நடிகை மனோரமா சொன்ன வார்த்தை.. வாழ்க்கை இப்படி ஆனது.. மனம் திறந்த நடிகை சுலக்ஷனா
சென்னை: நடிகை சுலக்ஷனா, நடிகை மனோரமா பற்றி பல தகவல்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு மீண்டும் தான் நடிக்க வந்ததற்கு காரணம் நடிகை மனோரமா தான் என்று சுலக்ஷனா கூறி இருக்கிறார்.
நடிகை மனோரமா சொன்ன வார்த்தையால் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து சுலக்ஷனா பேசியிருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
பல காலமாக பல நடிகைகள் வெள்ளி திரையில் கொடி கட்டி பறந்து விட்டு தங்களுக்கு அங்கே மார்க்கெட் கொஞ்சம் சரியத் தொடங்கியதும் சின்ன திரையில் கதாநாயகியாகவும், அம்மா கேரக்டர்களிலும் , அக்கா கேரக்டரிலும் குணச்சித்திர கேரக்டர்களிலும் நடிக்க தொடங்கி விடுவார்கள். அந்த வரிசையில் ஒருவர் தான் சுலக்ஷனா.
துலாபாரம் என்ற திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதற்குப் பிறகு தூறல் நின்னு போச்சு என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அவதாரம் எடுத்து கிட்டத்தட்ட 450 மடங்களுக்கு மேலே சுலக்ஷனா நடித்திருக்கிறார். அதுவும் கமல் ரஜினி இருவரோடும் ஜோடி போட்ட நடிகைகளில் இவரும் ஒருவர். அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் நடிகையாக இருக்கும் போது கிடைத்த அனுபவங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றி கூறியிருக்கிறார்.

அதில் நான் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தேன், அதற்கு பிறகு எனக்கு குணச்சித்திர வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் நடிகை மனோரமா என்னிடம் பல அட்வைஸ் பண்ணி இருக்கிறார். எப்போதும் நமக்கு வாய்ப்பு வந்தால் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நான் இப்படித்தான் இருப்பேன் என்று அடம்பிடிக்க கூடாது என்று கூறி இருக்கிறார்.
கதாநாயகியாக இருந்தால் எப்போதும் கதாநாயகியாக தான் இருப்பேன் என்று நான் அடம் பிடித்துக் கொண்டு இருந்தால் அந்த இடத்திற்கு இன்னொருவர் வந்துவிடுவார். கிடைக்கும் வாய்ப்பை நாம் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். அது என்னுடைய மனதில் இப்ப வரைக்கும் நிலைத்திருக்கிறது. அதனால் தான் நான் கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் நடிக்க தொடங்கினேன் என்று சுலக்ஷனா கூறி இருக்கிறார்.

கதாநாயகியாக நடித்துவிட்டு எப்படி அக்கா கேரக்டரிலும் அம்மா கேரக்டரிலும் நடிக்கவே முடியும் என்று சிலர் சினிமாவை விட்டு விலகிப் போய் விடுகிறார்கள். ஆனால் நமக்கு பிடித்த வேலையை நாம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் மீண்டும் இங்கே வந்தேன் இப்போது வரைக்கும் தொடர்கிறேன் என்று சுலக்ஷனா கூறி இருக்கிறார்.
அதோடு நான் சீரியலில் நடிப்பதற்கும் அன்று என்னிடம் மனோரமா கூறிய வார்த்தை தான் நடிகர் மனோரமா எவ்வளவு பிரச்சனைகளை தாண்டி பலராலும் ஆச்சி என்று செல்லமாக அழைக்கும் நிலைக்கு வந்து இருப்பார். அவருடைய நடிப்பில் அனுபவத்தில் கொஞ்சம் கூட நான் பார்த்திருக்கிற மாட்டேன் என்று நினைக்கிறேன். அதனால் அவருடைய வார்த்தையை கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று கூறி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications