கமலுக்கு ஸ்ரீவித்யாவை அவர் அம்மா கல்யாணம் பண்ணி வைக்காத காரணமே இதுதான்.. அண்ணி சொன்ன அதிர்ச்சி தகவல்
சென்னை: நடிகர் கமல்ஹாசன் சில வருடங்களுக்கு முன்பு காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் ஸ்ரீவித்யா என்னுடைய தோழி மட்டுமல்ல என்னுடைய காதலியும் தான் என்று பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்ற நிலையில் ஸ்ரீவித்யாவிற்கும் கமலுக்கும் எதனால் திருமணம் ஆகவில்லை என்று ஸ்ரீவித்யாவின் அண்ணி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அந்த வீடியோஸ் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.
கமல் மற்றும் ஸ்ரீவித்யா இருவரும் காதலித்து வந்த செய்தி சினிமா துறையில் அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் இருதரப்பு குடும்பத்திற்கும் தெரியவந்தபோது ஸ்ரீவித்யாவின் அம்மா தான் கமலுக்கு திருமணம் செய்து வைக்க மறுத்துவிட்டார் என்று ஸ்ரீவித்யாவே அவர் உயிரோடு இருக்கும்போது ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.
இந்த நிலையில் எதற்காக ஸ்ரீ வித்யாவின் அம்மா மறுத்தார் என்ற காரணத்தை முதல் முறையாக பல வருடங்கள் கழித்து ஸ்ரீவித்யாவின் அண்ணன் மனைவி மனம் திறந்து பேசி இருக்கும் நிலையில் இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் நடிகை ஸ்ரீவித்யாவை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. 80ஸ் காலத்தில் தொடங்கி 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாகவும் ஸ்ரீவித்யா வலம் வந்திருந்தார். பார்ப்பதற்கு சாந்தமாகவும் பக்கத்து வீட்டு பெண் போலவும் இருக்கும் ஸ்ரீவித்யா நடிக்கும் திரைப்படங்களில் அதிகமாக ஹோமிலியாகவே நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.
பொதுவாக சினிமாவில் ஒன்றாக நடிப்பவர்கள் காதலுக்கு திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதியது அல்ல. அந்த மாதிரி பல பிரபலங்கள் மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கையில் இணைந்து இருக்கின்றனர். அந்த மாதிரி தான் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்திலேயே நடிகர் கமல்ஹாசனும் ஸ்ரீவித்யாவும் இருவரும் காதலித்திருக்கின்றனர். இருவருடைய காதலும் வீட்டிற்கு தெரியவந்த போது வீட்டில் கமலுடைய காதலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதற்கு பிறகு இருவரும் பிரிந்து இருந்த நிலையில் கமல்ஹாசன் வேறொரு பெண்ணை திருமணம் செய்ததும் மன வருத்தத்தில் இருந்த ஸ்ரீவித்யா பல வருடங்கள் கழித்து வேறொரு திருமணம் செய்து அதில் அதிகமாக கஷ்டப்பட்டு பிறகு புற்றுநோய் காரணமாக தன்னந்தனியாக கேரளாவில் மரணம் அடைந்திருந்தார். ஆனால் மரணப்படுக்கையிலும் கமல்ஹாசனை தான் ஸ்ரீவித்யா பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் என்ற தகவல்கள் எல்லோருக்கும் தெரியும்.
இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன் ஸ்ரீவித்யா குறித்து காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசியிருந்தார். அதாவது அந்த நிகழ்ச்சியில் டிடி ஸ்ரீவித்யாவின் புகைப்படத்தை காட்டி இவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று கேட்கும் போது இவர் என்னுடைய வாழ்க்கையில் ரொம்பவும் முக்கியமானவர். இவர் என்னுடைய தோழி என்று சொல்வதை விடவும் காதலி என்று சொல்வதுதான் உண்மை.
அதுபோல ஸ்ரீவித்யாவும் பேட்டி ஒன்றில் கமல்ஹாசன் என்னுடைய அம்மாவிடம் வந்து என்னை திருமணம் செய்வதற்காக சம்மதம் கேட்டபோது என்னுடைய அம்மா மறுப்பு தெரிவித்ததால் தான் எங்களுடைய திருமணம் நடைபெறவில்லை என்று மலையாள இன்டர்வியூ ஒன்றில் பேசி இருந்த வீடியோவும் இப்போது இணையத்தில் மீண்டும் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் ஸ்ரீவித்யாவின் அண்ணன் மனைவி இவர்களுடைய திருமணம் எதனால் நடைபெறவில்லை என்று முதல் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் கமல்ஹாசன் சொன்ன மாதிரி தான் இருவருடைய காதலும் வீட்டிற்கு தெரியும். கமல்ஹாசனும் ஸ்ரீவித்யாவின் அண்ணனும் நெருங்கிய நண்பர்கள். முதலில் கமல்ஹாசன் ஸ்ரீவித்யாவை காதலிக்கும் விஷயத்தை தன்னுடைய நண்பன் அதாவது ஸ்ரீவித்யாவின் அண்ணனிடம் தான் சொன்னார்.
அதற்கு அவர் இது ரொம்ப முக்கியமான விஷயம். இதனால் இது பற்றி அம்மாட்ட வந்து பேசு என்று சொல்லவும் தான் கமல்ஹாசன் ஸ்ரீவித்யாவின் அம்மாவிடம் பேசினார். அப்போது ஸ்ரீவித்யாவிற்கு வயது 21 தான் ஆகியிருந்தது. அதுபோல கமல்ஹாசனுக்கு அந்த நேரத்தில் 20 வயது தான் ஆகியிருக்கிறது. இருவரும் சினிமாவில் அப்போது தான் தங்களுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள்.

அதனால் இந்த நேரத்தில் திருமணம் செய்தால் சரியாக இருக்காது என்று தான் மறுத்துவிட்டாராம். அதற்கு கமல்ஹாசன் கூட அப்போ சில வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்ட போது கூட அதற்கு ஸ்ரீவித்யாவின் அம்மா மறுத்துவிட்டாராம். அதற்கு முக்கியமான காரணமும் இருந்தது என்று ஸ்ரீவித்யாவின் அண்ணன் மனைவி சொல்லியிருக்கிறார்.
அது என்னவென்றால் ஸ்ரீவித்யாவின் அம்மா ஒரு பாடகியாக இருந்தாலும் அவருடைய திருமண வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார். பண ரீதியாகவும் குடும்ப பிரச்சனையும் அவருக்கும் அம்மாவிற்கும் அதிகமாக இருந்திருக்கிறது. அதுபோல தன்னுடைய மகள் நிலைமை அப்படி ஆகிவிடக்கூடாது என்று தான் அந்த நேரத்தில் கமல்ஹாசனை தவிர்த்து இருந்ததாக தன்னிடம் கூறியதாக ஸ்ரீவித்யாவின் அண்ணி அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications