நாதஸ்வரம் சீரியல் காஜா ஞாபகம் இருக்கா? இப்போ என்ன வேலை செய்கிறார் தெரியுமா? உருக்கமான வார்த்தை
சென்னை: இயக்குனர் திருமுருகனின் இயக்கத்தில் வெளியான நாதஸ்வரம் சீரியலில் காஜா கேரக்டரில் நடித்த நடிகர் காஜா ஃபெரோஸ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய தற்போதைய நிலை குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார். சீரியல்களில் பல வருடங்களாக நடித்த காஜா இப்போது செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
அந்த வகையில் ஒரு சில நடிகர்கள் சில சீரியல்களில் நடித்து பெரிய அளவில் பிரபலமடைந்து விடுகிறார்கள். ஆனால் பிறகு அவர்கள் எங்கே போனார்கள் என்று தெரியாத அளவிற்கு காணாமல் போய்விடுகிறார்கள். சிலருக்கு திறமைகள் இருந்தாலும் அதற்கு சரியான வாய்ப்புகள் இல்லாமல் போய்விடுவதுதான் இதற்கு காரணம்.

அந்த வகையில் நாதஸ்வரம் சீரியல் மூலமாக பெரிய அளவில் பிரபலம் அடைந்த காஜா இப்போது நடிப்பு வாய்ப்பு இல்லாததால் தன்னுடைய ஊரில் இருக்கும் செல்போன் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் திருமுருகன் பற்றியும் அவர் இயக்கிய சீரியல்களில் தான் நடித்த அனுபவம் குறித்தும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில், திருமுருகன் சார் கிட்ட இருந்து வர்ற ஒரு போனுக்காக நான் ரொம்பவே வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கிறேன். திருமுருகன் சார் தான் என்னை சீரியலில் அறிமுகப்படுத்தி இருந்தார். அதற்குப் பிறகு சின்ன திரையில் நான் பிரபலமாக தான் இருந்தேன். ஆனாலும் எனக்கு அதைத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
என்னுடைய சொந்த ஊர் தர்மபுரி. சின்ன வயசிலிருந்து சினிமா பார்க்கிறது ரொம்ப பிடிக்கும். வீட்டுக்கு தெரியாம போய் படம் பார்த்துட்டு திட்டு, அடி எல்லாம் வாங்கி இருக்கிறேன். பெரிய பெரிய நடிகர்களின் படங்களை பார்த்துவிட்டு அவர்களை மாதிரியே ஸ்டைல் பண்ணுவதை கவனித்த சிலர் நீ நடிக்கப் போகலாம் என்று என்னுடைய ஆசையை தூண்டுனாங்க. அந்த சமயத்தில் தான் திருமுருகன் சார் நாதஸ்வரம் சீரியலுக்கான ஆடிஷன் பண்ணுனாங்க என்ற தகவல் கிடைத்தது.
அந்த ஆடிஷனுக்கு நானும் போனேன். அங்கு இருந்த கூட்டத்தில் நான் எப்படியும் செலக்ட் ஆக மாட்டேன் என்று முதலில் நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்க்காத விதமாக நான் செலக்ட் ஆகி விட்டேன். பிறகு எனக்குள் இருந்து நடிப்பு திறமையை வெளியே கொண்டு வந்தது திருமுருகன் சார்தான். அவர் என்னை தேர்ந்தெடுத்தது மட்டுமல்லாமல் என் கேரக்டரையும் அவர் கூடவே கடைசி வரைக்கும் இருக்கிற மாதிரியே வைத்திருந்தார்.
அதனால் எனக்கும் சீரியல் முடிகிற வரைக்கும் நல்ல ஒரு வரவேற்பு இருந்தது. அந்த அனுபவங்களை என்னால் மறக்கவே முடியாது. அந்த சீரியலில் நாங்கள் நடிக்கும்போது எல்லோரும் ஒரே குடும்பமாகத்தான் இருந்தோம். ஆனால் சீரியல் முடிந்த பிறகு எல்லோரும் அவர்கள் வழியில் போய்விட்டதால் சரியாக காண்டாக்ட் பண்ண முடியாமல் போய்விட்டது. நான் அந்த சீரியல் முடிந்த பிறகு யாரிடமும் பெரியதாக பேசவில்லை.

ஆனால் இப்போது அந்த சீரியலில் நடித்தவர்கள் எல்லாரும் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அது பார்க்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது. நானும் அந்த வீடியோக்களை பார்த்தேன். அதுபோல திருமுருகன் சார் சமீபத்தில் "புதிய படைப்பு விரைவில் வரும்" என்று கூறியிருக்கிறார். அது எனக்கு தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. அவர் புதியதாக தொடங்க இருக்கும் சீரியலில் எனக்கான ஒரு கேரக்டர் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது எனக்கு வருமானம் வந்து கொண்டிருந்தது. ஆனால் நான் நாதஸ்வரம் சீரியல் நடித்துக் கொண்டிருந்தாலும் அந்த சீரியலை தாண்டி வேறு யாரிடமும் பெரிய அளவில் எனக்கு அறிமுகம் கிடையாது. அதனால் அடுத்த அடுத்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.
அதனால் சீரியல் முடிவடைந்த பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக என்னுடைய ஊரில் இருக்கும் ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து கொண்டு இருக்கிறேன். சென்னைக்கு போய் வாய்ப்பு தேடு என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் என்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது. நான் சென்னைக்கு போய் வேலை தேடுற நாட்களில் என்னுடைய குடும்பத்திற்கு வருமானம் இல்லாமல் போய்விடும். அதனாலயே நான் கிடைத்த வேலையை செய்து கொண்டிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் காஜா பேசியிருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications