சூப்பர் மாம் சீசன் 2 கலக்கலா இருக்கும் போலிருக்கே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் டிவியின் சூப்பர் மாம் சீசன் 2 செம கலக்கலாக இருக்கும் போலிருக்கிறது. வித்தியாசமான அம்மா குழந்தைகளைத் தேர்வு செய்து அசத்தி இருக்கிறார்கள்.

அம்மா தேவி விளம்பர மாடல்.இவரின் மகள் யுவினா விளம்பரங்களிலும் நடிச்சு இருக்கார் இருவரும் சேர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளனர்.

சூப்பர் மாம் சீசன் 2 ஞாயிறு தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.டான்ஸ் மாஸ்டர் சாந்தி தனது வாரிசுடன் கலந்துக் கொள்கிறார்.இப்படி பல பிரபலங்கள்.

தேவி யுவினா

தேவி யுவினா

குழந்தை யுவினா இரண்டு மூன்று வயதுக்குள் கலைஞர் தொலைக் காட்சியின் சீரியல் ஒன்றில் நடித்தவர். அதற்கு அடுத்து இப்போது விளம்பரங்கள், திரைப்படங்கள், என்று நடிப்பில் இன்னும் இன்னும் உயர சென்று கொண்டு இருக்கிறார்.

ஆலு பராத்தா

ஆலு பராத்தா

யுவி தனது அம்மா பற்றி பேசுகையில், அம்மா பாஸ்தா,ஆலு பராத்தா ஜங் ஃபூட் எல்லாம் நல்லா செய்வாங்க என்று சொன்னார். இந்த கொத்தவரங்காய் பொரியல் இப்படிப்பட்ட அயிட்டம் எல்லாம் உனக்கு பிடிக்காதா என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் அர்ச்சனா கேட்டபோது அய்யே என்று முகம் சுளித்தார்.

யுவினா புதினா

யுவினா புதினா

ஃபிரண்ட்ஸ் யுவினாவை புதினா புதினான்னு கூப்பிட்டு கிண்டல் பண்ணுவாங்களாம். இப்போ புதினா புதினான்னே பட்டப் பேர் வச்சுட்டாங்கன்னு சொன்னார். மிக நன்றாக நடிக்க கூடிய அருமையான குழந்தை யுவினா. நல்ல மாடலும் கூட!

மனைவி குழந்தை

மனைவி குழந்தை

விஐய் டிவி காமெடி நிகழ்ச்சியின் ஆஸ்தான நடுவர் தாடி பாலாஜியின் மனைவி மற்றும் மகளும் கூட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இந்த முறை கொஞ்சம் வித்தியாசமான பிரபலங்கள் இவர்கள் பங்கேற்கும் வித்தியாசமான போட்டிகள் என்று சூப்பர் மாம் சீசன் 2 களைக் கட்டும் என்று பலரின் எதிர்பார்ப்பு ஜீ தமிழ் டிவியின் ப்ரோமோவில் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+