நாதஸ்வரம் சீரியல் “காமு” ஞாபகம் இருக்கா? கல்யாணத்தால் வந்த வினை! இன்னும் அந்த பயம் போகல.. உருக்கம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் காமு கேரக்டரில் நடித்து பிரபலம் அடைந்த நடிகை பென்ஸி பிரிங்க்ளின் சமீபத்தில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கஷ்டங்கள் குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் தான் ஆசையோடு காத்திருந்த திருமண வாழ்க்கை தனக்கு எவ்வளவு பிரச்சனையாக அமைந்தது என்று வருத்தத்தோடு பகிர்ந்து இருக்கிறார்.
ஆரம்பத்தில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய பென்ஸி நாதஸ்வரம் சீரியலுக்கு பிறகு கல்யாண வீடு என்ற சீரியலிலும் நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கு சின்ன வயசுல இருந்து டான்ஸ் ஆடுவது ரொம்ப பிடிக்கும். குச்சிப்புடி, பரதநாட்டியம், வெஸ்டர்ன் எல்லாம் முறையாக கற்றுக் கொண்டேன்.

என்னுடைய அப்பாவுக்கு சின்ன வயசுல இருந்தே நடிக்கணும் என்ற ஆசை இருந்தது. அவர் இந்தியன் பேங்க் மேனேஜராக இருந்தாலும் கூட பல ஆடிஷனில் கலந்து கொண்டிருக்கிறார். அப்படி ஆடிசனுக்கு போகும்போது என்னையும் ஒரு முறை அவர் கூட்டிட்டு போயிருந்தார். அங்கே என்னை பார்த்துவிட்டு ஒருத்தர் குழந்தையாக சீரியலில் நடிக்க உங்க பொண்ணு பொருத்தமாக இருப்பார் என்று சொல்லி தினமும் முகத்துக்கு தயிர் போட சொல்லி அட்வைஸ் பண்ணினார்.
அப்போ நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அன்னைக்கு தான் என்னுடைய மீடியா பயணம் தொடங்கியது. எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆறாம் வகுப்பு படிக்கும் போது முடிவு செய்தேன். உங்களில் யார் அடுத்த பிரபுதேவா? என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அதில் நான் செலக்ட் ஆகி விட்டேன். எனக்கு அப்போது கிளாசிக்கல் மட்டும்தான் தெரியும்.
வெஸ்டர்ன் தெரியாது என்பதால் நான் கற்றுக் கொண்டேன். அப்போது என்னுடைய உடல் எடையை குறித்து பலரும் விமர்சனம் செய்து பேசி வந்தார்கள். இருந்தாலும் நான் என்னுடைய முயற்சிகளை கைவிடவில்லை. அதற்கு பிறகு வசந்த் டிவியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினேன். அடுத்தடுத்து ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு டிபார்ட்மெண்டிலும் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.

இருந்தாலும் மீடியாவில் ஜெயிக்க வேண்டும் என்ற என்னுடைய கனவு மட்டும் குறையவே இல்லை. அந்த நேரத்தில் தான் திருமுருகன்
சாரை மீட் பண்ணினேன். அதற்கு பிறகு நாதஸ்வரம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் மூலம் பல விஷயங்களை நான் திருமுருகன் சாரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். அந்த நேரத்தில் எனக்கு திருமணம் நடைபெற்றது. என்னுடைய திருமணம் அரேஞ்ச் மேரேஜ் தான்.
நாதஸ்வரம் சீரியல் முடிவடைந்த சமயம் தான் எனக்கு திருமணம் நடைபெற்றது. பல கனவுகளோடு திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தேன். என்னுடைய வாழ்க்கையில் எனக்கு விவாகரத்து ஆகும் என்று நான் கொஞ்சம் கூட நினைத்தது கிடையாது. ஆனால் ஒரு பெண்ணுடைய வாழ்க்கையில் கல்யாண வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றால் வாழ்க்கையே வீணாக போய்விடும்.

ஆரம்பத்தில் என்னுடைய திருமண வாழ்க்கையில் நான் மென்டல்லி டிப்ரஷனாக இருந்தேன். நான் எல்லா பெண்களிடமும் சொல்வது ஒன்றே ஒன்றுதான் நீங்கள் என்ன படித்திருந்தாலும் உங்களுக்கு என்று ஒரு வேலை இருக்கணும். அதுதான் நமக்கு கை கொடுக்கும். அதுபோல விவாகரத்து ஆனதும் கூட என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. ரொம்ப வலியாக இருந்தது.
எனக்கு அடுத்து இரண்டு தங்கைகள் இருந்தார்கள் நான் விவாகரத்து வாங்கி விட்டால் எங்க குடும்பத்தில் உள்ளவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று தயக்கம் இருந்தது. ஆனாலும் என்னால் அந்த ரிலேஷன்ஷிப்பில் தொடர முடியாது என்று என்னுடைய அம்மா அப்பா புரியும் படி நான் அவர்களிடம் பேசினேன். அதற்குப் பிறகு அவர்களும் புரிந்து கொண்டதும் நான் கல்யாண வாழ்க்கையில் விவாகரத்து வாங்கி வெளியே வந்து விட்டேன்.

இப்போ இன்னொரு கல்யாணத்தை பற்றி யோசிக்கவே எனக்கு பயமாக இருக்கிறது. ரொம்ப மெண்டல் பிரஷராக இருந்தப்ப தான் எனக்கு கல்யாண வீடு சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படியே நான் அங்கே வேலையில் கனவு கவனம் செலுத்த ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமா அந்த மன அழுத்தத்திலிருந்து மீண்டு வந்தேன். திருமுருகன் சார் முதல் ஒட்டுமொத்த டீமும் எனக்கு ஆறுதலாக இருந்தார்கள். அதுபோல எனக்கு சாகுற வரைக்கும் நடிக்கணும் என்று ஆசை இருக்கிறது. திருமுருகன் சாரோட ப்ராஜெக்ட் மூலமா எல்லோரையும் சந்திப்பேன் என்று நம்பிக்கை இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications