நாதஸ்வரம் ராகினியின் திடீர் சர்ப்ரைஸ்...எளிமையாக ரகசியத்தை உடைத்து விட்டாரே
சென்னை: 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையான சுருதி சண்முகப்பிரியா தன்னுடைய சந்தோசத்தை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.
மகிழ்ச்சியான செய்தியை சொன்ன இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நாதஸ்வரத்தில் அறிமுகம்
சன் டிவியில் 2010 முதல் 2015 வரையில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியலான நாதஸ்வரத்தில் ராகினி கேரக்டரில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமான ஸ்ருதி தற்போது தன்னுடைய ரசிகர்களிடம் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். புதிய செய்தியைக் கேட்டு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சிறிது ஏமாற்றம் மனதிற்குள் இருந்தாலும் பலர் பெருந்தன்மையாக இவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருவது பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது என்று சிலர் கூறுகிறார்கள்.

ராகினி ஆக மனம் கவர்ந்தவர்
கல்லூரி படிக்கும்போதே முதல் சீரியலில் அறிமுகமாகி அதற்குப் பிறகு ரசிகர்களின் மத்தியில் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிட்டார். பாரதிகண்ணம்மா ,வாணி ராணி, கல்யாண பரிசு, பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்ற பல பிரபலமான சீரியல்களிலும் நடித்துள்ளார். எத்தனை சீரியல்களில் இவர் நடித்து வந்தாலும் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்த கேரக்டர் என்றால் அது ராகினி தான். நாதஸ்வரம் ராகினி என்னும் கேரக்டர் இவருக்கு நன்றாகவே செட் ஆகிவிட்டது. இப்ப வரைக்கும் பல ரசிகர்கள் இவருடைய உண்மையான பெயரை மறந்து ராகினி என்று அழைத்து வருகிறார்கள். சீரியல் மட்டுமல்லாமல் பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

கொடி திரைப்படத்தில் அறிமுகம்
சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் இவர் காலடி எடுத்து வைத்துள்ளார். துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்த கொடி படத்தில் சுருதி ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் ஹீரோயினான அனுபமா பரமேஸ்வரனின் தங்கையாக நடித்துள்ளார். என்னதான் திரையுலகில் தான் சாதித்துக் கொண்டிருந்தாலும் தன்னுடைய வாழ்க்கைத்துணையை தற்போது இவர் தேர்ந்தெடுத்துள்ளார். எளிமையாக நடந்து முடிந்த தன்னுடைய நிச்சயதார்த்தத்தில் போட்டோக்களை தன்னுடைய அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். திருமண தேதி இன்னும் முடிவாகாத நிலையில் அரவிந்த் சேகர் என்பவரோடு தனக்கு பூச்சூடல் விழா நடந்தது என்று கூறியுள்ளார்.

மகிழ்ச்சியான செய்தி
அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியின் போது எடுத்த போட்டோக்களை ஷேர் செய்த ஸ்ருதி தன்னுடைய நன்றிகளை தெரிவித்து இதயபூர்வமான குறிப்பை எழுதியுள்ளார். இறுதியாக எனது வாழ்நாள் முழுவதும் தொந்தரவு செய்ய விரும்பும் ஒரு சிறப்பு எனக்கு கிடைத்தது. எங்கள் பூச்சூடல் விழா மற்றும் நிச்சயதார்த்தம் மற்றும் திருமண அறிவிப்பு விரைவில் வருவோம். உங்கள் அனைவரின் அன்பும், ஆசீர்வாதமும் வேண்டும் மேலும் பல படங்களை பதிவு செய்ய காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் இந்த போட்டோக்களுக்கு அதிகமாக லைக்களை அளித்து கமெண்ட்களில் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications