ஆரம்பமே சாய் பல்லவிக்கு இழுத்துட்டு போகுதே.. அதுவிடுங்க, வடசென்னை 2 படத்தின் குட்நியூஸ் பாருங்க
சென்னை: ராமாயணா என்ற படத்தில் சீதா வேடத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். இதில், அவர் நடித்துள்ள சீதாதேவி கேரக்டர் வட இந்திய நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வேடத்தில் அவர் நடிப்பது ராமாயணா காவியத்தை அவமதிப்பது போல் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தபடி உள்ளன.. இந்நிலையில், சாய் பல்லவி நடிக்கும் 2 படங்களை பற்றி தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
பிரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக அறிமுகமான சாய் பல்லவி தமிழ் , இந்தி , மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தார்.

சாய் பல்லவி - அடுத்த படம்
தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், அவ்வப்போது ஒரு படத்தில் நடித்தாலும் அதற்கு ரசிகர்களின் பெரும் ஆதரவும் வரவேற்பும், சாய் பல்லவிக்கு கிடைத்து வருகிறது. பெரிதாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல், எளிமையான நடிப்பு, நளிதான நடனம் மூலம் தென்மாநில ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார் சாய் பல்லவி.
மேலும் தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களின் மதிப்பையும் பெற்றிருப்பவர்.. தமிழில் சமீபத்தில் அமரன் படத்தில் நடித்து, அபாரமான பாராட்டை சாய் பல்லவி பெற்றிருந்தார். அமரன் படத்தில் நடிக்க முதலில் தயங்கியிருக்கிறார் சாய் பல்லவி.
பிறகு, மேஜர் முகுந்தின் மனைவி இந்துவை சந்தித்து பேசிவிட்டு அதன் பிறகு முடிவு செய்யுங்கள் என சாய் பல்லவியிடம் சொன்னாராம் ராஜ்குமார் பெரியசாமி. இந்துவை சந்தித்த பிறகு இந்த படத்தில் கண்டிப்பாக, தான் நடிப்பதாக கூறியிருக்கிறார்.
முதல் படமே தள்ளிப்போகுதா?
இப்போது நடிகை சாய்பல்லவி பாலிவுட்டிலும் அறிமுகமாக போகிறார்.. ஆரம்பத்தில், அந்த் படத்திற்கு ''ஏக் தின்'' என்று பெயரிடப்பட்டு நவம்பர் 7ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இப்போது ''மேரே ரஹோ' என்று படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளதாகவும் நவம்பர் 7 ம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 12 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
சுனில் பாண்டே இயக்கத்தில் அமீர் கானின் மகன் ஜுனைத் கான் நடித்திருக்கும் இந்த படத்தை அமீர் கான் மற்றும் மன்சூர் கான் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் தவிர, பாலிவுட்டில் சாய்பல்லவி ''ராமாயணம்'' படத்திலும் நடித்து வருகிறார். 2 பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீஸாக போகிறது..
சிம்பு ஜோடியாக சாய் பல்லவி
அதேபோல, வடசென்னை 2 படத்திலும் சாய் பல்லவி நடிக்க வாய்ப்புள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகியிருக்கிறது.. தனுஷின் வடசென்னை பட சாயல், இந்த 2ம் பாகத்திலும் அதிகம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்... இந்த படத்தில் சிம்பு நடிப்பதாக உள்ளது.. அதாவது சிம்பு-வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்து தனது 49வது படத்தில் நடிக்க உள்ளார்.
இதில் சிம்புவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வடசென்னை கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் கேங்ஸ்டர் வேடத்தில் சிம்பு நடிக்கும் நிலையில் சாய் பல்லவியும் வடசென்னை பெண்ணாக பேசி நடிக்க உள்ளதாகவும் கூடுதல் தகவல்கள் வெளியாகி, ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றன..
தனுஷ் தந்த குட்நியூஸ்
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜூன் மாதம் சென்னையில் நடைபெற்றது.. இதில் தனுஷிடம் 'வடசென்னை 2' எப்போது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தனுஷ் 'நீங்களும் 2018 முதல் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். கண்டிப்பாக அடுத்த ஆண்டு 'வடசென்னை 2' உருவாகும்' என்று உறுதி கூறியிருந்தது நினைவிருக்கலாம். இப்போது, வடசென்னை2 படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை சாய் பல்லவி என்பது கூடுதல் தகவலாக வட்டமடித்து ரசிகர்களை குஷிப்படுத்திவருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications