அந்த சீரியலில் நடிக்கும் போது கிடைத்த மோசமான அனுபவம்! பல லட்சம் ஏமாற்றம்- நடிகை சுபத்ராவின் ஆதங்கம்!
சென்னை: சினிமா துறை போலவே சின்னத்திரை உலகமும் புகழ் வெளிச்சம் கொண்டதாகவே இருந்தாலும், அதன் பின்னால் பல கஷ்டங்களும், ஏமாற்றங்களும் ஒளிந்திருக்கின்றன. சின்னத்திரை நடிகை சுபத்ரா, தான் ஒரு சீரியலில் நடித்தபோது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

யார் இந்த சுபத்ரா
மாடலிங் துறையில் தனது கலைப் பயணத்தைத் தொடங்கியவர் நடிகை சுபத்ரா. சில தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துப் பிரபலமான இவர், பின்னர் சின்னத்திரை தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி போன்ற சீரியல்களில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு ஒரு தனி இடத்தைப் பெற்றுத்தந்தது. டெலி விகடன் தளத்திற்கு அளித்த ஒரு பேட்டியில், தனது சினிமா அனுபவம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
ஏமாற்றமளித்த பூவே உனக்காக அனுபவம்
தான் நடித்த சீரியல்களில், பூவே உனக்காக என்ற தொடரில் நடித்த அனுபவம் தனக்கு மறக்க முடியாத ஒன்று என்கிறார் சுபத்ரா. இந்தத் தொடரில் சித்தி கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தாலும், அதற்கான ஊதியம் இவருக்கு முழுமையாகக் கொடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். இது இவருக்கு மட்டுமல்ல, அந்தத் தொடரில் பணியாற்றிய பலருக்கும் இதே பிரச்சனை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்பு நடந்ததால், அந்த நேரத்தில் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஆரம்பத்தில் தனக்குக் கூறப்பட்டிருந்த கதாபாத்திரம், பின்னர் மாற்றப்பட்டு, அது தனக்கு ஏமாற்றத்தை அளித்ததாகவும் அவர் கூறுகிறார்.
அசீமுடன் ஏற்பட்ட சர்ச்சை
அந்த சீரியலில் நடிகர் அசீம் உடன் ஏற்பட்ட சர்ச்சை குறித்தும் சுபத்ரா அந்தப் பேட்டியில் பேசியுள்ளார். ஒரு நிகழ்ச்சியில் அசீம் தன்னிடம் சரியாக நடந்து கொள்ளாதது வருத்தம் அளித்ததாகவும், இருந்தும் அதைக் கடந்து செல்ல முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அசீம் ஒருமுறை தனது பாட்டியின் உடல்நிலை சரியில்லாத போது உதவி செய்ய முன்வந்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.
ஊதியமும், வாக்குவாதமும்
தான் நடித்த சீரியலில், படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகருடன் ஏற்பட்ட வாக்குவாதம் குறித்துப் பேசிய சுபத்ரா, "உங்களுடைய கதாபாத்திரம்தான் முக்கியம்" என்று தனக்குக் கூறப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அந்த நிலைப்பாடு மாறியதாகவும் அவர் கூறினார். இந்தச் சம்பவங்கள் எல்லாம் சேர்ந்தே, தனக்குக் கிடைக்க வேண்டிய ஊதியம் கூட முழுமையாகக் கிடைக்காமல் போனதற்கு ஒரு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகையையும் இதே குற்றச்சாட்டு வைத்திருந்தார். அப்போது அவர் தனக்கு பல மாதங்களாக சம்பளம் தராமல் தொடர்ந்து நடிக்க சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதுபோல இந்த சீரியலில் நடிக்கும் போது நடிகைகளுக்கு உடை மாற்றுவதற்கு சரியாக ரூம் அரேஞ்ச் டு செய்யவில்லை பாத்ரூம் வசதியும் சரியாக இல்லாததால் தனக்கு உடல் ரீதியாக சில பிரச்சனைகள் ஏற்பட்டது. அதனால் தான் சீரியலில் இருந்து விலகினேன் என்று அவர் பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சினிமா மற்றும் சின்னத்திரை உலகம் வெளியிலிருந்து பார்க்கும்போது கவர்ச்சியாகத் தோன்றினாலும், உள்ளே வரும் கலைஞர்கள் தங்கள் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் பெறுவதற்கும், உரிய அங்கீகாரம் பெறுவதற்கும் இதுபோன்ற போராட்டங்களைச் சந்திக்க வேண்டி இருக்கிறது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications