1952ல் பராசக்தி ரிலீஸை பார்த்த ஒரே நபர் யார்? சிவகார்த்திகேயனுக்கு மட்டும் டைட்டில் கிடைச்சா?
சென்னை: பராசக்தி படம் ரிலீஸை 1952-ஆம் ஆண்டு பார்த்த ஒருவர் இருக்கிறார், அவர் யார் தெரியுமா? சிவகார்த்திகேயனுக்கு பராசக்தி பட டைட்டில் கிடைத்தால் அந்த படத்தின் ரிலீஸையும் அவர் பார்த்துவிடுவார். அவர் யார் தெரியுமா?
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: பராசக்தி... பராசக்தி டைட்டில் செம கான்ட்ரவர்சியாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் 'பராசக்தி' படம் ரிலீசை 1952ல் பார்த்த ஒருவர் இன்று இருக்கிறார் என்றால் எவ்வளவு ஆச்சர்யம்.

அவரும் பராசக்தி ரிலீசான அதே 17.10.1952ல் திரையுலகுக்கு அறிமுகமானவர்.
17.10.1952ல் மூன்று படங்கள் ரிலீசானது. நமக்குத் தெரிந்த முதல் படம் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த பராசக்தி. இரண்டாவது படம் 'ஏழை உழவன்'. இதை தயாரித்தது நடிகை கண்ணாம்பாவும், அவர் கணவரும். கணவர் நாகபூஷணம் இயக்கினார்.
நாயகி அஞ்சலி தேவி. நாயகன் ஸ்ரீ ராமமூர்த்தி. உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற கருத்தை சொன்ன படம். அடுத்து 'வளையாபதி' என்கிற படம். இதை தயாரித்தது மாடர்ன் தியேட்டர்ஸ். இதில் அறிமுகமான, பராசக்தி ரிலீசை போட்டியோடு பார்த்த அந்த பெண் தான் சௌகார் ஜானகி. இது அவருக்கு சௌகார் என்கிற முதல் படத்துக்குப் பின்னான இரண்டாவது படம். தமிழில் முதல் படம். 'வளையாபதி' முத்துக்கிருஷ்ணன் நாயகன்.

இயக்கியது மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரமும், கேமிராமேன் மஸ்தானும். பராசக்தியின் ருத்ரதாண்டவத்தால் வளையாபதி படம் தோல்வியை தழுவியது. வசனம் பாரதி தாசன். கலைஞரும், பாரதிதாசனும் வசனங்களில் மோதினர். தென்றல் போன்ற தேன்தமிழ் வசனங்கள் பாரதிதாசன் எழுத கலைஞரின் வசனங்களோ சூறாவளியாய் அடித்தன. வளையாபதி பராசக்தி முன் வளைந்தது.
ஒரே நாளில் அறிமுகமான சிவாஜிக்கு ஜோடியாக சௌகார் மனைவியாக, காதலியாக, தாயாக என பல படங்களில் நடித்து விட்டார். பராசக்தியை ரிலீசாவதை பார்த்த ஒருவர் சௌகார் மட்டுமே. சிவகார்த்திகேயனின் பராசக்தியையும் பார்ப்பார்..அந்த டைட்டில் மட்டும் கிடைத்து விட்டால்.... இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications