lockdown: இந்தா...இவங்களும் ஆரம்பிச்சுட்டாங்க...ஹவுஸ் வித் சன்!
சென்னை: டிவி சீரியல் நட்சத்திரங்களை வீட்டில் இருந்தபடியே ஏதாவது ஒரு விதத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கும் நிகழ்ச்சியை விஜய் டிவி லாக்டவுன் ஆரம்பித்த வேகத்திலேயே ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று துவங்கி விட்டது.
கூடிய விரைவில் என்று ப்ரோமோ போட்டு வரும் சன் டிவி, ஹவுஸ் வித் சன் என்று ஒரு நிகழ்ச்சியை சீரியல் நட்சத்திரங்கள் வீட்டில் இருந்தபடியே பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றைத் துவங்க இருக்கிறது.
கோவிட் 19 தொற்று காரணமாக லாக்டவுனில் இருக்கும் சென்னை மாநகருக்கு ஷூட்டிங், அது இது என்று கூட்டம் போட விதிமுறைகளுடன் கூட, தமிழக அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை.

பாண்டவர் இல்லம் ராசாத்தி
பாண்டவர் இல்லம் சீரியல் நட்சத்திரங்கள் ஒருவருடன் ஒருவர் வீடியோ காலில் பேசிக்கொள்வது...ராசாத்தி சீரியல் நட்சத்திரங்கள் விசித்திரா உட்பட நால்வர் வீடியோ காலில் பேசிக்கொள்வது என்று ப்ரோமோ போகிறது. பாண்டவர் இல்லம் சீரியலில் கயலாக நடிக்கும் பாப்ரி மட்டும் கொல்கத்தாவை சேர்ந்தவர்.. மற்றவர்கள் சென்னைதான்.

நிலா சந்திரலேகா சீரியல்
அதே போன்று நிலா சீரியல் குடும்பத்தை சேர்ந்த நடிகர் நடிகைகள், சந்திரலேகா சீரியல் குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் நடிகைகளும் அந்தந்த குடும்ப நட்சத்திரங்களோடு வீடியோ காலில் பேசிக்கொள்கிறார்கள். நிலா சீரியல் நாயகி பவித்ரா. சந்திரலேகா சீரியல் நாயகி ஸ்வேதா இருவரும் இந்த வீடியோ காலில் இணைகிறார்கள்.

அழகு ரோஜா
அழகு சீரியல் குடும்பத்தைச் சேர்ந்த சங்கீதா உள்ளிட்டவர்களுடன், சன் டிவி அர்ஷத் உரையாடுகிறார். ரோஜா சீரியல் நாயகி பிரியங்காவுடன் ரம்யா உள்ளிட்டவர்கள் வீடியோ காலில் பேசுகிறார்கள். அனைவருமே லாக்டவுன் குறித்து உரையாடுகிறார்கள்.

மாஸ்டர் படத்துக்கு வெயிட்டிங்
கண்மணி சீரியல் குடும்பத்தின் சஞ்சீவ். லிசா உள்ளிட்டவர்கள் உரையாடுகிறார்கள். சஞ்சீவ் உடல் இளைத்து அழகாக இருப்பதாகவும், மாஸ்டர் படத்துக்கு வெயிட்டிங் என்றும் கூறும்போதுதான் சஞ்சீவ் அந்த விஷயத்தை சொன்னார். மாஸ்டர் பாட்டுக்கு டான்ஸ் ஆடுவது மட்டும்தான் படத்தில் வருது. மத்ததை எல்லாம் தூக்கிட்டாங்க என்று.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications