எங்கேயோ பார்த்த பார்வை.. எத்தனை வருடமாக பார்த்தாலும் அது மட்டும் மாறலையே!
சென்னை: மாடர்ன் உடை போட்டு வந்தால் தான் மாடல் என்று இல்லை . புடவையிலும் மாடலாக ஒரு போஸ் கொடுத்தால் போதும் என கலக்கியிருக்கிறார் சுருதி ராஜ்.
சிரிக்கும் சிரிப்பாலே சில்லறையை உதிர்த்து பார்வையாளர்களை சுண்டி இழுத்து வசியம் செய்வதெல்லாம் ஒரு வித்தைதான்.
அந்த வித்தையை நன்றாக இவர் கற்று இருக்கிறார் அதனால் தான் இவருடைய சிரிப்புக்கு பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

எப்போதும் அழகுதான்
வயது ஆக ஆக எல்லோருக்கும் இளமை குறைந்துவிடும் .ஆனால் சுருதிக்கு மட்டும் எத்தனை வருடம் ஆனாலும் அன்று பார்த்த மாதிரியே இருக்கிறாரே என ரசிகர்கள் சந்தோஷமாக புலம்பிக் கொள்கின்றனர். ஆனால் இவர் மாண்புமிகு மாணவன் படத்தில் விஜய் உடன் நடித்து இனி எல்லாம் சுகமே உள்பட சில படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் தன்னுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று சீரியலின் பக்கம் காலடி எடுத்து வைத்தார்.

டிஆர்பியில் பர்ஸ்ட் தான்
சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த நேரம் இவருக்கு கிடைத்த வாய்ப்பு எல்லாமே திறமைக்கு தகுந்த மாதிரிதான் அமைந்திருக்கிறது. இந்த மாதிரி பலருக்கும் அமைந்து விடுவதில்லை .ஆனால் இவர் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி சீரியல்களில் தனக்கென்று பெரிய ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிவிட்டார். தன்னுடைய நடிப்பை ஓவர் ஆக்டிங் இல்லாமல் கதையோடு ஒன்றி இருந்ததால் இவரை ரசிகர்கள் நன்றாக ரசிக்க தொடங்கி விட்டனர்.

நடிப்புக்கு தான் அங்கீகாரம்
இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் தொடங்கி ,திருமதி செல்வம் ,அலுவலகம் , அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், அபூர்வராகங்கள், அழகு ,தாலாட்டு என தற்போது வரையும் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் சீரியல்கள் எல்லாமே டாப்பு தான் .அதனாலேயே இவருக்கு பல விருதுகளும் கிடைத்து இருக்கிறது. இந்த விருதுகளை எல்லாம் இவர் தன்னுடைய நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக நினைக்காமல் தன்னுடைய ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் பாசமாக தான் பார்த்து வருகிறாராம்.

அதுவெல்லாம் வேண்டாம்
இவருக்கு தற்போது 40 வயது ஆகிவிட்டாலும் திருமணம் செய்து கொள்வதில் உடன்பாடு இல்லையாம். அதனால் எனக்கு எந்த மனவருத்தமும் இல்லை. எனது நடிப்பு துறையில் நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது .அதில் என்னுடைய முழு திறமையும் வெளிக்காட்டி எனக்கான உலகத்தை அமைத்துக் கொள்வேன் என கெத்தாக வாழ்ந்து வருகிறார் .

குழந்தையோடு தான் கொஞ்சல்
ஆனாலும் தற்போது தாலாட்டு சீரியலில் ஒரு குழந்தையின் அம்மாவாக நடித்து வருகிறார் என்று சொல்வதை விடவும் அந்த கேரக்டராகவே மாறி விட்டார் .அடிக்கடி சூட்டிங் ஸ்பாட் களில் சூட்டிங் இல்லாத நேரத்தில் அந்த குழந்தையோடு கொஞ்சி விளையாடி பல ரீல்ஸ் வீடியோக்களையும் எடுத்து வருகிறார். அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் , டுவிட்டரில் போஸ்ட் பண்ணி இருக்கிறார். இதைப் பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் இவரை கொஞ்சி கமெண்ட் போட்டு வருகின்றனர்.

தேர்ந்தெடுப்பதில் வல்லவர்
சீரியலிலும் சரி சினிமாக்களிலும் சரி மாடர்ன் உடை அதிகமாக அணியாத ஒரு சில நடிகைகளில் இவரும் ஒருவர். எந்த மாடல் உடையாக இருந்தாலும் அதில் கண்ணியத்தோடு உடை அணிவதாலேயே இவரை ஆண் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பெண்களுக்கும் பிடித்திருக்கின்றது .இவருடைய உடை நேர்த்தியை பார்த்து பிடித்து போன ரசிகர்கள் இவரிடம் உடைகளை எப்படி தேர்வு செய்கிறீர்கள் உங்களுக்கு மட்டும் எந்த ட்ரஸ் உடுத்தினாலும் நன்றாக இருக்கிறதே என தான் கேள்வி கேட்டு வருகின்றனர்.

எனக்கு நிகர் நான் மட்டும்தான்
சிலர் மாடல் உடைகளில் போட்டோ ஷூட் எடுத்து குவித்து வரும் நிலையில், இவர் மட்டும் அவர்களுக்கெல்லாம் நான் வித்தியாசம் எனக்கு நிகர் நான் மட்டும்தான் என கெத்தாக புடவையில் விதவிதமான போட்டோக்களை எடுத்து குவித்திருக்கிறார் .அதுவும் கருப்பு கலர் புடவையில் பின்க் கலர் பார்டரில் ஓவர் மேக்கப் இல்லாமல் ஜொலிக்கும் அழகில் பார்ப்பவர்களை கையெடுத்து கும்பிடுவது போல இருக்கிறார் என்று அவருடைய ரசிகர்கள் உருகி உருகி கமெண்ட் போட்டு வருகின்றனர்.

தமிழ் ரசிகர்களிடத்தில் நீங்காத இடம்
இவர் தமிழ் கன்னடம் மலையாளம் தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தில் இருந்து வருகிறார் .இவர் சீரியலுக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது .இப்போதும் அதே அழகோடு தான் வலம் வந்து கொண்டிருக்கிறார் .இவர் சீரியலுக்கு வந்து சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக ஆகிவிட்டது .ஆனாலும் தற்போது வரைக்கும் முதல் சீரியலில் இருந்த அதே முக களையோடு இருப்பதற்கு என்ன ரகசியம் என்று ரசிகர்கள் நச்சரித்து வருகின்றனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications