கணவரின் பிறந்த நாளில் கர்ப்பமாக இருக்கும் செய்தியை பகிர்ந்த அஜய் கிருஷ்ணா மனைவி.. அட இத்தனை மாதமா?
சென்னை: விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பாட்டு பாடி ரசிகர்களின் மத்தியில் பிரபலமான அஜய் கிருஷ்ணாவின் மனைவி தற்போது மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு தான் இவர்களுடைய காதல் திருமணம் வெகு விமர்சனமாக நடந்தது .இந்த நிலையில் தற்போது இவர்கள் விரைவில் அம்மா அப்பா ஆகப் போகும் செய்தியை கூறி இருக்கின்றனர்.
அஜய் கிருஷ்ணாவின் பிறந்தநாளுக்கு பரிசாக அவருடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை கூறி ரசிகர்களிடம் வாழ்த்துக்களை பெற்று வருகிறார்கள்.

அம்மாவாக இருக்கும் அக்காக்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக ஒரு ஒரு பாடகராக மாறி இருக்கும் அஜய் கிருஷ்ணா வீட்டிற்கு செல்லப் பிள்ளையாக தான் இருந்திருக்கிறார். இவருக்கு மூன்று அக்காக்கள் இருக்கிறார்களாம். சமீபத்தில் தான் இவருடைய அம்மா இறந்துவிட்டாராம். அஜய் கிருஷ்ணாவிற்குள் பாட்டு திறமை இருப்பதை அவருடைய இரண்டாவது அக்கா தான் கண்டுபிடித்து இருக்கிறார். தன்னுடைய தம்பியின் திறமையை வெளியே கொண்டு வர வேண்டும் என்று ஊர் திருவிழாக்கள், பங்சன்களில் இவரை பாட்டு பாட வைத்திருக்கிறாராம்.

பிரபலமாகிய பாடல்
அஜய் கிருஷ்ணாவிற்குள் இருந்த பாட்டு திறமையை வீட்டிலிருந்தவர்கள் பல போராட்டங்களுக்கு பிறகு தான் வெளியே கொண்டு வந்திருக்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். ஆனால் அப்போது கூட இவர் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை. ஆனால் அடுத்த சீசனில் இவர் ஜூனியருக்காக சப்போர்ட் செய்ய போகும்போது இவர் ரோஜா ரோஜா பாடல் நேரத்தில் வைரலாக பரவி வந்தது. இவர் பாடகராக இருக்கும் போது இவர் ஜெஸ்ஸி என்பவரை காதலித்து உள்ளார்.

போட்டோவை பார்த்ததும் காதலா
அஜய் கண்ணான கண்ணே கலங்காதடி எனும் பாடலை பாடி instagram பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதை பார்த்து ஜெசி இந்த பாடல் நன்றாக இருக்கிறது என்று இவருக்கு பதில் அனுப்பி இருந்தாராம். அப்போது அஜய் அதற்கு தேங்க்யூ சொல்லிவிட்டு ஜெஸ்ஸியின் டிபியை பார்த்திருக்கிறார். அதில் அவருடைய நீளமான தலைமுடியை பார்த்து அஜய்க்கு ரொம்பவே பிடித்து போய்விட்டதாம். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் நண்பர்களாக தான் பழகி இருக்கிறார்கள் .பின்பு காதலர்களாக மாறி இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் வெகு விமர்சனமாக திருமணத்தை முடிந்து தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

பிறந்தநாளில் மகிழ்ச்சியான செய்தி
அஜ்யின் பிறந்த நாளான இன்று அவருக்கு வாழ்த்து கூறி அவருடைய மனைவியான ஜெஸ்ஸி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், நான் தொலைக்காட்சியில் பார்த்த சிறந்த பாடகருக்கும், சிறந்த காதலனுக்கும், சிறந்த வருங்கால கணவருக்கும், சிறந்த கணவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். நான் எடுத்த முடிவுகளிலேயே மிகச் சிறந்த முடிவு நீங்கள் தான் என்பதை நீங்கள் தொடர்ந்து எனக்கு உணர்த்துவீர்கள். ஒன்றாக சேர்ந்து சிறந்த அம்மா அப்பாவாக இருப்போம். எனது சிறந்த பாதையில் பிறந்த நாளை விட சிறந்த சந்தர்ப்பத்தில் இந்த மகிழ்ச்சியான செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதை தடுக்க முடியவில்லை. நித்தம் உன்னை நேசிக்கிறேன். உங்கள் வாழ்க்கையின் புதிய கட்டத்திற்கு மிகவும் உற்சாகமாக உள்ளது. வாழ்க்கையின் புதிய கட்டத்திற்கு நுழையும் போது அனைவரின் ஆசிர்வாதத்தையும் தேடுகிறோம் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி ஆசிர்வாதங்களை அனுப்பி விடுகிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications