சன் டிவியில் முடிவுக்கு வந்த எதிர்நீச்சல் சீரியல்.. இனி அதற்கு பதில் இந்த சீரியல்! இதுதான் காரணமா?
சென்னை: சன் டிவியில் இயக்குனர் திருச்செல்வம் இயக்கிய எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்திருக்கிறது. அதற்கு பதிலாக வேறொரு சீரியலும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
சின்னத்திரையில் சீரியலே பார்க்காத ரசிகர்களையும் கூட சீரியல் பார்க்க வைத்த பெருமை எதிர்நீச்சல் சீரியலுக்கு உண்டு. இந்த சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சீரியல் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே நல்ல வரவேற்பு பெற தொடங்கி விட்டது. அதிலும் இந்த சீரியலில் வில்லனாக நடித்த நடிகர் மாரிமுத்துவிற்கு கதாநாயகனை மிஞ்சும் அளவிற்கு ரசிகர்கள் கிடைத்துவிட்டனர். இவர் வில்லன் என்று சொன்னாலும் இவரையே ஹீரோவாக பலர் கொண்டாடி வந்தனர்.

வருத்தம்
எப்போதுதான் எதிர்நீச்சல் பெண்கள் நீச்சல் போட்டு முன்னேற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மாரிமுத்துவின் மரணம் வந்துவிட்டது. அவர் திடீரென உடல்நிலை குறைபாட்டால் காலமானார். அதற்கு பிறகு சீரியலின் கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது. ஆனால் அந்த மாற்றங்கள் மக்கள் ரசிக்கும் வகையில் இல்லை என்பதால் அந்த சீரியலுக்கு நெகட்டிவ் கமெண்ட்கள் வர தொடங்கிவிட்டது.
கதையில் மாற்றம்
அதனால் அதனால் எதிர்நீச்சல் சீரியலின் முதல் பாகத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து விட்டனர் பிறகு ரசிகர்கள் அதிகமானோர் இந்த சீரியலில் இரண்டாவது பாகம் வரவேண்டும் என்று கருத்து தெரிவித்து வந்தனர். அதன்படியே இரண்டாவது பாகத்தையும் திருச்செல்வம் தொடங்கிவிட்டார். சீரியல் தொடங்கி சில மாதங்கள் கடந்து விட்ட நிலையில் இப்போதுதான் இந்த சீரியல் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.
முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்
சன் டிவியில் இரவு ஒளிபரப்பாகும் சீரியல்கள் மறுநாளும் மறு ஒளிபரப்பு செய்யப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. அது போல எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலும் காலையில் மறு ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் சீரியலுக்கு பெரிய அளவில் டிஆர்பி வரவில்லை அதனால் இந்த சீரியலை நிறுத்திவிட்டு இதற்கு பதிலாக ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பான நந்தினி சீரியல் மீண்டும் பரப்பு செய்யப்படுகிறது.
நந்தினி சீரியல்
நந்தினி சீரியலை இயக்குனர் சுந்தர் சி தான் இயக்கி இருந்தார். இந்த சீரியலும் திரைப்படத்திற்கு இணையாக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த சீரியலில் பிரம்மாண்டத்தை பார்ப்பதற்காக பலர் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வந்தனர். ஆனால் திடீரென அந்த சீரியல் முடிவுக்கு வந்துவிட்டது. அதை இப்பொழுது மீண்டும் ஒளிபரப்பு செய்து இருக்கிறார்கள்.
குணசேகரன் சொன்ன வார்த்தை
எதிர்நீச்சல் சீரியலில் இரண்டாவது பாகமான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் வீட்டு பெண்கள் மீண்டும் மீண்டும் குணசேகரனிடம் தோற்றுப் போய்க் கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் எப்போ தான் ஜெயிக்க போகிறார்கள் என்று சில வருடங்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்து வருவதால் இது சீரியலுக்கு நெகடிவ் கமெண்ட்கள் வந்து கொண்டே இருக்கிறது

நெகடிவ் கமெண்ட்கள்
அதனால் இப்போது எதிர்நீச்சல் சீரியல் சின்னதாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. குணசேகரன் எதிர்நீச்சல் பெண்களின் பிசினஸுக்கு உதவி செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். குணசேகரன் ஏற்கனவே தன்னுடைய தம்பிகளிடம் பிளான் போட்டு அவர்களுடைய மனைவிமார்களை பிரித்து வைப்பதற்காக பேசி வைத்திருந்தார். இப்போது அதே விஷயத்தை குணசேகரன் வீட்டு மருமகள்களும் செய்ய தொடங்கி இருக்கிறார். இது இப்போது சீரியலுக்கு சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது. ஆனாலும் தொடர்ந்து எப்படி போகப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications