நடிகர் சிவகார்த்திகேயன் தங்கச்சி இவங்களா? அவரே உடைத்த ரகசியம்.. நடுவர்களுக்கு வைத்த செக்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியில் 2024 பிப்ரவரி 24 மற்றும் 25 ஆம் தேதிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் சூப்பர் சிங்கர் போட்டியாளர் சிவகார்த்திகேயனை சந்தித்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சூப்பர் சிங்கர் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஒரு பெண் போட்டியாளரின் ஆசைக்காக அவருக்கு சிவகார்த்திகேயன் திடீர் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். அதோடு தன்னுடைய தங்கச்சிக்காக சூப்பர் சிங்கர் நடுவர்களிடமும் சிவகார்த்திகேயன் க்யூட்டான ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார். அந்த ப்ரோமோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் சீசன் 9 ஜூனியர்களுக்கான இறுதி சுற்று முடிவடைந்ததும் அதை தொடர்ந்து சூப்பர் சிங்கர் சீனியர்களுக்கான நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 16, 2023 முதல் ஒளிபரப்ப தொடங்கி இருக்கிறது. இதில் இந்த வாரத்தில் தல தளபதி ரவுண்டு தொடங்கப்பட்டிருக்கிறது. அதனால் விஜய் மற்றும் அஜித் உடைய பாடல்கள் இந்த வாரம் ஸ்பெஷலாக பாடப்பட்டிருக்கிறது.
அதோடு இந்த வாரத்தில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், டான்ஸ் மாஸ்டர் அமீர், பாவணி அதுபோல கானா பாடகர்கள் என பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இருக்கிறார்கள். இப்படியான நிலையில் இதில் இன்னொரு முக்கியமான நிகழ்வும் நடந்திருக்கிறது. அதாவது சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஒரு பெண் இந்த வாரத்தில் நடிகர் விஜய் நடிப்பில் குஷி திரைப்படத்தில் வெளியான மொட்டு ஒன்னு மலர்ந்திட மறுக்கும் என்ற பாடலை க்யூட்டாக பாட அதை கேட்டதும் நடுவர்கள் உங்களுடைய பாடல் ரொம்ப க்யூட்டா இருந்தது என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது தொகுப்பாளராக இருக்கும் பிரியங்கா இவங்க ரொம்ப ரொம்ப ஆசைப்பட்ட ஒரு நிகழ்வு இவர்களுக்கு நடந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதாவது அந்தப் பெண் ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயனின் தீவிரமான ரசிகையாம். அதை பலமுறை சூப்பர் சிங்கர் மேடையில் கூறியிருக்கிறாராம். அதனால் அவருக்கு சிவகார்த்திகேயன் திடீர் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
சிவகார்த்திகேயனை பார்க்க போவதற்காக அந்த சூப்பர் சிங்கர் போட்டியாளரின் குடும்பத்தினர் அவரை கூட்டிக்கொண்டு போக அங்கு ஒரு அறையில் இருந்து சிவகார்த்திகேயன் திடீரென்று அந்த போட்டியாளரின் முன்பு வந்து அந்த போட்டியாளருக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். சிவகார்த்திகேயனை கண்டதும் அவர் சிவகார்த்திகேயனை கட்டிப்பிடித்து இது கனவு மாதிரி இருக்கு உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்க,

அதற்கு சிவகார்த்திகேயன் நேரில் பார்க்க வேண்டும் என்று நீங்க சொல்லிக்கிட்டு இருந்தீங்களாமே நானும் அதற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன் என்று சொல்ல அதற்கு அந்த போட்டியாளர் ஆமா நான் உங்க கிட்ட பேசணும், சென்னைக்கு வரணும் என்று சொல்லும்போது நான் இதெல்லாம் நடக்கவா போகுதுன்னு நினைச்சுட்டே இருந்தேன் என்று அவர் சொல்ல அதற்கு சிவகார்த்திகேயன் ஏன் நடக்காது? கண்டிப்பா நடந்துட்டு இல்ல...
நானும் ஒருமுறை உங்க ஊருக்கு வாரேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து நடுவர்களிடம் எல்லா நடுவர்களுக்கும் ஹாய்.. இது என்னுடைய தங்கச்சி, அதனால கொஞ்சம் மார்க் எல்லாம் கரெக்டா போடுங்க என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். இந்த க்யூட்டான ப்ரோமோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து இசையமைப்பாளர் இமான் சில குற்றச்சாட்டுகளை வைத்ததை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பற்றி ஒரு சிலர் நெகட்டிவாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இப்படியான நிலையில் தற்போது இந்த ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் இந்த ப்ரோமோக்கு கீழே சிவகார்த்திகேயனை பாராட்டி அதிகமான கமெண்ட்கள் வந்த வண்ணமாக இருக்கிறது. அதோடு அவருடைய தீவிரமான ரசிகர்களின் அன்பை அந்த ப்ரோமோவில் பார்க்க முடிகிறது. தொடர்ச்சியாக சிவகார்த்திகேயனுக்கு தங்களுடைய ஆதரவு இருப்பதாகவே பலரும் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications