அந்த படத்துக்கு டப்பிங் பேச போனபோது நடந்த ஆக்சிடெண்ட்! இறந்தது கூட தெரியாது! கதறி அழுத கோதண்டம் மனைவி
சென்னை: 22 வருடங்களாக சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்த கோதண்டராமன் (வயது 65) நேற்று முன்தினம் டிசம்பர் 18ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய மறைவிற்கு ரசிகர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அவருடைய மனைவி தன்னுடைய கணவர் குறித்து கதறி அழுதது பார்ப்போரை கண் கலங்க வைத்திருக்கிறது.
ஒரு சிலருக்கு என்னதான் திறமையும் உழைப்பும் இருந்தாலும் அவர்களுக்கு சரியான வாய்ப்பும் அங்கீகாரமும் கிடைக்காமல் இருக்கிறது. அதுவும் சினிமா துறையில் பல வருடங்களாக இருக்கும் ஒரு சிலருக்கு வெளி உலக வெளிச்சமே படாமல் இருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகர் கோதண்டராமனும் ஒருவர்.

இவர் கடந்த 25 வருடங்களாக சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி இருக்கிறார். அதுபோல ஒரு சில திரைப்படங்களில் ஹெஸ்ட் கேரக்டரிலும் நடித்திருக்கிறார். அதிலும் நடிகர் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, சந்தானம் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கலகலப்பு திரைப்படத்தில் சந்தானத்தின் அடியாள்களில் ஒருவராக கோதண்டராமன் நடித்து பேமஸ் ஆகி இருந்தார்.
இந்த திரைப்படத்தில் "பேய்" என்ற கேரக்டரில் நடித்திருப்பார். ஒரு சில காட்சிகளில் இந்த திரைப்படத்தில் வந்திருந்தாலும் பார்ப்பவரை சிரிக்க வைக்கும் அளவிற்கு இருப்பார். ஆள் பார்ப்பதற்கு தான் பிரம்மாண்டமாக டெரர் பீஸ் போல இருந்தாலும் உண்மையில் குழந்தை மனம் என்று சொல்வார்களே அது போல தான் இவருடைய நிஜ வாழ்க்கையில் இருந்திருக்கிறார்.
கலகலப்பு திரைப்படத்திற்கு பிறகு பெரிய அளவில் இவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாகவே இவர் உடல்நிலை குறைபாட்டால் சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். ஆனால் நேற்று முன்தினம் டிசம்பர் 18ஆம் தேதி இரவு மருத்துவமனையில் வைத்து இவருடைய உயிர் பிரிந்து இருக்கிறது.
இது பற்றி அவருடைய மனைவி கண்கலங்க பேசுகையில், என்னுடைய கணவர் சினிமாவில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற கனவோடு இருந்தார். அவருக்கு கலகலப்பு திரைப்படம் ஒரு பெயர் வாங்கி கொடுத்தது. அதற்குப் பிறகு மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு டப்பிங் பேசுவதற்காக அவர் போய்க்கொண்டிருந்த போது சிக்னலில் நின்று கொண்டிருக்கும்போது ஒரு குட்டி யானை வண்டி வந்து அவருடைய கால் பகுதியில் ஏறிவிட்டது. அப்போது ஆறு ஆபரேஷன் செய்திருந்தார். அதற்குப் பிறகு அவருக்கு உடல்நல பிரச்சனைகள் வரத் தொடங்கிவிட்டது.
ஆனாலும் சினிமாவுக்கு திரும்ப போகணும்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு. எப்படியாவது அவரை சரி பண்ணிடலாம் என்று நாங்களும் நினைச்சிருந்தோம். கடந்த சில நாட்களாகவே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததும் அவரை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்திருந்தோம். அவருக்கு சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போது அவருடைய உயிர் போய்விட்டது.
அவர் இறந்தது எங்களுக்கு தெரியாது. நாங்க வெளியே தான் காத்துக் கொண்டிருந்தோம். ரொம்ப நேரம் கழிச்சு தான் வந்து சொன்னாங்க. எங்களுக்குன்னு சொந்தமாக எதுவும் கிடையாது. ஒரே ஒரு சின்ன வீடு மட்டும் இருக்கிறது. என் கணவர் உடல்நிலை பிரச்சனையால் இருந்தபோது ஸ்டண்ட் யூனியன் சார்பாக கொஞ்சம் கடன் கொடுத்து உதவினார்கள்.
அதுபோல அவருடைய நண்பர்கள் சிலரும் உதவினார்கள். இனி என்னுடைய குடும்பத்தை நான் எப்படி பார்க்க போறேன்னு எனக்கே தெரியல. அவர் இழப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியல. அவர் இல்லை என்பதை என் மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்று அவர் கதறி அழுதது பார்ப்போரை கண் கலங்க வைத்திருக்கிறது. கோதண்டராமன் மனைவி மற்றும் குடும்பத்தினர் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீண்டு வந்து அவருடைய கனவுகளை நிறைவேற்ற பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications