22 வருடமாக எனக்கு துரோகம்.. இப்ப அந்த சின்ன பொண்ணுக்கும்! கார்த்திக் பற்றி சுசித்ரா திடீர் பதிவு
சென்னை: பின்னணி பாடகி சுசித்ரா தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. இந்த பதிவிற்கு கார்த்திக் குமார் பதில் பதிவு ஒன்று கொடுத்து இருக்கிறார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பின்னணி பாடகியான சுசித்ரா அடிக்கடி பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அவருடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமாரை விவாகரத்து செய்த பிறகு அவர் பற்றி சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு குற்றசாட்டுகளை வைத்திருந்தார். அதற்கு கார்த்திக் குமார் அவதூறு வழக்கு தொடுத்து இருந்தார். அதே நேரத்தில் சினிமா துறையில் முன்னணியில் இருக்கும் தனுஷ், திரிஷா, விஜய், அஜித் போன்ற பலரைப் பற்றியும் தொடர்ந்து பேட்டிகளில் சுசித்ரா பேசியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தான் இனி எந்த பேட்டியும் கொடுக்க மாட்டேன் என்று ஒரு விளக்கம் கொடுத்திருந்தார். ஆனால் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதில் அவருடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமாருக்கு கடிதமாக எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் நீ எனக்கு போலி கணவனாக இருந்து என்னை குழந்தைகளை பெறவிடாமல் தடுத்து விட்டாய்.
என்னுடைய வாழ்நாளில் 13 வருடங்களை நீ அழித்து விட்டாய். உன்னுடைய வைரல் வீடியோக்களால் நான் உழைத்த இடத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டு விட்டேன். நான் உன்னை திருமணம் செய்த போது நீ பிரபலமாகாமல் இருந்தாய். நீ நடித்த திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டங்களை மட்டும்தான் தந்தது. அதற்குப் பிறகு ஸ்டாண்ட் அப் காமெடியனாக மாறினாய்.

அதிலும் பெண்களை கேவலமாக பேசினாய். உன்னை விட 20 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டாய். அவள் இதற்கு முன்பு நிறைய கவிதைகள் எழுதுவது, நடிப்பு உள்ளிட்ட பட வேலைகளை செய்து கொண்டிருந்தாள். ஆனால் இப்போது அவள் பெரிதாக எதுவும் செய்யவில்லை. அதற்கு காரணமும் உன்னுடைய பொறாமையா? நீ ஒரு ஓரினச்சேர்க்கையாளன். ஆனால் அதனை நீ மறுக்கிறாய். நீ உன்னுடைய அம்மாவிடம் மட்டும்தான் அதிகமாக அன்பு செலுத்துகிறாய். இதுவும் ஒரு விதமான நோய்தான்.
13 வருடங்கள் உன்னுடனான திருமண வாழ்க்கை மொத்தமும் வீண் தான். உன் மூலமாக வந்த சுசி லீக்ஸ் பிரச்சனையால் என்னுடைய 9 வருட வாழ்க்கை பாழாய் போய்விட்டது. ஆக மொத்தம் 22 வருடம் எனக்கு நீ துரோகம் செய்திருக்கிறாய். பேட்டிகளில் பேசும்போது மட்டும் நீ பெண்களை மதிப்பது போன்று நடிக்கிறாய். ஆனால் நான் வாழும் வரை நீ ஒரு ஓரினச்சேர்க்கையாளன் என்பதை சொல்லிக் கொண்டே இருப்பேன்.

நான் ஒரு நாளும் உன்னை மன்னிக்க மாட்டேன் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவுக்கு பதில் கொடுக்கும் விதமாக கார்த்தி குமார், நான் அவளுடைய நீண்ட நாள் துணைவனாகவும், சக பெற்றோராகவும், உறுதுணையாகவும் பகிர்ந்து பார்த்துக் கொண்டேன். அவள் மட்டுமல்லாமல் அவளுடைய குடும்பத்தையும் நான் நன்றாகவே பார்த்தேன். அவளால் தான் அவள் வாழ்வில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேன்.
எனக்கான மதிப்பும் அவளிடத்தில் இல்லை. அதனால் ஒரு கட்டத்தில் நானும் அவளை விட்டு விலகி விட்டேன். நான் விலகியது அவளுக்கு பெரிய இழப்பு என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு சுசித்ரா பதிலடி கொடுக்கும் விதமாக என்ன அப்படி பார்த்து விட்டீர்கள்? சுசி லீக்ஸால் என்னை படுகுழியில் தான் தள்ளி இருக்கிறீர்கள். உங்களுக்காக நான் 22 வருடங்களை கொடுத்திருக்கிறேன். நான்தான் உங்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்று அதில் கூறி இருக்கிறார். இவர்கள் இருவரின் வாக்குவாதங்களும் இன்று மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications