கஷ்டத்தில் வீடியோ வெளியிட்ட விஜய் டிவி பிரபலம்! ஓடி சென்று உதவிய மகாவிஷ்ணு.. கடைசியில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் பள்ளியில் சர்ச்சைக்குரிய விதமாக பேசி கைது செய்யப்பட்ட ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாகேஷ் செல்லக்கண்ணுவிற்கு ஆட்டோ வழங்கி உதவி செய்து இருக்கிறார்.

சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய விதமாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்ட ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணு சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு பலருக்கு உதவிகளை செய்து வருகிறார்.

television vijay tv

சமீபத்தில் உதவி கேட்ட நபருக்கு மகாவிஷ்ணு ஆட்டோ ஒன்றை வழங்கி இருக்கும் செய்தி வைரலாகி வருகிறது. அந்த நபர் வேறு யாருமில்லை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக சிறுவயதிலேயே புகழ் பெற்ற நபர் தான். விஜய் டிவியில் அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நாகேஷ் கேரக்டரில் நடித்து அசத்திய செல்லக்கண்ணு தான்.

மகா விஷ்ணுவும் அலங்காநல்லூரில் பிறந்திருந்தாலும் சிறு வயதிலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஸ்டாண்டப் காமெடியனாக கலந்து கொண்டிருக்கிறார். பிறகு ஆன்மீகத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டு ரெய்கி கற்றுக்கொண்டு ரெய்கி ஹீலராகவும் ஆலோசகராகவும் இருந்த மகாவிஷ்ணு தனது குருவான தத் சத் பிரம்ம ஞானி ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி விஸ்வநாத சுவாமிகளின் ஆசையோடு பரம்பொருள் அறக்கட்டளையை தொடங்கி பலருக்கு பல உதவிகள் செய்து வந்தார்.

television vijay tv

அதோடு ஆன்மீக சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார். இவருடைய அறக்கட்டளை மூலமாக தினமும் அன்னதானம் நடைபெற்று வருகிறது. இவருடைய கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பல மக்கள் இவரை குருஜி என்று கூப்பிட்டு வருகின்றனர். பரம்பொருள் அறக்கட்டளையின் கிளைகள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா என பல நாடுகளில் இருக்கிறது.

வெளிநாடுகளிலும் தனது தியான பயிற்சி வகுப்புகளை மகாவிஷ்ணு எடுத்து வந்த நிலையில் தான் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி அவர் ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். இந்த நிலையில் தான் நாகேஷ் செல்லக்கண்ணு ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

television vijay tv

அதில் தற்போது தான் வறுமையில் வாடுவதாகவும் தனக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று மகாவிஷ்ணுவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு மகாவிஷ்ணு என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட நிலையில் வாடகை ஆட்டோ ஓட்டும் தனக்கு சொந்தமாக ஆட்டோ கிடைத்தால் வாழ்க்கை வளம் பெறும் என்று செல்லக்கண்ணு கூறியதால் ஆட்டோ ஒன்றை மகா விஷ்ணு வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

அப்போது குருவே நேரடியாக வந்து அதை தந்தால் தங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று செல்லக்கண்ணு கேட்டுக் கொண்டதாகவும், அதனால் மகாவிஷ்ணு நேரில் சென்று ஆட்டோவை வழங்கி பரம்பொருள் அறக்கட்டளை பக்தர்கள் சார்பாக அதில் பயணம் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+