குழந்தையின் முகத்தை காட்டிய சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா.. கூடவே உருக்கமான பதிவு..!
சென்னை: சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா தன்னுடைய திருமண நாளில் குழந்தையின் முகத்தை சமூக வலைத்தளத்தில் காட்டி இருக்கிறார்.
அஜய் கிருஷ்ணவிற்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் என்கிற நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர்தான் அஜய் கிருஷ்ணா. இவர் பிரபல பின்னணி பாடகர் உதித் நாராயணன் போலவே மிமிக்ரி செய்து பாடியதன் மூலமாகவே பலருடைய மணங்களில் நீங்காத இடத்தை இப்ப வரைக்கும் பிடித்துக் கொண்டிருக்கிறார். உதித் நாராயணன் பாட்டை கேட்கும் போதெல்லாம் அஜய் கிருஷ்ணா நினைவிற்கு வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த அளவிற்கு அவருடைய பாடல்களை தத்துரூபமாக பாடி ரசிகர்களின் மனதை வருடி இருக்கிறார்.
இந்த நிலையில் தன் அஜய் கிருஷ்ணா சமீபத்தில் தான் காதலித்து வந்த ஜெசி என்பவரை திருமணம் செய்திருந்தார். இவர்களுடைய திருமணம் இந்து முறைப்படி கோவிலிலும், கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சிலும் வைத்து நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்திற்கு அதிகமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து கூறினார்கள். ரசிகர்களும் வாழ்த்து கூறினார்கள். இந்த நிலையில் சமீபத்தில் அஜய் கிருஷ்ணாவின் பிறந்தநாள் அன்று அவருடைய மனைவி தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார். இதற்கு அதிகமானோர் ஆசீர்வாதங்களை கூறி வாழ்த்து கூறி வந்தனர்.

இந்த வீடியோவை பார்த்த ஜெஸி அப்போது இவருக்கு நன்றாக இருக்கிறது என்று கமெண்ட் செய்திருக்கிறார். அதற்கு நன்றி கூறிவிட்டு ஜெஸியின் புகைப்படத்தை பார்த்த அஜய் கிருஷ்ணா அவருடைய நீளமான முடி மீது காதல் ஏற்படவே இருவரும் நண்பர்களாக பழகி பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். தற்போது இவர்களின் காதலுக்கு சாட்சியாக ஆண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. இந்த செய்தியை சமீபத்தில் ஜெஸி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் அஜய் கிருஷ்ணா மற்றும் ஜெசி தம்பதி தங்களுடைய முதல் திருமண நாளில் மகனுடைய புகைப்படத்தையும் வெளியிட்டு அவருடைய பெயரையும் பகிர்ந்து இருக்கின்றனர். அந்த பதிவில் எங்களுக்கு மகிழ்ச்சியான முதலாவது ஆண்டு விழா,AJ குடும்பம் உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் மிகவும் உற்சாகமாக உணர்கிறோம். மேலும் எங்கள் சிறிய Ayaan Jaden அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் இரண்டாம் ஆண்டில் இணைந்திருக்கும் நிலையில் உங்கள் அனைவரின் அன்பும் ஆசிர்வாதமும் பணிவுடன் வேண்டுகிறோம் என்று பதிவிட்டு இருக்கிறார். தற்போது இந்த பதிவிற்கு ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications