயம்பேட்டில் உள்ள ஒரு காய்கறி மண்டியில் தான் வேலை செய்தேன், அங்கு மூட்டைக்கு தூக்கும் தொழிலாக வேலை செய்து வருகிறேன் என்று சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பேசி இருந்தார். இதனால் அவரை அங்கு போய் விசாரித்ததில் அங்கு பலரும் அதிர்ச்சிகரமான பல உண்மைகளை உடைத்திருக்கின்றனர். அதாவது லாரன்ஸ் என்பது அவருடைய உண்மையான பெயர் கிடையாதாம்.
அவருடைய உண்மையான பெயர் விருமாண்டி தானாம். ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் லாரன்ஸ் என்று மாற்றிக் கொண்டாராம். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்குப் பிறகும் கோயம்பேட்டில் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தாராம். மூட்டை தூக்கி சம்பாதிக்கும் பணத்தில் நன்றாக சாப்பிடுவாராம், நிறைய குடிப்பாராம், வேலை செய்யும் இடத்திலேயே தூங்கிக் கொள்வாராம். கொரோனாவுக்கு பிறகு அவரை அவரோடு வேலை பார்த்தவர்கள் பார்க்கவே இல்லையாம்.
எங்கே சென்றார் என்று கூட தெரியவில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியவில்லை ஒருவேளை அவர் உயிருடன் இருந்திருந்தால் கண்டிப்பாக வேலைக்கு வந்து இருப்பார். ஆனால் இப்போது அவருக்கு என்ன ஆனது என்று எங்கள் யாருக்கும் தெரிவதில்லை என்று அங்கு இருந்த அனைவருமே அந்த வீடியோவில் கூறி இருக்கின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications